(Reading time: 23 - 46 minutes)

ப்ளீஸ் பரணி அவசரபட்டு வார்த்தைய விடவேண்டாம்..நா பேசி முடிச்சப்பறம் நீங்களே முடிவு பண்ணுங்க..ராம் அண்ணா வேலைக்கு வந்த முதல் நாள் அவரை ட்ராப் பண்ண வந்திருந்தீங்க அப்போதான் உங்களை முதல் தடவை பாத்தேன்..ஏனோ மனசு நிம்மதி அடையுரமாறி இருந்தது..ஆனா காதல்னுலா நினைக்கல..ஆனா அடுத்தநாளும் அதே நேரத்துக்கு உங்களை என் மனம் எதிர்பார்த்தது..இப்படியே தொடர ராம் அண்ணா என்கூட க்ளோஸ் ஆனப்பறம் அடிக்கடி உங்களை பத்தி சொல்லுவாரு மனசு சந்தோஷமாயிருக்கும்..ஒருகட்டத்துல என்னையே அறியாம நா உங்ககூட வாழ ஆரம்பிச்சுட்டேன்..நீங்க சென்னை கிளம்புறதா சொன்னப்போ எனக்கு ஏற்பட்ட வலி வார்த்தைகளால சொல்ல முடியாது..என் உணர்வை உள்ளையும் வச்சுக்க முடியாம யார்ட்டையும் சொல்லவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்..இப்போ நா இங்க வந்ததுக்கு காரணமே உங்களை பாக்கனும்னு தான்..எனக்கு திரும்பவும் அந்த வீட்டுக்கு போக பிடிக்கல,அப்படி நா போறதாயிருந்தா உங்க மனைவியா மட்டும் தான் போவேன்..இல்லனா இப்போவே நா எங்கயாவது போய்ட்றேன் என்று கூறி அவன் முகம் பார்த்தாள்..

ஏதோ புயல் அடித்து ஓய்ந்தார் போலிருந்தது பரணிக்கு..என்ன இவ ப்ராக்ஷன் ஆப் செகண்ட்ல இவ்ளோ பெரிய ப்ளாஷ்பேக் சொல்றா..டேய் பரணி என்னடா நடக்குது,இந்த மகிக்கு ஏதோ தெரிஞ்சுருக்கு அதான் கழட்டிவிட்டு போய்ருக்கா..இதெல்லாம் மகிக்கு தெரியுமா??

மீண்டும் சிரித்தவள்அண்ணி செம ஸ்மார்ட் ப்ர்ஸ்ட் டைம் நா உங்களை பாத்ததுலயே கன்பார்ம் பண்ணிட்டாங்க போல..இன்னைக்கு காலைல உங்க போட்டோவ மொபைல்ல வச்சுருந்தத பாத்துட்டு என்ன விஷயம்னு கேட்டாங்க அப்போதான் சொன்னேன்,மத்தபடி முட்காடு ப்ளான்லா தற்செயலா நடைந்ததுதான்..

ஆகா எல்லாருமே ஒரு முடிவோடதான்டா இருக்காங்க பரணி..இல்ல சாக்ட்சி இதெல்லாம் ஒத்து வராது..உன் லெவல் வேற நானே வேற இதை இப்படியே விட்ரு,அதான் எல்லாருக்கும் நல்லது..

நீங்க எதை நினைச்சு இப்படி சொல்றீங்கனு புரியுது பரணி..கிட்டதட்ட எனக்கும் உங்க நிலைமைதான்..நீங்க ஹோம்ல வளர்ந்தீங்க நா அமர்நாத் பவன்ல வளர்ந்தேன் அவ்ளோதான் வித்யாசம்..தாத்தா ஒருத்தர்தான் என்மேல அக்கறையாய் இருக்குறவரு..அவருக்காகதான் நா அங்க இருக்கேன் மத்தபடி அந்த சொத்துக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது..கட்டின புடவையோட வர ஒரு ஏழையை மனைவியாய் ஏத்துப்பீங்களானு யோசிச்சு சொல்லுங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

வாயடைத்துப் போயிருந்தான் பரணி என்ன மாதிரியான காதல் இது..நா யார் இவளுக்கு எனக்காக ஒட்டுமொத்த சாம்ப்ராஜியத்தையே தூக்கி போடுகிறேன் என்கிறாள்..என்ன சொல்வது என தனக்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான்..

அங்கே ராமோ ஆவென வாய்பிழந்து நின்றிருந்தான்..ஹேய் என்னடி நேத்துதான் பாத்த இன்னைக்கு எனக்கே தெரியாத இவ்ளோ நியூஸ் சொல்ற..அம்மாகிட்ட நா இங்க போறோம்னு சொன்னப்போ நீ வாய மூடிட்டு நிக்கும் போதே டவுட் ஆனேன்டீ என்னடா புலி பதுங்குதேன்னு..என்று முறைக்க நினைத்தவன் முடியாமல் சிரித்தான்..குட்டிமா சாக்ட்சி நல்ல பொண்ணுதான்..பரணி மட்டும் ஓ.கே சொல்லிட்டான்னா அவன் லைப் நல்லாயிருக்கும்டா..

ம்ம்ம் ஆமாங்க..இன்னைக்கு எப்படியாவது அவங்களை பேச வைக்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்..கரெக்ட்டா நீங்களே இப்படி ஒரு ப்ளான்னை போட்டுட்டீங்க..என் தங்கம் என்று திருஷ்டி கழித்தாள்..இருவருமாக சேர்ந்து சிரித்தனர்..

பரணி சாக்ட்சியிடம்,எனக்கு கொஞ்சம் டைம் வேணும் தப்பா எடுத்துக்காத..உறவுகளே இல்லாம வளர்ந்துட்டேன்..இப்போ மனைவிங்கிறது ரொம்ப முக்கியமான உறவு அதை ஏத்துக்கிறதுக்கு நா தயாரா இருக்கேனானு எனக்கே தெரில..நாளைக்கு பதில் சொல்லவா??

ம்ம்ம் என்று புன்னகையோடு தலையசைத்தாள்..

மகியும் ராமும் காரில் ஏற மகியை பார்த்து முறைத்தான் பரணி..டேய் அண்ணா எனக்கு தெரியாம ஒரு சின்ன பொண்ணுக்கிட்ட காதல் புறா அனுப்பிருக்க,ம்ம்ம் உனக்குள்ளையும் ஏதோ இருந்துருக்கு பாரேன்..

மகிம்மா எதாவது சொல்லிட போறேன் உன் ஆளோட மொக்க போடுற வேலைய மட்டும் பாரு..டேய் ராம் சொல்லி வை..

ராமும் சாக்ட்சியும் சிரித்தவாறே அவர்களின் சண்டையை கவனித்து கொண்டிருந்தனர்..

அண்ணா இப்போ பாத்தா நீ கூட அழகாதான் இருக்கியோநு தோனுது என்ன இருந்தாலும் என் ஆத்துகாரர் அளவு வர முடியாது அவரேஜ் மார்க் போடலாம்நு தோணுது நீ என்ன சொல்ற..

நா இப்படியே இறங்கி ஓடிறேன்னு சொல்றேன்..

சரி சரி ரொம்ப சீன் போடாதீங்க..உங்க லவ் மூட்ஐ நா டிஸ்டர்ப் பண்ணல யு கன்டினியூ என்று கூறி காரில் பாடலை உயிர்பித்தாள்..

நேற்று இல்லாத மாற்றம் என்னது 
காற்று என் காதில் எதோ சொன்னது
இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா 
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இளமை பொங்கி விட்டதா 
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

கடவுள் இல்லை என்றேன் 
தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் 
ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் 
உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை 
அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை 
கடலில் சேரும் வரை 
காதல் சுவை ஒன்று தானே 
காற்று வீசும் வரை"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.