(Reading time: 23 - 46 minutes)

துக்குள்ள எங்களோட ரெண்டு குழந்தைகள் அஞ்சனாவும் அதர்வாவும் வளர வளர என் தொழிலும் பன்மடங்கா பெருகிகிட்டே வந்தது,ஆரம்ப காலத்துல மீரா அடிக்கடி சொல்லுவா நம்ம நல்ல நிலைமைக்கு வந்தப்பறம் நம்மாலான உதவிய மத்தவங்களுக்கு செய்யனும்நு..அதே போல இலவச மருத்துவமனை,ஸ்கூல்நு பக்கத்துல இருக்குற கிராமங்களுக்கு தேவையானதை செஞ்சு குடுக்க ஆரம்பிச்சோம்..அப்போ ஆரம்பிச்சது பிரச்சனை..அது எதுவுமே விநாயக்கு பிடிக்கல..வந்து சண்டை போட்டான்,இதை உருவாக்குறதுக்கு நானும் தான் கடுமையா உழைச்சேன் அதெப்படி என் சம்மதம் இல்லாம இப்படி இலவசமா நீங்க எல்லாம் பண்ணிக் குடுக்கலாம்நு கத்தினான்..

மீராவுக்கு கோபம் தலைக்கேற உனக்கென்ன குழந்தையா குடும்பமா பணத்தை வச்சு என்னடா பண்ணபோற நீ குடிச்சு அழிக்குறதுக்காகலா நாங்க பணம் தரனும்னு அவசியம் இல்லை ஆனத பாத்துக்கோநு சொல்லிட்டா..என் மீரா அவ்வளவு கோபப்பட்டு நா பாத்ததேயில்லை..அடுத்த ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னான்..ஏதோ ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணுநு மத்தவங்க மூலமாதான் தெரியவந்தது..கல்யாணத்துக்கு கூப்பிடவேயில்லை..மீராவுக்கு அதுவே பயங்கர வருத்தம்..என்னதான் தம்பினாலும் அவனை அவ மூத்த பிள்ளையாதான் நினைச்சா..அவள்ட்ட கூட சொல்லாம போய்ட்டானேனு ரொம்ப வருத்தம்..ஆனா என்கிட்ட இருந்து பணம் வாங்குறதுக்காக மட்டும்தான் இந்த திடீர் கல்யாணம்..கொஞ்ச நாள்லயே பிசினஸ் பண்ண போறேன் பணம் வேணும்நு வந்தான்..என்ன பிசினஸ்நு ஒண்ணுமே சொல்லல இருந்தாலும் அவனால மீரா அடிக்கடி டென்ஷன் ஆறது எனக்கு பிடிக்கல அதனால மறுபேச்சு பேசாம கேட்ட பணத்தை குடுத்துவிட்டேன்..ஆறே மாசத்துல பிசினஸ்ல லாஸ் ஆய்டுச்சுநு சொன்னான்..இந்த முறை மீராவால பொறுத்துக்க முடில நா இருக்குறவரஉங்க மாமாவ ஒரு ரூபா கூட குடுக்கவிடமாட்டேன்..நீ எனக்கு தம்பியேயில்லை இனி இந்த வீட்டுக்கு வராதநு ஆவேசமா பேசி கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிட்டா..அதுக்கப்பறம் ஒரு ரெண்டு வருஷம் அவன் எங்க போனான் என்ன ஆனான்னு எதுவுமே தெரில…என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி சாக்ட்சி பொறந்திருந்தா ஒரு நாள் ஒரு வேண்டுதல முடிக்குறதுக்காக கோவிலுக்கு போனாங்க மீரா,அஞ்சனா அவ கணவர் சாக்ட்சி எனக்கு அன்னைக்கு முக்கியமான வேலையிருந்ததால என்னால போக முடில..

சிறிது அமைதி காத்தவர்..போனதுல திரும்பி வந்தது சின்ன குழந்தையான சாக்ட்சி மட்டும் தான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

சார்…

ஆமாப்பா வரும்போது ஒரு ஆக்ஸிடன்ட்ல எல்லாரும் இறந்துட்டாங்க கடவுள் அருளால சாக்ட்சிக்கு ஒண்ணும் ஆகல..வாழ்க்கைய அப்போவே நா வெறுத்துட்டேன்ப்பா..நா வாழ்றதுக்கு காரணமாயிருந்தது என் பையனும் சாக்ட்சியும் மட்டும்தான்,விஷயம் கேள்விபட்டு விநாயக் வந்தான் கால்ல விழுந்து கதறி அழுதான்,பண்ணின தப்ப உணர்ந்துட்டேன்..அக்கா முகத்துல முழிக்கவே வெட்கமாயிருந்தது அதான் வரவேயில்லை என் குடும்பம் ரொம்ப கஷ்டபடுது என்னை உங்களோட சேர்த்துக்கோங்கநு கெஞ்சினான்..சரின்னு கூட சேர்த்தேன்..பழைய படி நல்லா தான் வேலை பாத்தான்..இப்படியே வருஷங்கள் ஓட அதர்வா படிப்ப முடிச்சுட்டு பிஸினஸ்குள்ள வந்த நேரம் அவனுக்கு தொழிலை கத்து குடுத்துட்டு நா ஒதுங்கிக்க நினைச்சேன் அதுப்படி ஷேர்ஸ் பிரிச்சேன்..அதிகமா இல்லைநாலும் விநாயக்கும் சில ஷேர்ஸ் பிரிச்சு குடுத்துட்டேன்..ஆனாலும் ஓரளவு எல்லாமே என் கன்ட்ரோல்லதான் இருந்தது..ஒரு லெவல்ல அதர்வா தனியா சமாளிச்சுப்பான்னு நம்பிக்கை வந்தப்பறம் நா கம்ளீட்டா விலகிட்டேன் ரெண்டு வருஷமாச்சு..

ஆனா கொஞ்சநாளா தான் பல தப்பான விஷயங்கள் என் காதுக்கு வருது..அதுக்கு விநாயக் தான் காரணமா இருப்பானோனு ஒரு உறுத்தலும் இருக்கு ஏன்னா அதர்வா அவ்வளவு தைரியமா எந்த காரியத்திலயும் இறங்க மாட்டான்..அதே நேரத்துல விநாயக்கு எல்லா இல்லீகல் வேலையும் தெரியும்,இதெல்லாம் மனசுல வச்சுதான் உன்ன சில டீடெய்ல் கலெக்ட் பண்ணிதர சொன்னேன்..என்று அவன் முகம் நோக்கினார்..

சார் என்னை நம்பி இவ்ளோ சொல்றீங்க அந்த நம்பிக்கைக்கு நா தகுதியுள்ளவனானு எனக்கு தெரில..ஆனா எந்த விதத்துலயும் உங்க நம்பிக்கைக்கு துரோகம் பண்ணமாட்டேன் சார்..

லேசாக சிரித்தவர் உன்ன அப்படி நினைச்சுருந்தா நா எதையுமே சொல்லிருக்க மாட்டேனே ராம்..நா ஏற்கனவே சொன்ன மாறி உன்ன பாத்தவுடனே எனக்கு பிடிச்சுருச்சு அதுதான் நா இவ்ளோ பேசினதுக்கு காரணம் இப்போ மனசே லேசா ஆன மாறியிருக்கு..சரி ராம் நீ உன் ரூம்க்கு போ..நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்..

தன்னறைக்கு வந்தவனுக்கோ மனம் குழம்பியிருந்தது..இப்படிபட்ட நல்லவர ஏமாத்துரோமே பேசாம உண்மையை சொல்லிடலாமா..என்ன இவ்ளோ நம்புறாரே சரி நம்ம கலெக்ட் பண்ற டீடெய்ல்ஸை அவர்ட்ட குடுத்துருவோம் இப்போதைக்கு அதை மட்டும் தான் பண்ண முடியும்..கேஸ் முடிஞ்சப்பறம் கண்டிப்பா மன்னிப்பு கேட்கனும் என தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டான்..

மாலை மங்கிய நேரத்தில் வேலை முடிந்து அவன் கிளம்ப எத்தனிக்க மாடியில் அவனிருக்கும் இடத்தில் இருந்து இயற்கை ரசிப்பதற்கு குளுமையாக இருக்க தூணின் மேல் சாய்ந்தவாறு அப்படியே நின்றிருந்தான்..கீழே கார் வரும் ஓசை கேட்க முன்னெச்சரிக்கையாய் இன்னும் மறைந்து நின்றான்..காரிலிருந்து வாட்டசாட்டமாக இருவர் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தவாறே பின்னாலிருந்த கெஸ்ட் கவுஸை நோக்கி நடந்தனர்..அவர்களை தொடர்வதற்காக வேகமாக கீழேயிறங்கி அவர்களறியா வண்ணம் பின் தொடர்ந்தான்..கதவை திறந்து உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டனர்..அந்த பில்டிங்கை கண்களால் அளந்தவன் அங்கிருந்த ஜன்னல் அருகில் சென்றான்..பேச்சு சத்தம் கேட்க ஜன்னலுக்கு மேலேயிருந்த இடைவெளி வழியே எட்டிபார்க்க ஒரு பெண் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயக்கத்தில் கிடந்தாள்..எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தவனுக்கு சட்டென விஷயம் புரிய ஒரு நிமிடம் உறைந்துதான் போனான்..ஏனெனில் உள்ளிருந்தது இந்த வழக்கின் ஆரம்பபுள்ளி பாயல்….

ஹாய் ப்ரெண்ட்ஸ்..இந்த வாரம் மகி ராம் ரொமான்ஸ் கம்மி தான்..FB அப்டேட் நல்லாயிருக்கும்நு நினைக்கிறேன்..தவறாமல் அதன் நிறை குறைகளை பதிவு பண்ணுங்க..:)

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.