(Reading time: 23 - 46 minutes)

….நீங்க என்ன தாத்தாநு கூப்பிடுறீங்க??

அவரு என்அம்மாவோட அப்பா..என் பேரண்ட்ஸ் சின்ன வயசுலயே தவறிட்டாங்க நா வளர்ந்தது எல்லாமே இங்கதான்,

ஐ அம் சாரி..என் ப்ரெண்ட் கூட உங்களமாறிதான் சோ உங்க நிலைமை எனக்கு புரியுது..

யாரு உங்களை இப்போ ட்ராப் பண்ணிட்டு போனாறே அவரா??

ம்ம் ஆமா அவன் பேரு பரணி நாங்க ஒரே காலேஜ் தான்..நீங்க பாத்தீங்களா??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

ஆங் ஆமா மாடில நின்னிட்டு இருந்தேன் அப்போ பாத்தேன்..அதற்குள் அவளுக்கு அழைப்பு வரவே ஓ.கே ராம் வில் கேட்ச் யு லேட்டர் என்றபடி சென்றுவிட்டாள்..

அறையில் அமர்ந்தவனுக்கோ பல விஷயங்கள் தெளிவாகின..அதர்வா வெளி ஆட்கள் யாரும் உள்ளே வருவதை விரும்பவில்லை..அது மட்டுமல்லாது வீட்டில் இவனது நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டது..சாக்ட்சி பேசுவதிலேயே தெரிகிறது மிகவும் அன்பானவனாகவும் பொறுப்பானவனாகவும் தன்னை காட்டி கொள்கிறான் என்று..ம்ம் எப்படியும் இன்னைக்கு பாக்கதான போறோம்,வெய்ட் பண்ணுவோம்…அதுவும் போக சாக்ட்சியிடம் இதுபோன்று இயல்பாகவே பழக வேண்டும் அப்போதான் நமக்கு தேவையான விஷயம் ஏதாவது கிடைக்கும்..

அவனது வாக்கி டாக்கியில் அமர்நாத் அவனை அழைத்தார்..நேராக அவரது அறைக்குச் சென்றான்..அவனை தன் எதிரில் அமரச் சொன்னவர்,உனக்கு இங்க என்ன வேலைநு சொன்னாங்களா???

ம்ம் சொன்னாங்க சார் என்று சாக்ட்சி கூறியவற்றை கூறினான்..

அதை பொறுமையாக கேட்டவர் ஆனா இதவிட முக்கியமா ஒரு வேலையிருக்கு சொல்லப் போனா அதான் உனக்கு வேலையே மத்ததெல்லாம் இங்க இருக்குறவங்க கண்துடைப்புக்கு தான்..

சார்…

கொஞ்சம் கஷ்டம் தான் பட் உன்னால முடியும்நு தோணுது..

என்னனு சொல்லுங்க சார்..

என்னோட எஸ்.எம் குரூப்ல என்ன நடக்குதுநு எனக்கு தெரியனும்..முக்கியமா ஹாஸ்பிட்டல்ல..

ஒரு நொடி தான் கேட்பது சரிதானா என்று ராமிற்கே குழப்பம் வந்துவிட்டது..சீரியஸா பேசுறாரா இல்ல போட்டு வாங்க ட்ரை பண்றாரா புரியலையே என தனக்குள் வாதிட்டுக் கொண்டிருக்க..

என்ன ராம் சொந்த ஹாஸ்பிட்டல்கே ஸ்பை வைக்குறேனேனு பாக்குறியா??

ச்சச்ச அப்டிலாம் இல்ல சார்..எல்லாத்தையுமே உங்க பையன்தான் பாத்துகிறதா கேள்விபட்டேன் அவர்ட்ட நேராவே எதுவாயிருந்தாலும் கேட்கலாமே..சாரி தப்பா எடுத்துகாதீங்க சார்..

அவர் முகத்தில் லேசான புன்னகை..அது கரெக்ட்தான் ஆனா..என்று தயங்கியவர்,உன்கிட்ட சொல்ல என்னப்பா..என் பையன் நல்ல மாதிரிதான்..நிர்வாகத்தையும் நல்லாதான் பாத்துக்குறான் என்கிட்ட அப்பப்போ என்ன நடக்குதும்நு டீடெய்ல்டா சொல்லிடுவான் ஆனா அவன் சொல்லாத பல விஷயங்கள் என்னோட நம்பகத்தன்மையான வெளிவட்டார நண்பர்கள்கிட்ட இருந்து வருது..இத்தனை வருஷம் பாடுபட்டு ஏற்படுத்தின சாம்ராஜ்யம் இல்லையா அதுல எத்தனையோ குடும்பங்களின் வாழ்க்கையும் அடங்கியிருக்கு அதன் பேர் கெட்டு போய்விடகூடாதுநு நெனைக்குற பல நல்ல உள்ளங்கள்தான் அந்த தகவல்களை எனக்கு தந்தது,ஆனா ஆதாரம் இல்லாம அதர்வாகிட்ட எதையும் கேட்க எனக்கு விருப்பமில்லை..அதனால தான் எனக்கு ஒரு கேர்டேக்கர் வேணும்னு நா கேட்டதே..ஆனா அத அவன் கடுமையா எதிர்த்தான்..நீ இங்க வர்றதுக்குகூட அவன் ஊர்ல இல்லாததுதான் காரணம் இல்லனா உன்னையும் எதாவது காரணம் சொல்லி தட்டி கழிச்சுருப்பான்..என்னடா வந்தன்னைக்கே இவ்ளோ பேசுறாரேநு நெனைக்காத உன்ன பாத்தவுடனே எனக்கு பிடிச்சுருச்சு..அதனாலதான் அதர்வா வர்ற வர கூட வெய்ட் பண்ணாம உன்ன அப்பாய்ண்மென்ட் பண்ணிட்டேன் என்றார்..

தேங்க்ஸ் சார் என்ன நம்பி இவ்ளோ விஷயங்களை ஷேர் பண்ணிகிட்டதுக்கு..என்னால முடிஞ்சவர நீங்க கேக்குற டீடெய்ல்லாம் நா கேதர் பண்ணித் தர்றேன்..மனதிலோ குழம்பிக் கிடந்தான்..நாம எந்த வேலைக்கு வந்தமோ அதயே இவரும் செய்ய சொல்றாரு அவர் பேசுறத பாத்தா பொய் சொல்றமாறி தெரில என்ன பண்றது..என்று அவன் கற்பனை குதிரை ஓடிக் கொண்டிருக்கும் போதே அப்பா என கணீரென்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தான் அவன் அதர்வா..

பின் முப்பதுகளில் இருக்கும் அவன் வயது அந்த சாம்ராஜியத்தின் ஒரே வாரிசு என்ற மிடுக்கு அவன் நடை உடை பாவனை அனைத்திலும் வெளிப்பட்டது..கண்களில் அத்தனை கூர்மை..யாரும் என்னை ஏமாற்றுவது கடினம் என்பது போன்ற பார்வை..ராமை ஏறிட்டவன் நீ தான் ராமா வந்தன்னைக்கே இங்க என்ன பண்ற உனக்கு ரூம் அலார்ட் பண்ணலையா இன்னும்??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.