(Reading time: 23 - 46 minutes)

ரூம்ல உக்காந்து இருக்குறதுக்காக நா இங்க வரலை..அதுக்காக நீங்க சம்பளமும் தரலை..என் வேலை சார்அ பாத்துக்கிறதுதான் சோ நா இங்க இருக்கிறது தப்பில்லையே என்றான் நிதானமாய் அதே நேரம் குரலில் ஒரு கண்டணம் மரியாதை குடுத்தால் அது திரும்பி வரும் என்பது போன்ற பாவனை..

நேரடியாகவே ராமை முறைத்தவன்..பாத்தீங்களாப்பா இதுக்குதான் யாரு என்னனு விசாரிச்சு வேலைக்கு வைக்கனும்ங்கிறது..யார்ட்ட எப்படி பேசனும்னு கூட தெரில எவ்ளோ திமிர் பாருங்க..

விடு அதர்வா ராம் சொன்னதும் கரெக்ட் தான சும்மா ரூம்ல உக்காரவா நாம சம்பளம் குடுக்குறோம் சரி நீ என்ன விஷயமாப்பா வந்த??

ம்ம்ம் சில பேப்பர்ஸ் ஸ்சைன் வாங்கனும்ப்பா உங்கள்ட்ட அப்படியே மிஸ்டர் ராமையும் பாத்துடலாம்நு வந்தேன்..

பைலை தந்தையிடம் கொடுத்துவிட்டு ராமை பற்றிய விவரங்களை கேட்டறிந்தான்..ஏதோ திருப்தியாய் இருந்தாலும் ஏனோ அவன் மீது சந்தேக படவே தோன்றியது..ஏன்பா நா தான் ஆள் செலக்ட் பண்ணித் தர்றேன்னு சொல்லிருந்தேன்ல அதுக்குள்ள என்ன அவசரம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

இல்லப்பா உனக்கே ஆயிரம் வேலையிருக்கு இதுல இது வேறயா அதான் தற்செயலா இவரு கால் பண்ணாரு சரின்னு வர சொல்லிட்டேன்..

அறைகுறையாய் சமாதனமடைந்தவன் சரி சரி அப்பா என்ன கேக்குறாங்களோ ஒழுங்கா பண்ணி குடுங்க என்று விடுவிடுவென வெளியே சென்றுவிட்டான்..

உங்கப்பா குடுத்துருக்க வேலையே உன்ன வேவு பாக்குறதுதான்டா அத ஒழுங்கா பாருநு வேற சொல்லிட்டு போற கண்டிப்பா பாக்குறேன் என்று தனக்குள் சிரித்துக் கொண்டான்..

ராமிற்கு பரணியிடமிருந்து அழைப்பு வர வெளியே வந்தவனுக்கு அதர்வா யாருடனோ போனில் பேசுவது கேட்டது..

நா என்ன மாமா பண்றது நா வர்றதுக்குள்ள அப்பாவே செலெக்ட் பண்ணிட்டாரு..

…….........

ஆள் ரொம்ப கட் அண்ட் ரைட் பேர்வழியா தெரியுரான் இல்லனா அப்பாவே வேலைக்கு வச்சுருப்பாரா??

………………….

ஹம்ம்ம் அப்பாவுக்கு ஹெல்ப்க்கு மட்டும்தான் சோ பாத்துக்கலாம்..சரி மாமா நா அப்பறமா கூப்டுறேன்..

யாராயிருக்கும் ஒரு வேளை அந்த விநாயக்கா இருக்குமோ??இவ்ளோ சீக்கிரம் நடந்ததை எல்லாத்தையும் அப்டேட் பண்றான்னா அவ்ளோ க்ளோஸ்ஸா ரெண்டு பேரும்??சரி இப்போதான வந்துருக்கோம் கண்டுபிடிப்போம்..

வ்வாறாக நாட்கள் நகர ராம் அங்கு வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது..அமர்நாத்தின் அலுவலக வேலை மட்டுமல்லாது அவரையும் உண்மையான அக்கறையோடு பார்த்து கொண்டான்..அதற்கு முக்கிய காரணம் அவர் அவனிடம் பழகிய விதம்..அத்தனை பெரிய கோடீஸ்வரர் அவனிடம் சாதாரணமாக பழகியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..அவர் அறையில் அவருக்கு வந்த மெயிலை படித்துக் காட்டிக் கொண்டிருந்தான்,அதில் விநாயக் பற்றி குறிப்பிட்டுருக்க இதுதான் சமயம் என்று அவரிடம் யார் சார் இந்த விநாயக் அடிக்கடி அவரு பேரு அடிபடுதே..அவர் பேர்ல சம் ஷேர்ஸ் கூட இருக்கே..

ஒரு நீண்ட மூச்செடுத்தவர்,அவன் என் மனைவியோட தம்பி ராம்..என் மனைவிக்கு பெத்தவங்க இல்ல சொந்தம்நு சொல்லிக்க இவன் மட்டும்தான் எங்களோடது காதல் திருமணம்..அப்போ நா இவ்ளோ பெரிய பணக்காரன்லா கிடையாது வாழ்க்கைல முன்னேற துடிச்சுட்டு இருந்த ஒரு இளைஞன் அவ்ளோதான்,ஆனா அப்போவே என்ன நம்பி வந்தவ என் மீரா..அந்தகால நினைவுகளில் கரைந்திருந்தார்..எங்க கல்யாணத்திற்கு அப்பறம் தான் கடன் வாங்கி ஒரு சின்னசூப்பர்மார்க்கெட் ஆரம்பிச்சேன்..கடவுள் அருளால நல்லபடியா போச்சு..நாங்க மூணு பேருமே கடுமையா உழைச்சோம்..அப்போ விநாயக் நல்லவனாதான் இருந்தான் அக்கா நா அவ்ளோ உயிர் அவனுக்கு..ஆனா காலங்கள் மாறும் போது மனித குணங்களும் மாறதான செய்யும் படிபடியா உயர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்பறம் அவனோட செயல்கள்ல நிறைய மாற்றம் வந்துடுச்சு..கை நிறைய பணம் கூடவே கெட்ட சகவாசம்நு ஆளே மாறிட்டான்..சரி சின்ன பையன்தான மாறிடுவான்னு விட்டுட்டோம்..ஆனா நாளாக ஆக அவன் மீராவயே தூக்கி எறிஞ்சு பேச ஆரம்பிச்சுட்டான்..சரி கல்யாணம் பண்ணிணா சரி ஆய்டுவான்னு பாத்தா அதுதான் நாங்க பண்ணிண மிக பெரிய தப்போநு தோணிடுச்சு..அந்த பொண்ணு ஏழை குடும்பத்துல இருந்து வந்தவதான் ஆனா ரொம்ப தங்கமானவ,.ஒருநாள் இவன் அளவுக்கு அதிகமா குடிச்சுட்டு வந்துருக்கான் ஏன் இப்படி பண்றீங்கநு அவ கேட்க அப்படியே அது பெரிய வாக்குவாதத்துல போய் முடிய இவன் என்னலா பேசினானோ தெரில மனசு தாங்காம பாய்ஸன் சாப்ட்டு இறந்துட்டா..அவனை தனிக் குடித்தனம் வச்சு அந்த பொண்ண அநியாயமா கொண்ணுட்டோமேநு மீரா மனசளவுல ரொம்ப உடைஞ்சுட்டா..இது அத்தனையும் நடந்தது கல்யாணம் ஆன மூணு மாசத்துலயே..ஆனா அதுக்காக அவன் துளி கூட வருத்தப்பட்டதாவே தெரில..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.