35. நினைத்தாலே இனிக்கும்... - புவனேஸ்வரி
குயிலே கவிக்குயிலே
யார் வரவை தேடுகிறாய் ?
மனதினில் ஆசை வைத்த மன்னன் வந்தானா ?
குயிலேகவிக்குயிலே யார் வரவை காணுகிறாய்,
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா?
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா?..
ஞானப்ரகாஷ் காரை லாவகமாய் ஓட்டிக்கொண்டு வர, நந்திதா அந்த பாடலுடன் இணைந்து முணுமுணுத்து கொண்டிருந்தாள்..அவள் முகத்தில் பிரதிபலித்த சந்தோஷம் அவர் மனதில் யோசனையாய் மாறியது.. தன்னால் இயன்ற அளவு காரை ஓட்டி கொண்டே பேச்சை தொடங்கினார் அவர்..
“நந்திதா”
“சொல்லுங்க மாமா”
“ உங்கிட்ட ஒன்னு கேட்கனும்மா..ஒரு விஷயம் அப்படியேசொல்லனும்மா”
“சொல்லுங்க மாமா” என்றாள் நந்து தீவிரமான முகபாவத்துடன்..சற்றுமுன் நெஞ்சத்தில் கரைப்புரண்ட சந்தோஷமெல்லாம் லேசாய் வடிவது போல இருந்தது அவளுக்கு.. தன்னை அவர்சாதரணமாகத்தான் கோவிலுக்கு அழைத்து செல்கிறார் என்று நினைத்திருந்தாள் அவள்.. இப்போது ஏதோபேச வேண்டும் என்று அவர் கூறியதும் அவள்மனதில் அச்சம் பரவியது..
எது நடந்தாலும் சரி இறைவன் விட்ட வழி என்று நினைத்து கொண்டவள், இதழில் புன்னகையை நிறுத்தி அவரைப்பார்த்தார்..
“ சொல்லுங்க மாமா”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...
படிக்க தவறாதீர்கள்...
“ சந்துரு உங்கிட்ட கோபமா பேசுறதை எல்லாம் எதுக்கு சகிச்சுக்குற நீ?” என்றார் அவர்..அவர் ஏதோ தெலுங்கு பாஷையில் பேசியது போல, “பே” என்று முழித்தாள் அவள். அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவும், அவள் முகத்தை பார்த்தார் அவர்..
“ என்ன மாமா ?புரியல “
“ நந்து, எனக்கு உன்னபத்தி எல்லாமே தெரியும்ன்னு இல்லை.. ஆனா அதே நேரம் அடிப்படையில் நீ எப்படி பட்ட பொண்ணுன்னு எனக்கு தெரியும்.. நீ கொஞ்சம் அமைதியான பொண்ணா இருந்தாலும் கூட நியாயவாதி..உனக்கான மரியாதையை அதட்டாமல் அலட்டிக்காமல் வாங்கிக்க தெரியும் உனக்கு ..! நீ உன் ப்ரண்ட்ஸ் கிட்ட பேசும்போது கூட இதை நான் கவனிச்சு இருக்கேன்”
“ ம்ம்ம்”
“ இதை கவனிச்ச நான் என் பையனுக்கு உன்னை பிடிச்சிருக்கு என்பதையும் கவனிக்காமல் இருந்துருக்க மாட்டேன்னு உனக்கு இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன்” என்றதும் அவரை ஆச்சர்யமாய் பார்த்தாள் நந்திதா..
“ யெஸ்..பிரபுவுக்கு உன்னை பிடிக்கும்ன்னு எனக்கு எப்பவோ தெரியும் ..இதை சரின்னோ தப்புன்னோ சொல்லறதுக்கு முன்னாடி அவனே அவனுடைய மனச சொல்லனும்னு எதிர்பார்த்தேன்..”
“…”
“ஆனா,அவனும் அவன் அம்மாவும் எங்கிட்ட எதையுமே சொல்லல ..”
“ உங்க்கிட்ட எதையும் மறைக்கனும்ன்னு நினைச்சிருக்க மாட்டாங்க மாமா.. இப்போவே இதைபத்தி பேச வேணாம்ன்னு அத்தை நினைச்சா ..அதுக்கு முதல் காரணம் நான் ..! நான் யாரோட பொண்ணுன்னு தெரிஞ்சா நீங்க கோபப்படுவிங்கன்னு” என்று ஆரம்பித்து தயங்கி நிறுத்த,அதை புரிந்து கொண்டவராய் தலை ஆட்டி ஆமோதித்தார் அவர்..
“ இரண்டாவது காரணமும் நாந்தான் !!”
“??”
“ ஒருவேளை நீங்க மனசு மாறி எங்களை ஏற்றுக்கொண்டாலும் அது என்னோட படிப்புக்கு தடையா இருக்ககூடாதுன்னு அத்தை நினைச்சாங்க..”
“ம்ம்ம் , சரி நான் எனக்கு தோன்றதை சொல்லிடுறேன்.. என் இடத்துல நீ இருந்து பாரு நந்திதா.. சந்துரு எப்பவுமே அம்மா பையன் தான் .. என்னை புரிஞ்சுக்க எனக்கு ஒரு மகள் இருந்திருக்கலாமோன்னு அப்பப்போ தோன்றும்” என்றார் அவர் கண்சிமிட்டி.. சற்றுமுன் சந்தோஷமாய் இருந்தவள், லேசாய் முகம் வாடிப் போகவும் அவளை இயல்பாக்கிடவே அப்படி பேச்சில் இருந்த இறுக்கத்தை தளர்த்தினார் அவர்.
“ எனக்கு ஒரு பொண்ணு இருந்தால் அவ என் மனசை புரிஞ்சு இருப்பாளோ ? நீயாச்சும் என் மனசை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறியா?
“ஹ்ம்ம்ம்கண்டிப்பா மாமா எதுவா இருந்தாலும் சொல்லுங்க” ..அவள் அனுமதி தந்ததும் பெருமூச்சோடு மனதில் தோன்றியதை கொட்டினார் அவர்..
“ என் உலகம் ரொம்ப சின்னது.. வளரும்போதே அம்மாஅப்பாவை இழந்துட்டேன்.. என் லைஃப்ல குடும்பம் உறவு இது எல்லாமே நளினி மூலமாகத்தான் எனக்கு கிடைச்சது..” இதை கூறும்போதே அவரின் குரலும் நெகிழ்ந்திருந்தது.. நந்துவும் முறுவலுடன் அவர் பேச்சை கேட்டாள்..