(Reading time: 13 - 26 minutes)

ளினி,அவ அப்பா, பாஸ்கரன் எல்லாமே எனக்கு உலகமாய் மாறி போனாங்க..  அஃப் கோர்ஸ் ,லைஃப்ல எதுவுமே 100% சரியாய் ஒருதருக்கு அமையாது.. எதாச்சும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும்.. அப்படி என் உலகத்தில இருந்த ஒரே நெருடல்,உன் பெரிய அத்தை.. இறந்தவங்களை பற்றி இனி பேசி ஒன்னும் ஆகறது இல்ல.. எனக்கு நிறைய சந்தோஷம் தந்த இதே ஊரில் எனக்கு துக்கமும் நடந்தது.. உன் அப்பா, எனக்கு மச்சான் மட்டும் இல்ல,நல்ல நண்பனும்தான்.. அன்னைக்கு ஒரு ப்ரச்சனைன்னு வந்தப்போ என்னை புரிஞ்சுக்காம அவன் கோபப்பட்டது எனக்குரொம்ப வருத்தம்..”

“..”

“அந்த வருத்ததில் வெகு தூரம் வந்துட்டோம்… நளினி சந்துரு,அப்பறம் குணா இவங்கதான் என் வாழ்க்கை..குணாவின் மரணம் சந்துருவை மட்டும்தான் பாதிச்சதா ?அப்போ நான் ?குணாவை நான் என்னோட மகன் மாதிரி பார்த்துகிட்டேன்..சந்துருக்கு அம்மா தேவப்பட்ட மாதிரி நான் யாரை தேடி போறது? ஆனா, நான் குடும்பத்தலைவன் ..!எனக்குன்னு பொறுப்பு இருக்கே .. எல்லாரையும் மாதிரி சோகத்தை கட்டிட்டு முடங்கிட முடியுமா? என் வேலையும் அதற்கு வழி விடல..! உயிரை காப்பாத்துற துறை எப்பவுமே கவனம் இருக்கனும்..நானே என்னை சரி படுத்திட்டேன்..”

“..”

“ எப்படி நளினி பிரபுவுக்கு அவளோட வார்த்தையால துணையா இருந்தாளோ அதே மாதிரி நான் கோபத்தை ஆயுதமாய் எடுத்தேன்.. அவனை ஒரே இடத்துல தேங்கி இருக்க விடாமல் விரட்டி கிட்டே இருந்தேன்… இது அவனுக்கும் தெரியும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“..”

“பொதுவாகவே குறிப்பிட்ட வயசுக்கு அப்பறம், அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் இருக்குற உறவு பார்க்குறதுக்கு கேள்விகுறியாகத்தான் இருக்கும்..மற்றவங்க பார்வையில் னாங்க எதிரெதிராய் த்தான் இருப்போம்.. ஆனா,எனக்கு ஒன்னுன்னா அவன் வருவான்..அவனுக்காக எப்பவும் நான் இருப்பேன்”

“..”

“ பிரபுவோட மாற்றத்துக்கு நீ பெரிய காரணம்ன்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது..ஒரு பக்கம் எனக்கு அது சந்தோஷமாய் இருந்தாலும் இன்னொருபக்கம் பயம்தான் ..! குணாமேல  அதிகம் பிடிப்பு இருந்ததால் அவன் பிரிவை இவனால்தாங்க முடியல.. இப்போ அவன் உங்கிட்டயும் ரொம்ப க்லோஸ் ஆகிட்டா,நீ இல்லாமல்  அவன் என்ன பண்ணுவான்? அதற்காகவே உங்க காதலுக்கு சரி சொல்லனும்ன்னு முடிவெடுத்தேன்”

“மாமா???”

“ஆமாமா,.. நீ யாருன்னு தெரியதப்போவே உன்னை  ஏற்றுக்கிட்டேன்..”

“ அப்போ நான் யாருன்னு தெரிஞ்சதும்தான் உங்களுக்கு என்னை பிடிக்காமல் போயிடுச்சா மாமா ?”தனக்கே உரிய பரிதாபக் குரலில் அவள் கேட்கவும்,அவருக்கே என்னவோபோலாகியது…

“ அப்படி இல்லம்மா..நீ யாருங்கிறதை விட, நீ யாருன்னு தெரிஞ்சும் எங்கிட்ட மறைச்சாங்களே..! அதான் கோபம் எனக்கு .. அப்போ எனக்கு எந்த மரியாதையும் இல்லையா ?என் பையன் வாழ்க்கையில் எனக்கு பங்கில்லையா ? எங்களுக்கென்ன ஏழெட்டு மகன்களா இருக்காங்க, ஒருத்தன் போனா இன்னொருத்தனை பார்ப்போம்ன்னு சொல்றதுக்கு ? என் குடும்பத்துலேயே என்னை ஒதுக்கிட்ட மாதிரி இருந்தது எனக்கு..”

“மாமா”

“இருந்ததுன்னு தானே சொன்னேன்..இருக்குன்னு சொன்னேனா?”

“..”

“ இங்க வந்ததும் என்னால எல்லாருடைய மனசையும் புரிஞ்சுக்க முடிஞ்சது..உனக்கு ஒரு ஷக்தி இருக்கு தெரியுமா?”

“ எனக்கா?”

“ஆமா,ந் எங்கள் எல்லாருடைய அன்பையும் வசீகரிக்கிற ஷக்தி..”

“..”

“ தன் மகளுக்காக எதையும் செய்யும் அப்பா,

மருமகளுக்காக கவலைப்படும் அத்தை,

உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நாடகம் போடுற மாமன்மகன்..”

“மாமா ??உங்களுக்கு..??”

“எல்லாம்தெரியும்..! ஒரு பெண்ணுக்காக நான் இன்னொரு பெண்ணை நிராகரிக்க கூடாது… அதே நேரம் நானே மனசு மாறி உன்னை ஏற்றக்கனும்ன்னு தான் அம்மாவும் மகனும் சேர்ந்து நடிக்கிறாங்கன்னு எப்போதோ தெரியும் எனக்கு..”.. அவர் பேசப் பேச விழிகளை ஆச்சர்யமாய் விரித்தாள் நந்திதா..

“எப்படி மாமா??”

“ அவன் என் மகன் மா.. அவ்வளவு சீக்கிரம் விரும்பிய பெண்ணை கை விட்டு விடுவானா? இத்தனை வருட வாழ்க்கையில உன் அத்தையை நான் எதுக்காகவும் கை விடல... ” என்றவர் அவளின் முகம் பார்த்து “விடவும் மாட்டான்”என்றார்..

தலை மற்றும் தான் சுற்றவில்லை அவளுக்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.