(Reading time: 13 - 26 minutes)

"ம்மு "

"என்னடா

"வாட் ஐஸ் திஸ் ..நீ என்னமோ , கிராமம்ன்னா அடக்கி வாசிக்கணும்னு  உன் மருமகளை சைட் அடிக்க கூட  தடை பண்ண ? இங்க பொண்ணுங்க  பசங்களை  தொரத்துறாங்க ?"

"டேய் .. இது மஞ்சள் நீராட்டு விழா "

"அப்படின்னா  ?"

"பெரிய வெள்ளைக்கார துரை  .இவருக்கு ஒண்ணுமே  தெரியாதாம்  ? எத்தனை படத்துல பார்த்து  இருப்ப நீ ?"

"சோ நீ சொல்ல மாட் டீயா ?"என்று மிரட்டினான் குறும்பாய்  ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

"அதாவது மகனே , அத்தை மகள் , மொறைப்பொண்ணுங்க   எல்லாம் அவங்க மாமன்  மகன்  மீது மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடுவாங்க  "

"ஹூம் கும் .. இங்க எங்க மொறைப்பொண்ணு இருக்கு ? மொறைக்கிற பொண்ணுதான் இருக்கு '" என்று நந்துவை பார்த்து முனகினான் .

நந்துவோ தனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லாதது  போலவே முகத்தை வைத்து கொண்டாள் .. இவளிடம் ஜாடை மாடையாய் பேசி சரி வராது  என்று நினைத்தவன்,

"ஹெலோ மேடம் , இதுதான் சாக்குன்னு நீ என் மேல தண்ணி  ஊற்றலாம்ன்னு பார்க்காத ..அப்பறம் அவ்வளவு  தான் 'என்று மிரட்ட, நந்து சட்டென  தனது மாமாவை  பார்த்தாள் ..

'அங்க என்ன பார்வை ? யாரு என்ன சொன்னாலும் சரி  உனக்கு அந்த உரிமை இல்லை "என்று அவன் சொல்லி முடிக்கும்போதே  , பின்னால் கை கட்டி நின்ற  ஞான பிரகாஷ் அந்த குடத்தை நந்துவின் கைகளில் திணித்து 

"மருமகளே விடாதேம்மா .. அவன் தலையிலேயே நல்லா  ஊத்தி விடு "என்று கூற

"ஆவென " வாயை பிளந்தான் சந்துரு .. அவன் அதிர்ச்சியில் இருந்த சூழ்நிலையை பயன்படுத்தி , நீரை அவன் மீது  ஊற்றி இருந்தாள்  நந்து ..

" அப்பா ?"

"டேய் நான் உனக்கு அப்பா டா ..சிவாஜி செத்துடாருன்னு  ஒரே காரணத்துக்காக ஓவரா நடிக்காத .. "என்று கூற நந்துவும் சந்துருவை பார்த்தது கண்  சிமிட்ட, இமையோரம் வழிந்த நீரை துடைத்துவிட்டு  "அடியே "என்றபடி அவளை துரத்த  ஓடினான்  சந்துரு ..

பிரகாஷின் முகத்தை புன்னகையுடன் பார்த்தார் நளினி ..

"என்னமா ?"

'..'

'இப்போ உனக்கு சந்தோஷம் தானே?"

"எனக்கு சந்தோஷம் தராத விஷயத்தை எப்பவுமே நீங்க செய்ய மாட்டிங்கன்னு எனக்கு தெரியுமே .."

"ஆஹான் .. அப்பறம் ஏன் என் மேல அவ்வளவு கோபம் ?""

"உங்க மேல நான் ரொம்ப நேரம் கோபத்தை பிடிச்சு வெச்சுக்க முடியாதுன்னு உங்களுக்கு தெரியாதா ?"

"அப்படியா ? வேறென்ன எல்லாம் தெரியும் எனக்கு உன்னை பற்றி ?"என்றபடி அவர் மனைவியின் கரங்களை பற்றினார் .. என்னமோ புதிதாய் திருமண செய்து கொண்ட தம்பதியர் போல இருவரும் பார்வையாலேயே காதலை பரிமாறிக்கொண்டிருக்க

"அய்யோ அத்தான் "என்று நந்து தூரத்தில் அலறும் சத்தம் கேட்டு தொண்டையை செருமினார் நளினி ..

'போதுங்க .. நம்ம பையனுக்கே கல்யாண வயசு நெருங்கிட்டு இருக்கு "என்றார் குறும்பாய் ..

தெவிட்டிடாத இன்பத்துடன் ஒரு வாரம்  போனதே தெரியவில்லை .. இந்த ஒரு வாரத்தில் பாஸ்கரனுடன் மனம் விட்டு பேசி இருந்தார் பிரகாஷ் .. வாலுத்தனம்  செய்து கொண்டிருந்த சந்துரு நந்துவை அடக்க பெரும்பாடு பட்டார் நளினி .. சிரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் கடந்தன நாட்கள் ..

நந்துவும்  நளினியுடன் கிளம்பி இருந்தாள் . "மறுபடி எப்போய்யா  வருவ ? "என்று பெரியவர் ஒருவர் ப்ரகாஷை  பார்த்து கேட்கவும் ,

"என் மருமக படிப்பு முடியட்டும் , கல்யாணம் பேச வரோம் "என்று சொன்னார்  அவர் .. (சோ நம்ம நந்து , சந்துரு ரூட் கிளியர் .. யாரும் கண்ணீர் விடாமல் சேர்த்து வெச்சுட்டேன் பா .. நந்துவின் ரசிகைகள் இப்போ என்னை விட்டுருவீங்கன்னு நம்புறேன் )

தீப்தி , ஜெனி , நந்து , அனு  ஆரு  ஐவரும் புதிதாய் ஒரு அணி அமைத்து இருந்தனர் .. கவின்  வழக்கம் போலவே அருண் , செல்வத்துடன் இருந்தான் .. அனைவரும் கேண்டினில்  மிக முக்கியமான பேச்சு வார்த்தையில் இருந்தனர் ..

" நோ ஜெனி என்னை தடுக்காதே "என்று நாடக பாணியில் பேசினான் செல்வம் ..

"அற்ப பதரே , உன்னை யாருடா தடுத்தது ?"என்று அனு  பல்லை கடித்தாள் ..

"ச்ச , இவ ஒருத்தி எப்போ நாம பெர்பார்மன்ஸ்  பண்ணலாம்னு நினைக்கும்போதெல்லாம் , பள்ளு புடுங்கின  பாம்பு மாதிரி புலம்ப வைக்கிறாள் "என்று முணுமுணுத்தான் அவன் ..

"ஒய் , என்னடா சத்தம் ... சீனியர் அக்கா கிடட போட்டு கொடுக்கணுமா ?"

"சீனியர் ,,சீனியர் ..சீனியர் .. இப்போ நாமளே சீனியர் தான் ..அந்த பேச்சுக்கு வாங்க மக்களே "என்றான் கவின் ..

"ஷாபா உனக்கு இப்போ என்னத்தான் வேணும் டா ?"என்று தீப்தி கேட்க , கவின்  தனது சொந்த கதை சோக கதையை சொல்ல தொடங்கினான் .. அது என்னனு அடுத்த எபிசோட் ல சொல்றேன் ..

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 34

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 36

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.