(Reading time: 21 - 41 minutes)

05. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

Hey sandakkaara

என்னை அறிய விரும்பா நீ..

உன் மனம் அறிய விழைந்திருந்தால்,

என் காதல் பிழைத்திருக்குமோ??

ரி உறைந்து நிற்க, மகதி மட மடவென்று திட்டி தீர்த்துவிட்டு, அவ்விடம் விட்டு நடந்தாள். அவன் இன்னதென்று தெரியாத ஓர் உணர்வில் இருந்தான். அவளிடம் வாக்குவாதம் செய்யும் நிலையில் இல்லை என்பதை அறிந்தவன், உணர்ச்சியற்ற முகத்துடன் அகன்றான்.

சண்டை முடியும் நிலையில் சீனில் என்ட்ரியான அனன்யாவாலும், 'அட கடவுளே' என்று தலையில் அடித்துக் கொள்ள தான் முடிந்தது. ( பழைய தமிழ் படத்துல வர போலீஸ் மாதிரி ஆகிட்டியே மா ;-) )

யார்கிட்டயாவது நல்லா பாட்டு வாங்கிட்டு சோகமா  வரும்போது, நம்ம கிட்ட எதுக்காகவோ சிக்குனவங்கள  திட்டி தீர்ப்போம். அப்போ ஒரு 'அப்பாடா' பீல் கிடைக்குமே. எக்சாக்டா, அப்படி தான் இருந்தாள் மகி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

ப்படியே வந்து மணமகன் அறையைக் கடந்தவள், உள்ளே டென்சனில் இருந்த கண்ணனைக் கண்டு, சடன் பிரேக் போட்டு நின்றாள்.

அவளை வாசலில் பார்த்த கண்ணனின் முகம் ப்ரைட்டாகி,

" ஹேய், மகி... அந்தர் ஆவோ.. சீக்கிரம்.. "

" தெரிஞ்ச நாலு ஹிந்தி வார்த்தைய, கிடைக்குற கேப்ல எல்லாம் சொருகிட வேண்டியது அத்தான். என்ன விஷயம்? காரணம் இல்லாம இவ்ளோ உற்சாக வரவேற்புக்கு வாய்ப்பு இல்லையே "

" மகி, நீ பயங்கர புத்திசாலி.. "

" இந்த ஐஸ்-ஐ குறைச்சுட்டு, விஷயத்தை சொல்றீங்களா? "

“ அது ஒன்னுமில்லடா… நான் சில கேள்வி கேட்பேனாம், நீ பதில் சொல்வியாம். ஓகே வா ?

“ ஹம்ம்… கேளுங்க “

“ பெட் கட்டினா, ஜெயிக்கனும் இல்லையா மகி? "

" ஆமா "

" உன் அத்தான் தோக்குறது உனக்கு பிடிக்காது இல்லையா மகி? "

 " ஆமா "

" லவ் பண்ணுற பொண்ணுக்கு, Feb 14 அன்னைக்கு விஷ் பண்றது தப்பு இல்லைல மகி?"

" இல்ல தான் "

 " அதை நைட் 12 மணிக்கு பண்ணலாம் இல்லையா  மகி? "

"  ஓ யெஸ்  தாராளமா அத்தான். "

" போன்ல சொன்னாலும், நேர்ல சொல்ற போல ஆகாதுல மகி?"

" உண்மைதான்  "

" அப்போ ஷணுக்கு விஷ் பண்ண, எனக்கு கொஞ்சம் ஹெல்ப் செய்யேன் "

" ஹீ ஹீ.. அது முடியாதே அத்தான் "

" அட துரோகி, இவ்ளோ நேரம் நல்லா தான போய்க்கிட்டு இருந்துச்சு.."

" நீங்க வரிக்கு வரி மகி மகினு சொல்லும்போதே தெரிஞ்சுது, இந்த மகிய எங்கயோ மாட்டி விட போறீங்கனு. பட், வாட் டூ டு!! நம்ம கிட்ட இந்த டகால்ட்டி வேலை எல்லாம் நடக்காதே. ஸோ சாரி அத்தான். ஆளை விடுங்க "

" ஹேய் குட்டிமா, நீயே கைவிட்டால்  எப்டியாம்!! நான் வேற கெத்தா விஷ்  பண்ணுறேன்னு சொல்லிடேன். ப்ளீஸ்... ப்ளீஸ் .. ப்ளீஸ்ஸ் ஹெல்ப் கரோ "

கொஞ்ச நேரம் வளச்சு வளச்சு அவன் இதே டையலாக்-ஐ சொல்ல, ஒருவாறாக மனம் இரங்கினாள் மகதி.

" ஓகே ஓகே.. சொல்லுங்க என்ன பிளான்? "

" பிளான்னா? அதை இனி தான் செய்யனும் " 

"அட பாவி அத்தான், உங்கள என்ன செய்ய ? "

" அதெல்லாம் அப்பறம் பண்ணிகலாம், இப்ப பிளான் பிளீஸ்.. "

" ஆ.. இப்டி திடுதிப்புனு கேட்டாலாம் ஒன்னும் வராது "

" ஆமா, இப்படி நின்னு நிதானமா யோசிச்சா மட்டும், ஐடியா அப்படியே பொங்கி வழிய போகுது. அட சட்டு புட்டுனு பிளான சொல்லுமா ! "

" ஓஹோ அப்ப வேற யார்கிட்டயாவது  ஹெல்ப் கேளுங்க "

" ஹே.. என் செல்லக்குட்டில.. ”

அவன் 'ஈ' என்று இளிக்க, " தயவு செய்து இந்த மந்தகாச புன்னகைய நிறுத்துங்க, கொடுமையா இருக்கு. இப்போ என்ன செய்யலாம்? " என்றாள் மகதி.

அவள் தலையில் வலிக்காதவாறு ஒரு கொட்டு வைத்தவன், " என்னை கலாய்காம, ஒழுங்கா யோசி "

" அதானே, அப்போவும் யோசிக்கமட்டீங்களே! போகுது விடுங்க. யாருக்கும் தெரியாம எல்லாம் அக்காவ கூட்டிகிட்டு வரமுடியும்னு எனக்கு தோணல. எதையாவது சொல்லி தான் ட்ரை செய்யனும். என்ன சொன்னால் விடுவாங்க? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.