(Reading time: 20 - 40 minutes)

ர்ஷூ சுயமரியாதை பார்ப்பவள்.நட்பே என்றாலும் ஒரு எல்லைக்கோட்டுக்கு மேல் அனுமதிக்க மாட்டாள்.

“அதெல்லாம் வேண்டாம்”என்று நிர்தாட்சயன்யமாக மறுத்தாள்.

“அப்போ நான் கட்டலை.இப்போதைக்கு ஒரு ஐடியா இருக்கு.அது எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்னு தோணலை”

“நீ சொல்லு..நான் சரியா வருமான்னு யோசிக்கறேன்”

“நம்ம கிளாஸ் பசங்களுக்கு நாம ஏன் ப்ராஜெக்ட் வொர்க் செய்து கொடுக்கக் கூடாது”

“இது தப்பில்லையா”

“தப்புன்னு பார்த்தா,இப்போ நாம கோவில்ல உட்கார்ந்துட்டு இருக்கது கூட தப்புதான்”

“இதெப்படி தப்பாகும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“ஏய்..ஒரு புளோல வருதுடி வர்ஷூ..அர்த்தம் எல்லாம் கேட்காத”என்று சொல்லவும் சிரித்துவிட்டவள்,

“நீ முழுசா உன் ஐடியாவை சொல்லி முடி”என்றாள்.

“எப்படியும் நம்ம பசங்க கடைசி 2 மாசத்துல தான் ப்ராஜெக்ட் சென்டர் தேடி அலைவாங்க.அதுவரைக்கும் பேருக்கு ஒரு ரிப்போர்ட்,ஒரு டெமொன்னு எல்லாரையும் சாமாளிச்சுட்டு இருப்பாங்க.இப்போ நாம போய்,அவங்ககிட்ட நாங்க செய்து தர்றோம்..பணம் கொஞ்சம் குறைவாவே கொடுங்கன்னு கேட்கலாம்.நிச்சயம் நம்ம பசங்க சம்மதிப்பாங்க”,

“அதுவும் இல்லாமல் முழுசா ப்ராஜெக்ட் நாமளே செய்யாம,கொஞ்சம் அவங்களையும் கைட் பண்ணி செய்ய வைக்கலாம்.எப்படியும் லாஸ்ட் செமஸ்டர் புல்லா நமக்கு ப்ரீ டைம் தானே.நீ,நான்,ஹாசினி மூணு பேரும் உட்கார்ந்து செய்தா,மாசத்துக்கு 2 ப்ராஜெக்ட்ன்னு போட்டு பார்த்தாலும்,2 மாசத்துல நமக்கு தேவையான பணம் கிடைச்சிடும்.நமக்கும் வேலைக்கு போறதுக்கு முன்னாடி,இது ஒரு அனுபவமா இருக்கும்..என்ன சொல்ற”என்று கேட்டதும் உடனே வர்ஷூ சம்மதித்துவிட்டாள்.

அவர்களது வகுப்பில் மிகவும் படிப்ஸ் என்றால் அது வர்ஷூ தான்.எதிலும் முந்திரிக்கொட்டை என்று பலரால் பாராட்டப்படும் அளவுக்கு,ஆசிரியர்கள் சொன்ன உடனே வேலையை முடித்துக்கொடுத்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடுவாள்.அதனால் அவளால் உடனே சம்மதம் சொல்ல முடிந்தது.

அது மட்டுமில்லாமல் அவர்கள் என்ன ஆப்பிள் ஐ போனுக்கு அப்ளிகேஷனா உருவாக்கப் போகிறார்கள்..அவர்களது வகுப்பில் மாணவர்கள் எடுத்திருந்த ப்ராஜெக்ட் எல்லாம் மிகவும் பழையது தான்.புதிய ஐடியாக்களை பேராசிரியர்களை ஏற்க வைக்க,மிகவும் போராட வேண்டியிருக்கும்.அதே பழைய ஐடியாவிற்கு கலர் சாயம் பூசினால் உடனே ஒத்துக்கொள்வார்கள்.

அதனால் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்ட நிம்மதியில் இருந்தவளுக்கு அடுத்த பிரச்சனை நினைவுக்கு வந்து தொலைத்தது.

“ஹே வர்ஷூ.நம்ம ஹாஸ்டல் பசங்க பொண்ணுங்க யாரும் ஊருக்கு போகலை தானே”

“அதெப்படி போவாங்க.இன்னைக்கு நைட் போராட்டம் பண்றதா ப்ளான் பண்ணி வச்சிருக்கோமே..எப்பவும் நாங்க லீவுக்கு ஊருக்கு போனதும்,அங்க மிச்சம் இருக்க பசங்களுக்கு இவ்வளவு தான் சமைக்கணும்னு அந்த ஹிட்லர் கணக்கு வச்சிருக்கும்.இந்த முறை நாங்க யாரும் போகாததிலையே தலையை பிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கு.இன்னைக்கு நாம பண்ற அளப்பறைல,அந்த லேடி ஹிட்லர் வேலையை விட்டே ஓடணும்.அப்போ தான் இந்த வர்ஷூ யார்னு அவங்களுக்கு தெரியும்”என்று வீராவேசமாக பேசிய வர்ஷூ,வாட்ஸ்அப் க்ரூபில் அனைவரையும் சரியாக 7.30க்கு ஆஜராக சொல்லி மீண்டும் ஓர் முறை குறுந்தகவல் அனுப்பினாள்.

வீட்டுக்கு சென்ற அவந்தியும்,பாண்டியனிடம் விவரத்தை சொல்லி,அவரது சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு ஹாஸ்டல் முன் வந்துவிட்டாள்.

இறுதி வருட படிப்பில் இருந்த அத்தனை மாணவர்களும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் நான்கு ரெஸ்டாரன்ட்களில் குழுக்களாக பிரிந்து அமர்ந்திருந்தனர்.

இரவு உணவு வேளைக்கு ஹாஸ்டலில் மணி அடிக்கவும்,ஒட்டு மொத்தமாக கிளம்பி வந்த மாணவர் குழு,ஹாஸ்டல் கேட்டை அடைத்தவாறு வெளியே அமர்ந்துகொண்டார்கள்.

இரவு நேரத்தை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம்,பெண்கள் மட்டுமே..

“வெயில் என் ஸ்கின்க்கு அலர்ஜிப்பா”என்று காரணம் சொன்னவர்கள்,

“நம்ம பிரின்சிபால்க்கு சாப்பிடும் போதும்,தூங்கும் போதும் யாரும் தொந்தரவு செய்தா பிடிக்காது..அதனால நைட் தான் சரி வரும்”என்று பலவாறு சொல்லி சமாளித்து வைத்தவர்கள்,ஒருவர் பின் ஒருவர் அமராமல் பந்தியில் அமர்வது போல ஒரு வரிசையில் பெண்களும்,இன்னொரு வரிசையில் ஆண்களும் அமர்ந்து கொண்டனர்.

அப்போது தானே தெருவில் சலசலப்பு அதிகமாகும்! ட்ராபிக் அதிகமாகும்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.