(Reading time: 13 - 26 minutes)

சிறுவயதில் அப்பாவை விட்டு பிரிந்திருக்க முடியாததால்,யாருடைய பேச்சையும் கேட்காமல் அடம்பிடித்து அம்மாவுடன் காஷ்மீருக்கு சென்றாள்.

பாண்டியன் உயர் அதிகாரி என்றாலும்,தன் குடும்பத்தை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.செவ்வந்தியின் அழுகை ஒன்றே அவரை கரைத்தது.

அவளது ஐந்து வயதில் ஆரம்பித்த காஷ்மீரின் வாழ்க்கை பயணம்,பதிமூன்று வயது வரைக்கும் நன்றாகத்தான் சென்றது.

வகுப்பில் பாடத்தை செவ்வந்தி கவனித்துக் கொண்டிருந்த போது,எதிர்பாராமல் ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் அனைவரும் வெளியே வந்து பார்த்த போது,தூரத்தில் புகை மண்டலமாய் காட்சியளித்தது..அதிலிருந்து பல கதறல் சத்தம் கேட்டது.

தீவிரவாதிகள் வைத்த குண்டுவெடிப்பில் அவளது அம்மா இறந்து போனார்.பதுங்கி இருந்த தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பத்து ராணுவ வீரர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

ஒருவருக்கு கை சிதறிப் போயிற்று.பாண்டியனுக்கு கால் நசுங்கிப் போயிற்று.

செவ்வந்திக்கு ஆறுதல் சொல்லக் கூட அப்போது யாருமில்லை.

ஏனோ தான் பிடிவாதம் பிடித்து,இங்கு வந்ததால் தான் அம்மாவை இழந்துவிட்டோம் என்று அவளுக்கு தோன்றியது.அதிலிருந்து எந்த விஷயத்திற்கும் பிடிவாதம் பிடிப்பதை நிறுத்திக்கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்... 

அதே போல் தனக்கு வரப் போகும் கணவன்,ராணுவ அதிகாரியாகவே போலிஸ் அதிகாரியாகவோ இருக்கவே கூடாது என்ற உறுதி அவளுக்குள் எழுந்தது.

‘நாட்டைக் காக்க ஆயிரம் பேர் செல்லட்டும்.எனக்கு ஏற்பட்ட இழப்பே போதும்.இனி ஓர் இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது’என்று அதையே நினைத்துக்கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் சமாதானமாகி,

“இந்த செவ்வந்திக்குன்னு கந்தசாமியோ..வெள்ளச்சாமியோ பிறந்திருப்பான்.அந்த லெவல் நமக்கு போதும்”என்று எண்ணியவள் புன்னகையோடு தூங்கிப் போனாள்.

அன்று விடுமுறை என்பதால் செவ்வந்தி பூவை கட்டிக் கொண்டிருக்க,சரணும் அவளுக்கு உதவியாக பூக்களை கட்ட ஆரம்பித்தான்.

அவளை விட இரண்டு மடங்கு வேகத்தில் பூக்களை கட்டி,வேலையை முடித்தவன்,”வெளியே போகணும்.சீக்கிரம் கிளம்பி வா”என்றான்.

சரணிடம் இந்த விஷயம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது,அப்படியே போட்டுவிட்டு வர சொல்லி கட்டாயப்படுத்த மாட்டான்.அவனும் வேலையில் இறங்கி விரைவாக முடிக்க உதவி செய்வான் என்பதால்,அவளும் மறுப்பு சொல்லாமல் கிளம்பி வந்தாள்.

புட்பால் கிரவுண்டிற்கு அழைத்து சென்ற சரண்,அங்கு அமர்ந்திருந்த யஸ்வந்திடம் சென்றான்.

‘இவளை எதுக்கு கூட்டிட்டு வந்தான்’யஸ்வந்த் யோசித்தாலும்,வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்த யஸ்வந்த் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“உனக்கு நிறைய திறமை இருக்கு சரண்.அப்பாகிட்ட அதையெல்லாம் சொல்லி புரிய வைச்சுட்டேன்.அவரும் நீ பார்ட்னரா சேர்றதுக்கு சம்மதம் சொல்லிட்டார்”

“எனக்கும் ஆசையா தான் இருக்கு.அவந்திகாவும் சரின்னு சொன்னா எனக்கு ஓகே”என்று அவள் முகத்தை ஆர்வமாக பார்க்க,சிறிது நேரம் யோசித்தவள்,

“இந்த ஆஃபர் வேண்டாம்டா மாமா.என்னோட அப்பால இருந்து,இவங்களோட அப்பா வரைக்கும் உன்னை பார்டனரா இருக்க வைக்க தான் நினைக்கிறாங்க.உனக்கு இருக்க திறமைக்கு ஒரு முழு கம்பெனியையும் நீயே நிர்வகிக்கணும்.நீ எப்படியாவது ஹாசினியோட அப்பாவை உன்னோட திறமையை வைச்சு இம்ப்ரெஸ் பண்ணி அவரோட பேக்டரிகுள்ள நுழைஞ்சுடு...அப்புறம் நீ தான் அதுக்கு வருங்கால MD”என்று ஆலோசனை வழங்க,

“இதுக்கு தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்”என்று சரண் பெருமைப்பட்டுக்கொண்டான்.

“பார்ட்னர் ஆகறது ஒண்ணும் சுலபமான விஷயம் இல்ல.ஹாசினி அப்பா ரொம்ப விவரமானவர்.அவரை விட விவரமா பேசி தான் சமாளிக்கணும்.அவரோட குணத்தைப் பத்தி ஹாசினிகிட்ட பேசிடு”எனவும் உடனே அதை செயல்படுத்தும் விதமாக போனை எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.

யஸ்வந்தின் முகம் கலையை இழந்துவிட்டது போல செவ்வந்திக்கு தோன்றியது.

‘சின்ன விஷயத்துக்கு எல்லாம் குழந்தை மாதிரி முகம் ஆகிடுது’என்று ஆராய்ச்சியில் இறங்கிய மனதை அடக்கினாள்.

தன்னை சமாளித்துக்கொண்ட யஸ்வந்த்,”வேணும்னே தான இப்படி பண்ண”என்று கேட்டான்.

“என்ன வேணும்னு பண்ணேன்”இமை தட்டி விழித்து கேட்டவளுக்கு பதிலை சொல்லாமல் புட்பால் கோர்ட்டை சுற்றி நடக்க ஆரம்பித்தான்.

அவன் பின் சென்றவள்,”லவ் பெயிலியரா”என்று கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.