(Reading time: 12 - 24 minutes)

06. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

 “ன்னையை இனிமேல் எல்லாம் த்ரீ பீஸ் தான் எடுக்கணும்னு நான் சொல்லியிருக்கேனா இல்லையா? கையில் ஜீவனின் ஷர்ட் பேண்டை வைத்துக் கொண்டு அதட்டிக் கொண்டிருந்தாள் அனிக்கா.

 :இரண்டும் 12 வது வகுப்பிற்கு வந்து விட்டன ஆனால் சண்டையை விட வழியில்லை" என்று இரண்டு பேர் அம்மாக்களும் சலித்துக் கொள்ளும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்திராவின் விளக்கம் தொடர்ந்தது

 “ஜீவனை யாரோ அவன் கிளாஸ் பொண்ணு நீ சட்டைப் போடுறது ஹாங்கர்ல சட்டை தொங்க விடற மாதிரியே இருக்குன்னு கிண்டல் பண்ணிட்டாளாம் அதான்” எனச் சிரிப்பும், அனியின் கோபத்தைக் குறித்த பெருமையும் அவர் குரலில் தொனித்தது.

“ ஒழுங்கா சாப்பிட்டாத் தானே?, இல்ல அண்ணி, அதான் ஜீவன் இப்படி இருக்கிறான். மத்தியானம் நம்ம வீட்டுக்கு அனுப்பி வைங்க அவளோட சாப்பிடட்டும், அவன் தலையில குட்டி குட்டியாவது சாப்பிட வச்சிடுவா” எனச் சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டனர்.

 “ரெண்டும் ட்வின்ஸா பிறக்க வேண்டியதுங்க இல்ல………..” என ஒருவர் சொல்ல,

“அப்படி பிறந்திருந்தா நம்ம பாடு கஷ்டம் அதான் இப்படி, நன்றிக் கடவுளே" என மற்றவர் சொல்ல வெடிச் சிரிப்பு கிளம்பியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

 குடும்பங்களில் ஏதேனும் வைபவங்கள் நிகழும் போது உறவினர்கள் கூடிப் பேசுவதும், விளையாட்டும் சிரிப்புமாக இருப்பது வழக்கம் தானே? அங்கு இருந்த கலகலப்பிற்கு காரணம் ஒரு மாதத்திற்குள்ளாக நிகழவிருக்கும் தீபனின் திருமணம் தான்.

 கிறிஸ்ஸிற்கு முந்தின வருடமே திருமணம் நடைப் பெற்றிருக்க , மணப்பெண்ணான பிரபா தாமஸின் உறவினர் மகளென்பதால் அவர்களுக்கு அத்தனை பெரிதான வித்தியாசம் தென்படவில்லை. ஒரே குடும்பத்திற்குள்ளான அத்தனை நடைமுறைகளிலும் ஒரு ஒத்துழைப்பும் நெருக்கமும் இருந்ததென்னமோ உண்மை.

 தீபனுக்கு நிச்சயம் செய்த ப்ரீதா குடும்பத்தினர் அறிமுகமானது குடும்ப நண்பர் ஒருவர் மூலமாகத்தான். தீபனுக்கு ப்ரீதாவை பிடித்திருக்க உடனே திருமணத்திற்கான ஏற்பாட்டில் இறங்கினர். கடந்த வாரத்தில் ராஜ் விடுப்பில் வரவும் நிச்சயதார்த்தம் எளிமையாக வைத்து திருமணத்திற்கான நாளைக் குறித்து வந்தனர். திருமணத்திற்கான வேலைகளுக்காக சாரா தன் அண்ணிக்கு துணையாக வந்து கூட இருப்பது, வேலைகளை திட்டமிடுவது, சேர்ந்து செயல்படுத்துவது தற்போது சில நாட்களாக வாடிக்கையாக இருந்தது.. 

 தன்னுடைய க்ளாஸ்மேட்களின் கமெண்ட்ஸ் கேட்டதிலிருந்து ஜீவனை உடையில் கவனம் செலுத்தச் சொல்லிக் கொண்டிருந்த அனியின் கண்களில் முன்தினம் ஜீவன் வாங்கி வந்திருந்த டிரெஸ் கண்ணில் படவே, அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.

 “ உன்னால என் ஃபிரண்ட்ஸ் முன்னாடி மானமே போகுது, மரியாதையா அதே கடைக்கு போயி நீ டிரெஸ்ஸ மாத்திட்டு வரலனா பாரு.......... உன்னை நான் என்னச் செய்யிறேன்னு”

“அதெல்லாம் அந்த எக்ஸிபிஷனுக்கு இந்த டிரெஸ் காணும், நீ உன் வேலையைப் பாரு , வந்திட்டா நான் என்ன டிரெஸ் செய்யணுன்னு டிசைட் பண்ணதுக்கு" என்று அவள் பேச்சைக் கேட்காமல் கத்திக் கொண்டிருந்தான் அவன்.

 உலகில் ஒரு இடத்தில் குளிர் நடுக்கும் போது இன்னொரு இடத்தில் வெயில் காயும், மற்றொரு இடத்தில் மழைக் காற்று சுற்றி சுழற்றி வீசும் இல்லையா? அதுப் போலத்தான் இவர்கள் பேச்சைக் கேட்டுக் இருந்த அம்மாக்களின் மனநிலை ஒரு விதமென்றால், பக்கத்து அறையிலிருந்த ரூபனின் மனநிலை வேறாக இருந்தது.

 கடந்த இரண்டு வருடத்தில் அவன் மனதிலிருந்த காயங்கள் வெகுவாக ஆறிப் போயிருந்தன. ஜீவன், அனிக்கு ட்யூஷன் எடுத்தது ஒரு வகையில் தன்னுடைய தனிமையிலிருந்து வெளிவர காரணமாக இருந்தது என்றால், அந்த காலேஜில் சந்தோஷ் மட்டுமல்ல மற்ற எல்லோருமே இவனோடு நட்பாக பழகியது. அவனுடைய அறிவாற்றலைக் கண்டுக் கொண்டு தட்டிக் கொடுத்த ப்ரொபசர்கள் என்று அத்தனையுமே அவன் வாழ்க்கையை சமநிலைப் படுத்தியிருந்தனர்.

 ல்லூரி நாட்களும் நிறைவுற மிக நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிப் பெற்றிருந்தான் ரூபன். அந்த நேரத்தில் ராஜ் லீவில் வந்திருந்தார், மனைவிச் சொன்ன அத்தனை விஷயங்களும் கேட்டு மகனைக் குறித்து அவர் உள்ளத்தில் கவலைப் படர்ந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் அவன் பெற்ற மதிபெண்ணுக்கு மெடிக்கலுக்கு முயற்சிக்கலாமா என்றுக் கூட அவர்களுக்கு தோன்றியிருந்தது. ஆனால், அவன் எதிலுமே ஈடுபாடு காட்டாதது அவருக்கு ஞாபகம் வந்தது. அவனுடைய கடந்த காலத்தின், அளவு கடந்த அமைதிக்கு பின்னே இருந்த மன வருத்தங்களை அவரால் இப்போது உணர முடிந்தது.

 எனவே மனைவியிடம், அவன் என்னச் செய்ய விருப்ப படுகிறானோ செய்யட்டும்? அவனை எந்த விதத்திலும் கட்டாயப் படுத்தாதே ….எனக் கூறினார். அது போலவே மகனிடமும் அவன் இன்னும் எதையாவது கற்றுக் கொள்ள விரும்பினால் கற்றுக் கொள்ளச் சொன்னார். ஒரு வேளை எம்பிஏ படிக்க விரும்புவானோ என அவருக்கு ஒரு ஊகம் இருந்தது. 

 ஆனால் அவனுடைய விருப்பமோ மற்றவர்களின் சிந்தனைக்கு சற்று மாறாக இருந்தது. தான் தன்னுடைய நண்பன் சந்தோஷோடு கூட ஒரு பாக்டரியில் மேற்பார்வையாளனாக பணிபுரியப் போவதாகவும் அங்கு உற்பத்திப் பிரிவில் இருந்து வேலை நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ளப் போவதாகவும் கூறவே அவருக்கு ஆச்சரியமாயிற்று.

 “ஏம்பா ரூபன், அதற்கு கோர்ஸ் எதுவும் இருந்தாப் போய் படி, டிகிரி முடிச்சவுடனே யாருப்பா உங்களுக்கு நல்ல வேலைத் தருவா? எனக் கேட்கவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.