(Reading time: 23 - 46 minutes)

ரி..குப்த இளவரசே.நேரமாகி விட்டது..கிளபுகிறேன் விடைகொடுங்கள் என்று சொல்லிவிட்டு இளவரசி மதிவதனியை வேறு சென்று பார்க்க வேண்டும்..தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பியுள்ளார் என்று தானாகவே சொல்லிக்கொள்வது போல் சொல்லிக்கொண்டாள்.மதியின் வார்த்தைகள் நன்றாகவே வேலை செய்தது.

வாலிபரே..வாலிபரே என்ன சொன்னீர்கள்? என்ன சொன்னீர்கள்?இளவரசியை உங்களுக்குத் தெரியுமா? அவரோடு உங்களுக்குப் பேசி பழக்கம் உண்டா?பரபரத்துக் கேட்டான் ஹஸ்தன்.அவன் குரல் கெஞ்சுவதைப்போல் இருந்தது.அவனிடம் தெரிந்த தவிப்பைப் பார்த்தாள் மதி.

ம்..இளவரசியைஎனக்கு நன்றாகத் தெரியும்.சிறு வயதில் நான் என் தத்தாவுடன் அடிக்கடி அரண்மனைக்கு வருவேன்.அப்போதெல்லாம் இளவரசியொடு விளையாடுவேன்.எங்களுக்குள் மிகுந்த நட்பு உண்டு.பின்னர் நான் என் அத்தையின் ஊருக்குச் சென்றுவிட்டேன்.கொஞ்ச காலத்திற்கு முன்தான் திரும்பினேன்.வைத்தியரிடம் மருத்துவம் கற்கச் சேர்ந்தேன்.நான் திரும்பிவிட்டது அறிந்து இளவரசி தன்னை வந்து பார்க்கும்படி மருத்துவரிடம் சொல்லி அனுப்பியுள்ளார்.அவரைச் சென்று சந்திக்கவேண்டும் என்றாள் அவன் முகத்தை நோக்கியபடி.

வாலிபரே..வாலிபரே...

ம்..சொல்லுங்கள் குப்த இளவரசே..

எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?

உதவியா?நானா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

ஆம்..வாலிபரே நீங்கள்தான்..

நான் போய் உங்களுக்கு என்ன உதவி செய்வது?..

அது..அது..நீங்கள் இளவரசி மதிவதனியை சந்திக்குபோது..

சந்திக்கும்போது..

சந்திக்கு போது..என்னைப்பற்றி ஏதாவது உங்களிடத்தில் சொல்கிறாரா என்று எனக்குத் தெரிய வேண்டும்.

அப்படி ஏதும் சொன்னால் அதனை என்னிடத்தில் வந்து தெரிவிக்க முடியுமா?..

நீங்கள் பேசுவது எனக்கு அர்த்தமாகவில்லை இளவரசே..எங்கள் இளவரசி உங்களைப் பற்றி ஏன் பேசவேண்டும்.?நீங்கள் கேட்பதைப் பார்த்தால்.....இளவரசியை நீங்கள் விரும்புவதைப்போல் அல்லவா தெரிகிறது?...

ஏன் நான் விரும்பக்கூடாதா?..

வெளிப்படையாகக் கூறுங்கள்..இளவரசியை நீங்கள் உண்மையாகவே விரும்புகிறீர்களா..?

ஆம்..வாலிபரே..இளவரசியை என் உயிரினும் மேலாக விரும்புகிறேன்..அவரின்றி நான் உயிரோடிருப்பதே வீண்.ஒவ்வொரு கணமும் என் மனம் அவரையே சிந்திக்கிறது.அவரை சந்திக்க என் மனம் விழைகிறது. ஆனால் அவர் மனதில் நான் இருக்கிறேனா என்பது தெரியவில்லையே..வாலிபரே..அவர் மனதை நீர் அறிந்து சொல்வீரா?..ஒரு முறை ஒரே முறை அவரை நான் சந்தித்தால் போதும் என் மனதை அவருக்குச் சொல்லிவிட்டு மன்னர் அளிக்கும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்வேன்.வாலிபரே உங்கள் கரங்களைப் பிடித்துக் கேட்கிறேன்..இந்த உதவியைச் செய்வீரா? என்று கேட்டபடி மதியின் கரம்பற்ற அருகில் வந்தான் ஹஸ்தன்.

சட்டென இரண்டடி பின்வாங்கினாள் மதி..அவள் மனம் ஓர் நிலையிலில்லாமல் போயிற்று.ஹஸ்தன் தன்னை உயிரினும் மேலாய் நேசிப்பதைத் தெரிந்து கொண்டாயிற்று..இனி மதியாகிய தன் மனதை அவனிடம் தெரியப்படுத்த வேண்டும்..அதற்குள் கொஞ்சம் அவனிடம் விளையாடிப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது அவளிடம்.எல்லாம் ஹஸ்தனின் பதிலால் மனம் முழுதும் நிரம்பிய மகிழ்ச்சிதான் காரணமோ?சீண்டுதலும்..சிணுங்குதலும் காதலில் ஓர் அங்கமோ?

குப்த இளவரசரே..உங்கள் மனதை தெரிந்து கொள்வதற்காகவே..இளவரசியை நீங்கள் நேசிக்கிறீர்களா என்பதைத் தெரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் முனைந்தேன்....இளவரசி மதிதான் என்னை உங்களைச் சந்திக்க இங்கு அனுப்பினார்.

என்ன..என்ன..என்ன சொன்னீர்கள் வாலிபரே..?இளவரசிதான் உங்களை அனுப்பினாரா?இளவரசிதான் உங்களை அனுப்பினாரா?சொல்லுங்கள்..சொல்லுங்கள்..உண்மையாகவா சொல்கிறீர்கள்?உண்மையாகவா சொல்கிறீர்கள்?பித்துபிடித்தவன் போல் கத்தும் ஹஸ்தனைப் பார்க்க மதிக்கு நெஞ்சம் தவித்தது.

ஆம் குப்த இளவரசே..அவரை நீங்கள் விரும்புகிறீர்களா?இல்லையா என்பதைத் தெரிந்து கொண்ட பின்னரே உங்களைச் சந்திக்க என்னை அனுப்பிய விபரத்தைத் தெரிவிக்கச் சொன்னார்.காரணம் அவர் பெண்ணாயிற்றே?ஒரு பெண் எப்படி தன் காதலை முதலில் சொல்லுவாள்?...

ஆம்..ஆம்..சரிதான்..வாலிபரே..அப்படியானால் இளவரசி என்னை விரும்புகிறாரா?உடனே சொல்லுங்கள்.. தாமதிக்காதீர்கள்..என் நெஞ்சம் தவிக்கிறது..உங்கள் பதிலைக்  கேட்க..சொல்லுங்கள்..சொல்லுங்கள்..இளவரசி என்ன சொன்னார்..?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.