(Reading time: 23 - 46 minutes)

ளவரசி மீது உங்களுக்கு அவ்வளவு காதலா..இவ்வளவு பரபரப்புக் காட்டுகிறீர்..?

ஆம்..இளவரசியை நான் மிகவும் நேசிக்கிறேன்...

அப்படியா?..உங்கள் நேசிப்புக்கு அளவு ஏதும் உண்டா?..

இந்த உலகம் எவ்வளவு பெரிதோ அதைக்காட்டிலும் அதிக அளவு பெரிதாய்...

ஓஹோ..அப்படியானால் இளவரசி கொடுத்தனுப்பியதை உங்களிடம் கொடுக்கலாம்.

வாலிபரே இளவரசி என்ன கொடுத்தனுப்பினார்?என்ன கொடுத்தனுப்பினார்?கொடுங்கள்..கொடுங்கள்..

என்றபடி மிகுந்த ஆவலோடு கையை நீட்டினான் ஹஸ்தன்.

முதுகில் மறைத்து வைத்திருந்த தானே வரைந்த தன் ஓவியத்தை எடுத்து ஹஸ்தனிடம் நீட்டினாள் மதி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

இந்தாருங்கள்..இலவரசி கொடுத்தனுப்பிய அவரது ஓவியம்..

சுருட்டப்பட்டிருந்த அந்த ஓவியத்தை அவசர அவசரமாய்ப் பிரித்துப்பார்தான் ஹஸ்தன்.அவன் கண்கள் மின்னின..ஆஹா..ஆஹா..இளவரசீ..நீங்கள்தான் எவ்வளவு அழகு..?எவ்வளவு அழகு..?நீங்கள் என் மனதைக் கொள்ளை  கொண்டவர்.என் உயிரானவர்..நீங்களும் என்னை விரும்புவதை அறிந்து என் மனம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது தெரியுமா?இனி என் உயிர் போனாலும் பரவாயில்லை..இளவரசீ.. மதீ..மதீ என்றபடியே இலவர்சியின் ஓவியத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

சரி..சரி..போதும் குப்த இளவரசே..இளவரசியின் ஓவியம் இனி உங்களிடம்தான் இருக்கப் போகிறது.பிறகு பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் காதல் வசனங்களை..எனக்கு நேரமாகிறது..நீங்கள் இளவரசிக்கு உங்கள் நினைவாய் ஏதாவது கொடுப்பதாய் இருந்தால் கொடுங்கள்.அதனை இளவரசியிடம் சேர்ப்பித்து விடுகிறேன். அத்தோடு முடிந்தது என் வேலை.போதும்..போதும் காதலர்களுக்கு இடையே தூதுவனாய் இருக்கும் வேலை.இனி நம்மால் ஆகாதப்பா..என்றாள் மதி.

வெட்கமாய்ப் போயிற்று ஹஸ்தனுக்கு.மதிக்கு ஏதாவது கொடுத்தனுப்ப வேண்டுமே..?இங்குமங்கும் தேடினான் ஹஸ்தன்.சிறையில் என்ன இருக்கப் போகிறது?கடைசியாய் அவன் பார்வை தன் கை விரலில் இருந்த மோதிரத்தில் வந்து நிலைத்தது.அட இதை பரபரப்பில் மறந்தே விட்டேனே..என்று சொல்லியவாறு

மோதிரத்தைக் கழற்றி வாலிபனிடன் நீட்டினான்.வாலிபரே.. மதியிடம் இந்த என் மோதிரத்தை என் நினைவாகக் கொடுத்து விடுங்கள்..

அப்படியா..?அப்படியானால் இம் மோதிரத்தை என் விரலில் மாட்டிக்கொள்கிறேன்..இலவரசியை சந்திக்கும் போது கொடுத்து விடுகிறேன்.

வாலிபரே என்ன சொல்கிறீர்..இம் மோதிரத்தை உமது விரலில் நீர் மாட்டிக்கொள்கிறீரா?..என்ன உளறுகிறீர்? ஒரு காதலனின் மோதிரம் அவனது காதலிக்கு மட்டுமே சொந்தமாகும்.அவன் கைவிரல் மோதிரம் அவனின் காதலியின் விரலை மட்டுமே சேர வேண்டும்.அப்படியிருக்க நீர் என்ன பேசுகிறீர்?இன்று இளவரசி என் காதலி..நாளை மனைவி...எனவே நீங்கள் இம்மோதிரத்தை அணிய நான் சம்மதிக்க மாட்டேன்.

அதெல்லாம் இல்லை..நான் என் விரலில் மாட்டிக்கொள்வேன்..பிறகுதான் இளவரசியிடம் சேர்ப்பிப்பேன்

என்றபடியே ஹஸ்தனின் கையிலிருந்து மோதிரத்தை வெடுக்கெனப் பறித்தாள் மதி.

ஹேய்..என்ன செய்கிறாய்..அதிகப்பிரசங்கியாய் இருக்கிறாய்..கொடு மோதிரத்தை என்றபடி அவள் கையிலிருந்த மோதிரத்தைப் பறிக்க முயன்றான் ஹஸ்தன்.அப்படி மதியின் கைபிடித்து மோதிரத்தை இழுத்த போது பூங்கொடி போன்ற மெல்லிய மேனியை உடைய மதி அதிவீரனும் பலசாலியுமான அந்த ஆண்மகனின் இழுப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் மிக வேகமாக இழுபட்டு ஹஸ்தனின் நெஞ்சில் வந்து சாய்ந்தாள்.அது தானாக நிகழ்ந்துவிட்ட நிகழ்வு.சாய்ந்த வேகத்தில் மதி அணிந்திருந்த தலைப் பாகை அவிழ்ந்து வீழ்ந்து அவளின் கருனாகம் போன்ற தலைப் பின்னல் அவளின் முழுகில் வந்து வீழ்ந்தது.

ஒட்டியிருந்த மீசையும் பிரிந்து விழுந்தது.கட்டுக்குள்ளும் கச்சுக்குள்ளும் அடங்காமல் திமிறிக்கொண்டிருந்த அவளின் பெண்மையை மூடியிருந்த மேகலையும் அகன்று விழ அங்கே மதிபோன்ற மதியின் முகம் தெரிய அப்படியே அசந்து போனான் ஹஸ்தன்.ஹா..ஹா...இது என்ன நான் காண்பது கனவா அல்லது நினைவா?இளவரசி நீங்களா?மதி..மதீ..நீங்களேதானா?இது எப்படி சாத்தியம்?..

ம்....ஹஸ்தா..ஹஸ்தா..நனேதான்..நானேதான்..உங்கள் மதிதான்..ஹஸ்தா..அப்படியே உருகிப்போனாள் மதி.

மதீ..என் அன்பே என்றபடி..தன் மீது சாய்ந்தபடி இருக்கும் மதியை மேலும் இறுக அணைத்தான் ஹஸ்தன்.

அப்போது எப்போதாவது சாரளத்தின் வழியே உள்ளே நுழையும் தென்றல் உள்ளே நுழைந்தது.அப்படி நுழைந்த அத்தென்றல் அவர்களிருவருக்கும் இடையே நுழைந்து செல்ல நூலிழைகூட வழி இல்லாததால் தோற்றுப்போய் வந்த வழியே திரும்பிச் சென்றது.

தன்னை உணர்ந்தவளாய் சட்டென அவன் அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டாள் மதி.

மதீ..என் அன்பே என்றபடி தன் கையிலிருந்த மோதிரத்தை அவளின் வலது கரத்தைப்பிடித்து மோதிரவிரலில் மெள்ள மாட்டினான் ஹஸ்தன்.அவள் சம்மதமே என்று சொல்வதுபோல் அமைதியாகவே இருந்தாள். 

முடிந்தது..பரந்து விரிந்த குப்த ராஜ்ஜியத்தின் இளவலுக்கும் பெரும் புகழும் மாட்ச்சிமையும் கொண்ட பாண்டிய நாட்டின் இளவரசிக்கும் பெற்றோரும் உற்றாரும் இல்லாமல் சொந்தங்களோ உடன்பிறப்போ இல்லாமலும் மந்திரங்களோ மேள தாளங்களோ விருந்தோ கேளிக்கைகளோ இல்லாமல் மோதிரம் மாற்றிக் கொண்டு காந்தர்வ மணம்  முடிந்தது.ஹஸ்தனைப் பார்க்க காதல் கொண்ட மனதுடன் சிறைக்குள் நுழைந்த இளவரசி மதிவதனி... காதலியாக வந்த மதிவதனி..இப்போது ஹஸ்தனின் மனைவியாக மாறிப்போனாள்.இது விதியின் விளையாட்டல்லாது வேறென்ன?

இப்போது ..இவள் என் மனைவி..நான் இவளின் கணவன் என்று நினைத்தானோ என்னவோ ஹஸ்தன் மதியை இழுத்து அணைத்து உச்சிவகிட்டில் மெல்ல முத்தமிட்டான்.

அப்போது சிரையின் வாசல்புரம் காலடி ஓசை கேட்கவே..வைத்தியர் வந்து விட்டார்..நான் கிளம்புகிறேன் அன்பரே..இனி என்னை உங்களிடமிருந்து யாரும் பிரிக்க இயலாது..மீண்டும் உங்களைச் சந்திக்க வருவேன்

என்று மதி சொல்லவும் வைத்தியர்..தான் வந்துவிட்டதைத் தெரிவிக்க மெள்ளக் கனைப்பதற்கும் சரியாக இருக்கவே சிறையை விட்டு ஹஸ்தனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினாள் மதிவதனி.

கணவன் மனைவியாகி விட்ட ஹஸ்தனும்-- மதிவதனியும் இனி என்னவெல்லாம் சந்திக்கப் போகிறார்களோ..?பாண்டிய நாடு சந்திக்கப்போகும் அவலங்கள் என்னென்னவோ?காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..நன்றி..

தொடரும்...

Episode 19

Episode 21

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.