(Reading time: 23 - 46 minutes)

சுசீ  என்றாள்..

என்ன இளவரசி..?

சுசீ ..தாய்க்கும் தந்தைக்கும் தெரியாமல் ஹஸ்தனைச் சந்திக்க சிறைக்குச் செல்வது குற்ற உணர்ச்சியை தருகிறது சுசீ..

சிரித்தாள் சுசீ..இளவரசி இப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும்...தாய்க்கும் தந்தைக்கும் தெரியாமல் ஒருவரை விரும்பும்போது அவர்களுக்குத் தெரியாமல்தானே விரும்புபவரைச் சந்திக்க முடியும்?

...............

சரி வாருங்கள் இளவரசி...இப்போது நீங்கள் இளவரசி மதிவதனி இல்லை..நினைவில் வையுங்கள்..இப்போது உங்கள் பெயர் சந்திர சேனன்.வைத்தியரின் உதவியாளன்.

ஓஹோ..எனக்குப் பெயர் கூட வைத்தாயிற்றா?

ஆம்..இளவரசி..நான் பெயர் வைக்கவில்லை..அந்த முக்கியமானவர் வைத்த பெயர் இது.

ஓஹோ..அப்படியா?சந்திர சேனன்....பெயர் நன்றாகவே உள்ளது.

பேசிக்கொண்டே இருவரும் வைத்தியர் இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

வாலிபன் போன்ற வேஷத்தில் இருந்த இளவரசியைப் பார்த்து வைத்தியர் அசந்தே போனார்.அப்பா.. எப்படி இளவரசிக்கு இந்த வேஷம் பொருந்திப் போகிறது?அச்சு அசலாய் ஆண் போலவே அழகிய வாலிபர்போலவே உள்ளார்?என என்ணினார்.

வணங்குகிறேன் இளவரசி..

ஐயோ..வைத்தியரையா..இப்போது இவர் இளவரசி இல்லை..குப்த இளவரசருக்கு நீங்கள் சிகிச்சை தரும்  வேளையில் உங்களுக்கு உதவ வரும் உங்களிடம் மருத்துவம் கற்கும் உங்களின் மாணவர் இவர்..மறந்தும் மற்றவர்களுக்கு எதிரில் இவரை இளவரசி என விளித்து விடாதீர்கள்..இவர் பெயர் சந்திர சேனன்.நன்றாக நினைவில் வையுங்கள் என்றாள் சுசீ பதட்டமாக.

ஆம்..ஆம்..சரியாகச் சொன்னாய் சுசீ...என்றார் வைத்தியர் தன் தவறை உணர்ந்தவராக..

சரி வருகிறோம்...ஆண் உருவில் இருந்த இளவரசியோடு கிளம்பினார் வைத்தியர்.

சுற்றும் முற்றும் யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தபடியே மிகத் தாழ்ந்த குரலில்..இளவரசி ஜாக்கிரதை..மிகக் கவனமாக நடந்து கொள்ளுங்கள்..எதிலும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்..என்று வார்த்தைகளில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கிட்டத்தட்ட இளவரசியின் காதில் மட்டும் விழும்படி சொன்னாள் சுசீ.

அவள்  கூறியதைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையை அசைத்தாள் மதிவதனி.

வைத்தியரும் ஆணுருவில் இருந்த மதிவதனியும் சிறை நோக்கி நடக்கையில் வைத்தியர்..

சந்திரசேனா சிறைக்குள் நுழையும் வரை எதிர்படும் யார் என்ன கேட்டாலும் தாங்கள் பதில் சொல்ல வேண்டாம்.நானே அவர்களுக்கு பதில் தருகிறேன்.காரணம் நீங்கள் பதில் சொல்ல முயன்றால் உங்களின் பெண் குரல் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.பின்னர் அனாவசிய சந்தேகங்களுக்கு அது இடம் கொடுத்து விடும்

என்றார்.

அவரின் கூற்று சரிதான் என்பதை அங்கீகரிக்கும் விதமாக தலை அசைத்தாள் மதிவதனி.

வைத்தியர் கூறியது போலவே அவர்கள் சிறை வாயிலை அடைவதற்குள் பல பேர் வைத்தியரிடம் அவரோடு வரும் வாலிபனைப் பற்றி விசாரிக்கத் தவறவில்லை.காரணம் எப்போதும் வைத்தியர் ஹஸ்தனுக்கு சிகிச்சை அளிக்க சிறைக்குச் செல்லும்போது தனியாகவே செல்வது வழக்கம்.ஆனால் இன்று வாலிபர் ஒருவரோடு செல்வதே அதற்குக் காரணம்.

ஒருவழியாய் ஹஸ்தன் வைக்கப்பட்டிருக்கும் சிறை வாசலுக்கு வந்தனர் வைத்தியரும் சந்திரசேனன் என்ற பெயரொடு ஆணுருவில் வந்திருந்த மதிவதனியும்.

சிறை அமைந்திருந்த பகுதி மயான அமைதியாய் இருந்தது.ஆள் நடமாட்டமோ ஏன் பறவைகளின் ஒலியோ கூட இல்லாமல் கல் என்று இருந்தது.சிறை வாசலில் நின்றிருந்த மதிவதனிக்கு அந்த சூழல் ஓர் பயத்தை ஏற்படுத்தியது.மிக உறுதியான கனமான கம்பிகளோடு கூடிய சிறைக்கதவுகள்..அதில் பூட்டிய நிலையில் தொங்கும் மிகப் பெரிய பூட்டு.எப்பேர்ப்பட்டவனாலும் தப்பிக்க முடியாதென்பதை பறைசாற்றும் மிக உயர்ந்த சுவர்கள்.சிறையைச் சுற்றி கனத்த மதில் சுவர்கள்.பார்க்கவே அதி பயங்கரமாய்த் தோற்றமளிக்கும் சிறைக் காவலர்கள் என எல்லாமாய்ச் சேர்ந்து மதிவதனியைப் பயமுறுத்தின.ஹஸ்தன் அடைபட்டிருக்கும் சிறைக்கு வெளியே நின்றிருந்த மதிவதனி மெல்ல பார்வையை சிறைக்கு உள்ளே நுழையவிட்டாள்.மனம் படபடத்தது.ஹஸ்தனைத் தேடியது அவள் கண்கள்.போதிய வெளிச்சமின்றி மிகக் குறைவான வெளிச்சமே இருந்ததால் அவளின் பார்வைக்கு எதுவும் புலப்படவில்லை.உள்ளே  எவ்வித சப்தமும் இல்லாமல்  நிசப்தமாய் இருந்தது.சிறையின் காவலாளி ஒருவன் வந்து பூட்டைத் திறந்து கதவைத் திறக்க உள்ளே நுழைந்தார் வைத்தியர்.

படபடக்கும் இதயத்தோடும் ஒருவித பரபரப்போடும் தனது வலது காலை சிறைக்குள் பதித்தாள் மதிவதனி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.