(Reading time: 12 - 24 minutes)

04. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. 

அது ஆண் பெண் இருபாலாருக்குமான கல்லூரி .... எங்கும் கலகலப்பான பேச்சொலியும் .. வளையல் சத்தமும் பரப்பியும் வாசமும் .. கலர் கலர் பெண்களுமாய் ... தினம் தினம் திருவிழா கோலம் காணும் ..

அதுதான் சிவா படிக்கும் கல்லூரி ... ரவி கல்லூரியின் ஆணழகன் படிப்பு விளையாட்டு இரண்டிலும் மின்னுபவன் ... பெண்களிடம் சகஜமாக பழகுபவன் ....ஆனால் வரம்பு மீறாதவன் எல்லோர் முகத்திலும் அவனை காணும்போது மெல்லிய புன்னகை தோன்றும் ..

கல்லூரிக் காலத்தை “கனவுகளை நெஞ்சில் விதைத்து கண்களில் அறுவடை செய்யும் காலம்” என்று சொல்லலாம். சுவாரஸ்யங்கள், சவால்கள், சாதனைகள், வாழ்வுக்கான அடிப்படை புரிதல்கள் என உணர்ச்சிகளில் கலவையாகவும், அனுபவங்களின் அடர்த்தியாகவும் அமைந்து விடுகிறது ஒவ்வொருவருடைய கல்லூரி வாழ்க்கையும்.

காதல் கவிதைகள் காற்றில் உலவாத வராண்டாக்களையும், கலாட்டாக்களின் சுவாரஸ்யச் சிரிப்பொலிகள் நிரம்பாத வகுப்பறைகளையும் கல்லூரிகளில் காண்பது ஏறக்குறைய சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

கல்லூரி கற்கும் பொற்காலங்களில் சிலர் சிகரெட், கஞ்சா, மது போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணமோ பொழுது போக்கிற்காகவும், தன் நண்பர்கள் முன் நான் மட்டும் உபயோகிக்காமலிருந்தால் தனக்கு கேவலம் என்றும், மனக்கவலைகளை மறக்க என்றும் பல்வேறு அற்பமான காரணங்களை முன் வைக்கின்றனர். 

புகையிலை ஒழிப்பு நாள் என்று அக்டோபர் 11-வது நாளில் மட்டும் எதிர்ப்பை இளைய சமுதாயம் தெரிவித்துவிட்டு நம் கடமை முடிந்தது என்று உள்ளனர். போதைகளின் விளைவை பெரும்பாலானோர் அறியவில்லை. 

இந்த புகைப்பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதனை உபயோகிக்கும் மனிதனின் வாழ்க்கையை இப்பழக்கம் ஒவ்வொரு முறையும் 15 நிமிடம் குறைத்து விடுகிறது. இதனை தொடச்சியாக பிடிக்கும் மனிதன் தன் வாழ்நாளில் 7 ஆண்டுகளை இயற்க்கையாக இறப்பதற்கு முன் இழந்து விடுகிறான். 2020 – ம் ஆண்டில் மிகப்பெரிய ஆள்கொல்லி நோயாக மாறிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளார்கள். உலகம் முழுவதும் 35 லட்சம் பேர் இப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணிக்கின்றனர். இந்த நச்சுப்புகையை அருகிலிருந்து சுவாசிப்பவருக்கு ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பிற நோயால் பாதிப்படைகின்றனர். வளர்ந்துவிட்ட நாடாகிய அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரம் சிறுவர்கள் இப்பழக்கத்திற்கும் இந்தியாவில் 2 கோடி சிறுவர்கள் இப்பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர். 

இப்புகையில் உள்ள நிகோடின் போன்ற நச்சுபொருள் மனிதனின் இரத்தத்தில் கலந்து உடலுறுப்புகள் பாதிக்கப்படைகின்றன. விரைவிலேயே மலட்டுத் தன்மையை அடைகிறார்கள். இந்த சிகரெட் விற்பனையில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. 5 ஆயிரத்து 500 கோடி இதன் மூலம் சம்பாதிக்கிறது. ஆனால் புகைப்பதால் வரும் நோய்க்கு செலவிடும் தொகை 13 ஆயிரத்து 500 கோடியை மக்களிடமிருந்து வசூலிக்கிறது.   

இவ்வாறு மனிதனின் உயிரை அவன் அறியாத விதத்தில் பறிக்கும் நஞ்சை, பலர் அமிர்தமாக எண்ணி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து, தன் முதுமைப்பருவத்தை நோயினால் கழிக்கின்றனர். 

இப்படி பட்ட தீய பழக்கத்தால் தன்னையும் தன் நண்பர்களையும் கெடுத்துக்கொண்டு இருப்பவன் தான் சுரேஷ் ..

வசதியான வீட்டுப்பையன் பணம் தண்ணிபோல் விளையாடுகிறது செலவு செய்யும் பணத்திற்க்காக இவனை சுற்றி ஒரு காக்கை கூட்டம் என நம்ம சினிமா வில்லன்போல் ஒரு பேர் அவனுக்கு ...

சிவாவுக்கும் அவள் தோழிகளுக்கும் சுரேஷ் கூட்டத்தை கண்டாலே அலர்ஜி ... போதையின் மயக்கத்தில் அவர்கள் பெண்களை இழிவு படுத்தி பேசுவது மிகவும் அவமானமாய் இருக்கும் 

அவனுக்கு ஏனோ ரவியை கண்டாலே பிடிப்பதில்லை அவனை எல்லோரும் எப்போதும் கொண்டாடுவதும் .. பெண்கள்கூட ரவி இருக்கும் இடம் பாதுகாப்பு என்று சொல்லுவதும் இவனுக்குள் பகைமை வளர்த்தது ..

அன்று ஒரு நாள் ...

அந்த கல்லூரியில் கெமிஸ்ட்ரி lab கடைசி ப்ளாககில் தான் உண்டு ரசாயன திரவங்கள் உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு ..

சிவாவும் அவள் பிரின்ட்ஸும் ஒரு ரிப்போர்ட் சப்மிட் செய்துவிட்டு வரும்போது சாயங்காலம் கிளாஸ் முடியும் நேரம் .. அந்த ப்ளாக் கடந்து வரும்போதே தூரத்தில் மரத்தடியில் சுரேஷ் காங் பார்த்துவிட்டார்கள் ... சரி தலை குனிந்து அமைதியாக சென்றாள் பிரச்சனை வராது என்று எண்ணி இவர்கள் சென்றார்கள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.