(Reading time: 9 - 18 minutes)

"ரொம்ப வலிக்குதா?"

"இல்லை மசாஜ் பண்ண மாதிரியே இருக்கு!"

"ஏங்க...வேகமாக போனீங்க?"

"நான் எங்கே போனேன்!அதுவா,கூட்டிட்டு போச்சு!"

"..............."

"நீ சுப்பையா அண்ணனை கூப்பிட்டு விட்டு,கொஞ்ச நேரம் வெளியே இருக்கியா செல்லம்!!நான் ப்ரஷ் ஆகிட்டு வந்துடுறேன்!"-அவள் தலையசைத்துவிட்டு சென்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றாள் யாத்ரா.

அவன் குளித்தவிட்டு,தனது புத்தக அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

"சாப்பிடுறீங்களா?"-அவளது குரலில் திடுக்கிட்டவன் புன்னகைத்தப்படி,

"ம்..."-என்று தலையசைத்தான்.

அவள் அவனுக்கு உணவு எடுத்துவர சென்றாள்.

சில நொடிகளில் திரும்பி வந்தாள்.அவன் தனது கைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

எடுத்து வந்த உணவை மேசையில் வைத்தவள்,முதலில் சில மாத்திரைகளை அவனுக்கு தந்தாள்.

அதை வாங்கி போட்டுக் கொண்டவனிடம்,உணவை நீட்டினாள்.

அவனிடமிருந்து கேலியான ஒரு பார்வை வெளிவந்தது.

"என்ன?"

"விழித்தப்படி தூங்குறீயா?"

"என்ன?"

"பார்...எவ்வளவு பெரிய கட்டு!நான் எப்படி சாப்பிடுவேன்!"-உண்மையில்,அவன் இடக்கை பழக்கம் உள்ளவன்.

"ஊட்டிவிடு!"-அவள் மெல்ல புன்னகைத்தப்படி,சப்பாத்தியை பிய்த்து அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

தன்னவளின் முகத்தையே பார்த்தப்படி அவனும் உண்ண ஆரம்பித்தான்.

நான்கு சப்பாத்தி சாப்பிட்டிருப்பான் திடீரென்று,"போதும்!"என்றான்.

"இன்னும் ஒண்ணு!மதியம் கூட சாப்பிடவே இல்லை!"

"ப்ளீஸ்...ப்ளீஸ்!போதும்!"-சிறு குழந்தையை போல அவன் அடம்பிடித்தான்.

"இதான் கடைசி!"

"ப்ளீஸ் போதும்மா!"-அவன் கெஞ்சவும் அவள் அவனது வேண்டுதலை ஸ்வீகரித்தாள்.

"தூங்கிடாதீங்க!கொஞ்ச நேரம் கழித்து வருவேன்!மாத்திரை சாப்பிடணும்!"

"ம்..."-அவள் வெளியே சென்று கதவு மூடப்படும் வரை பொறுமை காத்தான்.அவள் சென்றது உறுதியானதும்,கட்டிலைவிட்டு எழுந்தவன்,டிராவை திறந்தான்.

அதனுள் அது இருந்தது!!!

அது....இளவரசர் ஆதித்யா வர்மரின் புத்தகம்!!!

அதை கையில் எடுத்தவன்,விழிகள் அப்புத்தகத்தையே வெறித்தன....

பழங்கால புத்தகம்!!!முகப்பு முழுதையும் ஆதவனின் சின்னம் சூழ்ந்திருந்தது!!!அதற்கு மேல் சிங்கத்தின் முகம் சிறிய அளவில் பதிக்கப்பட்டிருந்தது!!

சுற்றும் முற்றும் புத்தகத்தை பார்த்தான்.அது திறப்பதற்கான வழியே தெரியவில்லை.ஒரு கட்டையை போல இடைவெளி அற்று இருந்தது.

புத்தகம் என்பதற்கு ஒரே அத்தாட்சி!!மேல் பக்கமாய் காணும் போது தெரிந்த சுவடிகள் தான்!!

"ச்சே.."-என்று அதனை டிராவில் வைத்து பூட்டினான்.

காலையில் அவன் சந்தித்த நிகழ்வுகள் யாவும் நினைவு வந்தன.பைராகியின் வழிக்காட்டுதலுக்கு இசைந்து அவர் கூறிய வழி நடந்தவன் சந்தித்து அந்த கோவிலை தான்!!!

அந்த ஏழடி சிவலிங்கத்தை கண்டவன்,உறைந்துப் போய் நின்றான்.

பல வருடங்களாய் ஏற்பட்ட உறவு போன்ற ஒரு மாயை மனதுள்!!

லிங்கத்தின் அருகே சென்றவன் கையால் அதன் மேல் படிந்திருந்த தூசியை விரட்டினான்.

நெற்றிக்கண் போன்ற வடிவம் அதில் பொறிக்கப்பட்டிருந்தது!!

தன் கையால் செதுக்கியதுப் போன்ற உணர்வு!!!

குழம்பி போய் நின்றவனது கவனத்தை ஈர்த்தது அந்த சிங்க கர்ஜனை!!மனதில் ஏனோ அச்சம் தோன்றவில்லை!!முக இறுக்கமடைய திரும்பினான்.நேத்திரங்களில் ஒருவித சினம்!!!

அந்த சிம்மமும் இவனுக்கு சளைக்கவில்லை.மீண்டும் கர்ஜித்தது!!மண்டபத்தைவிட்டு கீழிறங்கி வந்தவனது கவனத்தை ஈர்த்தது அந்தப் புத்தகம்!!

சில நொடிகள் அதையே உற்று நோக்கினான்.மீண்டும் கர்ஜனை!

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

திடீரென அவன் மேல் பாய்ந்தது அது!!அந்த தாக்குதலை அவன் எதிர்நோக்கி இருப்பான் என்றே யூகிக்கலாம் சட்டென மண்டியிட்டு விலகினான்.முகத்தில் அந்த சினம் குறையவில்லை!!!திரும்பி,அதனை பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.