அனிக்கு மற்றவர்களைப் பற்றிய நுணுக்கமான கணிப்புகள் எதுவும் இல்லை போலும். வீட்டில் எல்லோரும் செல்லம் கொஞ்சுகிற மாதிரி வெளியில் இருக்க மாட்டார்கள் என்று எப்படி புரிய வைப்பது? சுடுசொல் கேட்டு அறியாத அவளை யாரும் வார்த்தைகளால் காயப் படுத்தி விடுவார்களோ? என்று ஏனோ அப்போது தன்னையறியாமல் அவன் மனதிற்குள் அச்சம் தோன்றியது .அவனுடைய இந்த அச்சம் நிஜமாகப் போகிறது என்றும் அதற்கு காரணமாக ஷைனி தான் இருக்கப் போகிறாள் என்பதும் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வீட்டில் விசேஷம் என்றாலே சிறியவர்களுக்கு ஏற்படும் உற்சாகத்தில் அனி அன்று திளைத்திருந்தாள். கிறிஸ் அண்ணாவுக்கு இணையான அன்பைக் கொட்டும் அவளுடைய தீபன் அத்தானுடைய நிச்சயதார்த்தம் அல்லவா? பிறகு அவளுக்கு மகிழ்ச்சிக்கு குறைவுதான் ஏது?. அடர்பச்சையும் தங்க பார்டரும் கொண்ட சல்வாரில் இருந்தவள் காதில் குட்டியூண்டு வைரங்கள் மின்னின. முகத்தில் சன்னமாக ஒற்றியிருந்த பவுடர் ஏற்கெனவே காணாமல் போயிருந்தது. அடிக்கடி மேடைக்குப் போய் தீபனுடனும், ப்ரீதாவுடனும் உரையாடிக் கொண்டு வந்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
முதலில் அனி அடிக்கடி தீபனின் அருகே வலம் வந்ததைப் பார்த்து ப்ரீதா அண்ணியிடம் முகச் சுளிப்புத் தோன்றியதைக் கவனித்தான். அது பொதுவாக எல்லா மனைவிமார்களுக்குத் தோன்றும் உரிமையுணர்வு தான் என்பது இவனுக்கு புரிந்தது. பிறகு அண்ணன் அண்ணியிடம் அவளை அறிமுகப் படுத்திய பின்தான் அவர்களின் முகம் சாதாரணமாக ஆகியது. அப்படி என்னவென்று அனியை அறிமுகப் படுத்தியிருப்பான் என்று இவனுக்குத் தான் நன்றாகத் தெரியுமே.....
" இது எங்க வீட்டு கடைக் குட்டி, அத்தைப் பொண்ணு. என் குட்டித் தங்கை என்று தான் சொல்வான்" வீட்டில் வரும் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் போது எப்போதும் அப்படிச் சொல்வது வழக்கம். இப்போது சில நாளாக அப்படி அவன் சொல்லும் போதெல்லாம் "டேய் அண்ணா, ப்ளீஸ் அவளை தங்கச்சினு சொல்லி முறையை மாத்தாதடா......என்றுச் சொல்லிவிடலாமாவென இவனுக்கு தோன்றும், தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வான்.
'அதான் நான் அப்படி நினைச்சுக்கிட்டேன் அத்தான்"........... என இவன் பல்வேறு சிந்தனைகள் கலைந்து அவள் பேசுவதைக் கவனிக்கும் முன் அவள் ஷைனி அவளிடம் என்னவெல்லாம் கேட்டாள் என்று ஏற்கெனவே பட்டியலிட்டு முடித்திருந்தாள்.
" அப்படின்னா , யாரும் என்னைப் பத்திக் கேட்டா, நீங்க என்னை கிண்டல் செய்ய ஆரம்பிச்சுடுவீங்க அப்படி தானா மேடம்"
"மேடமா...........நான் ஒண்ணும் மேடமில்ல, எல்லாம் அந்தப் படத்தால வந்தது.." மறுபடி திட்டுகிறானே என்று தோன்ற குரல் தானாக கம்ம முனங்கினாள் அவள்.
"எந்த படம்?"
"லாஸ்ட் வீக் அந்த சல்மான்கான், மாதுரி தீக்ஷித் படம் டிவில பார்த்தேனா........"
...............
"அதில இந்தப் பாட்டு இருக்குமே.. "தீதி தேரா தேவர் தீவானா". மெலிதாகப் பாடியவள்............அந்தப் படம்" அதில அப்படித்தான் இருந்தது.
அவள் பாடிக் காட்டியதைப் பார்த்து வந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டவனாக, "அப்புறம்?" என்றதும்
அவன் ஆர்வமாக கேட்கிறான் என்று அவள் தொடர்ந்தாள்.
"ஷைனிக்கா நல்ல ஹைட் , பார்க்கவும் நல்லா அழகா இருந்தாங்களா? அதான் நீங்க சல்மான், அவங்க மாதுரின்னு ஹி ஹி ... இனிமேல் சொல்ல மாட்டேன் சரியா?
"நல்லா ஜோடிச் சேக்கிற நீ." மனதிற்குள் நொந்துக் கொண்டாலும் இனியும் திட்டினால் சரிவராது என நினைத்து அவளிடம் "சரி" எனச் சொல்லிப் புன்னகைத்தான்.
ஏதோ ரகசியம் சொல்வது போல அவனருகே வந்தாள் .
ரகசிய குரலில் அவள் பேசியது அவனுக்கு சுவாரசியமாக இருந்தது.
"அத்தான்"
"என்ன?" அவனும் அதே போல பேசினான்.
"என் கிட்ட ஜீவன் பத்தியும் நிறைய கர்ள்ஸ் கேப்பாங்க"
"ம்ம்"
"அதெல்லாம் கூட பரவாயில்லை இப்ப கொஞ்ச நாளா ஜீவன் எங்கிட்ட என் ஃபிரண்ட் மிலி பத்தி கேட்டுட்டே இருக்கான். அப்படின்னா......... "அவள் தொடரும் முன்னே
"ஓடியே போயிடு பிசாசு என் அண்ணாகிட்ட என்ன சொல்லிகிட்டு இருக்க நீ?" என்று இவர்கள் ரகசிய உரையாடலில் இடையே வந்து நின்று ஃபுல் ஸ்டாப் போட்டான் ஜீவன்.
விட்டால் கோபத்தில் அவளை அடித்து விடுவானோ எனத் தோன்றியதால் சட்டென்று அனி அங்கிருந்து நகர்ந்தாள். வெளியேச் செல்லும் முன் அவனுக்கு பழிப்புக் காட்ட மறக்கவில்லை அவள்.
:அவ ஒரு லூசுன்னா.......அவ சொல்லுறத நீ நம்பாத.....' என்றான்.
"ம்ம் அப்படியா, அப்ப நீ சொல்லு, நீ சொல்லுறதை நான் நம்புறேன், யார் அந்த மிலி? ."
"ஏய் என்னடா.......... ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருக்கிறீங்க? .......கேட்டவாறு உள்ளே வந்த தீபனிடம்
"அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா சும்மா தான்" என ரூபன் சொல்ல,