தன்னைப் பற்றி போட்டுக் கொடுத்து விடுவானோ என அது வரைப் பயந்துக் கொண்டிருந்த ஜீவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான் .
தனது அண்ணன்கள் இருவரும் அவனுக்குப் புரியாத ஆனால், ஏதோ வெகு முக்கியமான விபரங்களைப் பற்றிப் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்க.........
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
சட்டென்று பேச்சிலிருந்து திசை திரும்பிய தீபன் அவனிடம்
"என்னடா?" எனக் கேட்க,
"நீங்க ரெண்டு பேரும் இப்போ கொஞ்ச நாளா அடிக்கடி மீட்டிங்க் போடுறீங்களே அததான் பார்த்துட்டு இருக்கேன்.........'
"எல்லாம் அண்ணன் கல்யாண விஷயம் தான்" பதில் சொன்னான் ரூபன்.
"பொய் சொல்லாதீங்க............... உங்க ரெண்டு பேரையும் நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் ஏதோ சரியில்லை.......... ரூபன் அண்ணா படிக்க போறேன்னு சொன்னான் ஆனா அப்பாக் கிட்ட கோர்ஸுக்கு பணமே வாங்கல, இப்போ என்னன்னு பார்த்தா டிக்கெட் செலவும் அப்பாக்கிட்ட கேக்கல, உண்மையிலே நீ படிக்கதான் போறியா இல்ல முன்ன மாதிரி எங்களையெல்லாம் விட்டுட்டு எங்கேயும் போயி இருக்கப் போறியா?"
"அட இதப் பாருடா, சின்னப் பையன்னு நினைச்சுகிட்டு இருந்தா, என்னல்லாம் கவனிச்சுட்டு இருக்கான்." வியந்தான் தீபன்.
தம்பியின் கேள்வியில் அவனுடைய ஆதங்கத்தில் அவன் தன்னுடைய பிரிவை விரும்பவில்லை என்பதில் ரூபனுக்கு ஏற்பட்ட ஆறுதலை வார்த்தையில் வடிக்க முடியவில்லை, அவனை தோளோடு அணைத்துக் கொண்டான். அவனிடம் என்னப் பதில் சொல்லவென்று அவனுக்குப் புரியவில்லை.
"ஏய் ஜீவா, அவன் அப்படி நம்மளை விட்டுட்டு போறதா இருந்தா நான் அவனை விடுவேனா? நீ ஏண்டா டென்ஷன் ஆகற? சரி நான் சொல்றேன், அவன் ரெண்டு வருஷம் படிக்க போகலை வேலைக்கு போறான். திரும்ப வந்து பிசினஸ் ஆரம்பிக்கப் போறான். இப்போ வேலைப் பார்த்துட்டு இருக்கிற இடத்தில ஏற்கெனவே பேசி வச்சிருக்கான். அவங்களுக்கு வர்ற ஆர்டர்ல சில வேலைகள் வெளியே கொடுத்து தான் செஞ்சு வாங்குவாங்களாம். அது போல முதல்ல சின்னதா ஒரு யூனிட் ஆரம்பிச்சு மெது மெதுவா பிசினஸை வளர்த்துக்கலாம்னு ஐடியா........... "
"அதெல்லாம் எப்படி சரிப்பட்டு வரும் பிசினஸ்னா எவ்வளவு பணம் வேணும், அனுபவம் வேணும். உனக்கு விளையாட்டா இருக்குதான்னா?"
தம்பியின் கவலையும் அக்கறையும் அவன் கேள்வியில் புரிய வர அவனுக்கு புரிய வைத்து விட வேண்டுமென்ற நோக்கில்
" அதெல்லாம் நான் யோசிக்காம செய்வேனா? இந்த ரெண்டு வருஷமும் வேலைப் பார்க்கிறது அது ரெண்டு விஷயத்துக்காகவும் தானடா.......இப்போ வேலைப் பார்க்கிற ஃபேக்டரிலயும், சேல்ஸ் , அட்மினிஸ்ட்ரேஷன் எல்லாம் எனக்கு அத்துப்படி ஆயிட்டு.இன்னும் ரெண்டு வருஷம் வேலைன்னு சொன்னாலும் அது ஒரு வகையில் எனக்கு நிர்வகிக்கிறதுக்கான டிரெயினிங்க் தான். கூடவே நிறைய சம்பளமும் கிடைக்குதே. பிசினஸ் ஆரம்பிக்க அந்த தொகையை ஒரு பக்கம் சேர்த்து வைப்பேன், அப்பாவும் ஹெல்ப் செய்யறேன்னு சொல்லியிருக்காங்க , பாங்க் லோனும் கிடைக்கும். அதைத்தான் அண்ணா கூட சேர்ந்து அப்பப்போ ப்ளான் செய்வோம்.எப்படி பிசினஸ் ஆரம்பிக்கிறது, கடனையெல்லாம் சீக்கிரமா எப்படி அடைக்கிறது, பிசினஸ் எப்படி எக்ஸ்பாண்ட் செய்யிறதுன்னு தரோவா ப்ளான் செஞ்சு வச்சிருக்கேன் சீக்கிரம் செட்டில் ஆகணும்டா" ரூபன் சொன்ன கடைசி வரிகளை கவனிக்காமல்,
"அப்படின்னா வீட்டுல என்னையைத் தவிர வேற எல்லாருக்கும் தெரியும். நான் கேட்கலைன்னா என் கிட்டயும் சொல்லியிருக்க மாட்டீங்கள்ள..."
"இல்லடா, அப்படியில்ல......."
தம்பிகள் இரண்டு பேரும் பேசி சமாதானம் ஆகி விடுவார்கள் என்றுத் தோன்ற அங்கிருந்து நகர்ந்தான் தீபன்.
இரவு ஆகியிருந்தது கடந்த மாதத்தில் ஒரு நாள் அத்தை வீட்டிற்கு சென்றபோது கவனிப்பாரற்றுக் கிடந்த அனியின் துப்பட்டாவை கடத்தி வந்திருந்த ரூபன், அதை தன் தலையணைக்கு மேலாக பரப்பி தலைச் சாய்த்துப் படுத்திருந்தான். என் மனதை திருடி விட்டு இப்போது என்னையே திருடனாக்கி விட்டாள் என்று தன்னவளைக் செல்லமாக உள்ளத்தில் கடிந்தவாறு அயர்ந்து உறங்க ஆரம்பித்தான்.
கற்றுக் கொடுங்களேன் .
யாராவது அவளுக்கு
களவு செய்வது எப்படியென்று
கற்றுக் கொடுங்களேன்.
வரை முறையில்லாமல்
என்னை முழுதுமாய்
களவு செய்துப் போகிறாள்.
கடிந்து கொள்ளவும் இயலாமல்
எப்போதும்
புன்னகை ஆயுதம் கொண்டு
என்னை கொன்றுப் போகிறாள்.
உயிர்வதைச் செய்யாமல்
உள்ளம் திருடும் கலையை
யாராவது அவளுக்கு
கற்றுக் கொடுங்களேன்.
தொடரும்
{kunena_discuss:970}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.