(Reading time: 10 - 19 minutes)

09. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

காதல் வந்தால் கால் விரல்கள் கோலமிடுமோ......

கை விரல்கள் பல் கடிக்க ஆசைப்படுமோ........

பிளான் 1 படு பயங்கர சொதப்பலில் முடிய, அடுத்து என்ன செய்வது என்று கெளரியிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தபடியே தன் அலுவலகம் நோக்கி சென்றாள் ஸ்வேதா. அன்று வேறு எதைப்பற்றியும்  யோசிக்கவிடாமல் வேலை அவளை இழுத்துக்கொண்டது.  மதிய உணவிற்குக்கூட எழுந்து போக நேரமில்லாமல் தன் தோழி ஜூலியிடம் கூறி பர்கரை வாங்கி சாப்பிட்டாள்.  அனைத்து வேலைகளையும் முடித்து எழும்போது ஆ… என்று இருந்தது.  ஒரு நாளைக்கே இந்தப் பாடா.  இருக்கற மூணு மாசத்துக்குள்ள மூணு வருஷ வேலைய வாங்கிடுவாங்க போலையே,  ரொம்பப் பாவம் ஸ்வேதா நீ, தன்னை நினைத்து  தானே கவலை கொண்டாள்.

மாலை தன்னுடைய அலுவலகம் விடும் நேரம் ஹரிக்குத் தெரியாததால், காலையில் சொதப்பிய பிளானை மாலையில் அரங்கேற்றலாம் என்ற ஐடியாவில் இருந்தாள் ஸ்வேதா. எப்படியும் ஹரிக்குத் தான் அழைத்து சொல்லாமல், கிளம்பும்  நேரம் தெரியப்போவதில்லை, காலை போல மதியம் ஒரு மணியிலிருந்து அவனால் இருக்கும் வேலையை விட்டு விட்டு அலுவலகத்தின் வாயிலில் நிற்க முடியாது.  ஸோ கண்டிப்பாக மாலை ஹரிக்கு பல்பு  confirm, என்று நினைத்து இருந்தாள்.  ஆனால் பாவம், அவளின் அமெரிக்க பாஸ் மறுபடி ஸ்வேதாவின் பிளானில் விளையாடி விட்டார்.  கொடுத்த காசுக்கு மேலேயே கூவும் ரகம் போலும் அவர்,  ஸ்வேதாவை வேலை கொடுத்து பிழிந்து எடுத்து விட்டார்.  இருக்கும் சோர்வில்  எங்கிருந்து ஹரியைத் தவிர்த்து விட்டு ட்ரைனிலும், நடந்தும் போக, ஒழுங்கு மரியாதையாக ஹரிக்கு அழைத்து தான் இன்னும் அரை மணிநேரத்தில் கிளம்புவதாகக் கூறி  தன்னை வந்து கூட்டிக்கொண்டு போக முடியுமா என்று கேட்டாள்.  அதற்காகவே காத்திருந்த ஹரி உடனே அவள் அலுவலகம் வந்தடைந்தான்.  அவளின் களைப்பைப் பார்த்து  வம்பு எதுவும் இழுக்காமல் சமர்த்துப் பையனாக  பக்கத்தில் இருந்த ஸ்டார்பக்ஸில் நிறுத்தி காஃபி வாங்கிக்கொடுத்து பின்னர் அவளின் அபார்ட்மெண்டில் கொண்டு விட்டு, மறுநாள் காலை சந்திக்கலாம் என்று கூறிச் சென்றான்.

“ஹே ஸ்வேத் வந்துட்டியா, முதல் நாள் இன்று.....   எதுவோ ஒன்று.....  அப்படின்னு ஜாலியா பாடிட்டே என்ஜாய் பண்ணினியா”

“பாட்டா நீ வேற தீபா, பாத்ரூம் போகக் கூட டைம் இல்லை.  வேலை நெட்டி முறிச்சுடுத்து.  அந்த டாம் என்ன தீபா இப்படி போட்டு பாடாப் படுத்தறான்.  மூச்சு விடக்கூட நேரம் இல்லாம போட்டு படுத்திட்டான்”

“ஹ்ம்ம் அவன் அப்படித்தான் ஸ்வேத்.... யாருடா நல்லா வேலை செய்ய நம்ம கைல மாட்டுவாங்கன்னு பார்ப்பான்.  அப்படி மாட்டின உடனே போட்டு அத்தனை வேலையும் அவங்க தலைல கட்டி அவங்களை அதை முடிக்க வச்சுதான்  விடுவான்.  நீ இருக்கற மூணு மாசத்துல முடிஞ்சா நாலஞ்சு project டெலிவரி கொடுத்துடுவான்.  நீ இப்போவே உன்னோட பார்ட் என்னவோ அது மட்டும்தான் பண்ண முடியும்ன்னு சொல்லிடு.  அதே மாதிரி அங்க இருந்து வரும்போதே ஒண்ணு ஒண்ணுத்துக்கும் டெட் லைன் பிக்ஸ் பண்ணிட்டு தானே வந்த.  அதையே கண்டின்யூ பண்ணு.  அவன் விட்டா மூணு மாச வேலைய  ஒரு வாரத்துல முடிக்க வச்சுட்டு அடுத்தத ஆரம்பிக்க சொல்லுவான்”

“ஹ்ம்ம் அப்படித்தான் பண்ணனும் தீபா.  இன்னைக்கு முதல் நாள், எடுத்த உடனே எதிரா பேச வேண்டாமேன்னு சும்மா இருந்தேன்.  நாளைக்கு கிளியரா சொல்லிடப் போறேன்”

“அப்பறம் ஹரி சாப்பிட வரேன்னு சொன்னாரா.  டின்னர்க்கு என்ன பண்ணலாம்....”

“நான் எதுவும் கேக்கலையே தீபா”

“என்ன இது ஸ்வேதா...... காலை, மாலை ரெண்டு வேளையும் டிரைவர் வேலை பார்த்து உன்னை பத்திரமா கொண்டு வந்து விட்டிருக்கார்.  அதுக்காகவானும் ஒரு கர்ட்டஸிக்கு அவரை சாப்பிட கூப்பிட்டிருக்கலாம் இல்லை”

“நானா அவரை வர சொன்னேன்... அவரே வாலன்டியரா வந்ததுக்கு நான் எதுக்கு சமைச்சு போடணும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“சரிம்மா நீ ஒண்ணும் சமைக்க வேண்டாம்.  நானே பார்த்துக்கறேன்”,என்று கூறி ஹரிக்கு அழைத்து பேச ஆரம்பித்தாள் தீபா.

ஆஹா சாதாரணமாவே இவ சமையலை அவன் ஆஹா ஓஹோன்னு புகழ்வான். இதுல இவளே அவனைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டா இன்னும் அவளை புகழ்ந்து தள்ள ஆரம்பிச்சுடுவானே.  அதனால ஹரி டின்னருக்கு வரேன்னு சொன்னா உடனே நாம தீபாக்கிட்ட சமாதானக் கொடியைப் பறக்க விட வேண்டியதுதான் என்று நினைத்தபடியே உள்ளே சென்று உடை மாற்றி வந்தாள்.  ஸ்வேதாவின் நல்ல வேளையாக அவள் வெள்ளைக் கொடி  பறக்க விடுவதை ஹரி தடுத்து விட்டான்.  அவனுக்கு கால் இருப்பதால் தன்னால் வர முடியாது என்று தெரிவிக்க ஸ்வேதாவும், தீபாவும் தங்களுக்கு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுவிட்டு படுக்கப் போய்விட்டார்கள்.

தீபா அவள் அறைக்கு சென்றதும் ஸ்வேதா தன் ஆதங்கத்தைக் கொட்ட கௌரியை அழைத்தாள்.

“ஹலோ மன்னி.  ஆஃபீஸ் கிளம்பிட்டேளா.  டைம் ஆயிடுத்தா.  டிஸ்டர்ப் பண்ணிட்டேனா....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.