(Reading time: 10 - 19 minutes)

ஹேய் ஸ்வேதா எப்படி இருக்க.  ஆபீஸ் கிளம்பியாச்சு.  உங்கண்ணா நான் இருக்கற  சைஸ் பார்த்து கண்ணு வச்சுட்டார்.  அதனால இளைக்கறதுக்காக  ஒரு வாரமா ஆஃபீஸ் நடந்து போயிட்டு நடந்து வரேன்”

“அச்சோ என்ன மன்னி அவன் சொல்றான்னு..... கார்த்தால அவதி அவதியா வேலைய முடிச்சுட்டு உடனே நடந்து வேற போகணுமா.... எதுக்கு இப்படி  கஷ்டப்படறேள்”

“ஹே ரொம்பக் கவலைப்படாத.  அப்படி எல்லாம் ஒண்ணும் கஷ்டம் இல்லை.  இங்க இருந்து இருவதுலேர்ந்து இருவத்து அஞ்சு நிமிஷம் ஆகும் அவ்வளவுதான்.  வேகமா நடந்தா பதினைஞ்சு நிமிஷத்துலயே போய்டலாம்.  சரி அதை விடு.  இன்னைக்கு பிளான் எப்படி வொர்க் அவுட் ஆச்சு.  ஹரி சூப்பரா பல்பு வாங்கினானா...”

“எங்க மன்னி நான்தான் எப்பவும் போல பல்பு வாங்கினேன்.  நீங்க என்ன பிளான் போடுவேள்ன்னு அவருக்கு நன்னாத் தெரிஞ்சுருக்கு.  நான் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி கதவைத் திறந்தா... வாசல்ல நிக்கறார்”

“அடப்பாவி ஆனாலும் ரொம்ப உஷாரா இருக்கானே.  ஆனா நான் இதை யோசிச்சு இருக்கணும் ஸ்வேதா.  எனக்கும் அவனுக்கும் சண்டை வந்தா... நான் பண்ற முதல் வேலை, வெளிய போறச்ச அவனை விட்டுட்டு போறதுதான். அதான் ஈஸியா கேட்ச் பண்ணிட்டான்.  சரி விடு, அடுத்த பிளான் அவன் கண்டுபிடிக்க முடியாத மாதிரி போட்டுடலாம்”

“மன்னி பிளான் எல்லாம் விட்டுட்டு பேசாம அவரை மன்னிச்சு விட்டுடலாமா.......  அவர் மேல கோவமா இருக்கறா மாதிரி ஆக்டிங் விடறதால என்னால அவர்க்கிட்ட பேச முடியலை.  ஆனா இந்த தீபா எனக்கும் சேர்த்து அவரோட பேசித் தள்றா.  அதோட இல்லாம அவ சமையலை வேற புகழ்ந்து தள்றார்”

“என்ன ஸ்வேதா பொறாமையா.... உனக்கு கஷ்டமா இருந்தா நீயும் ஹரிக்கு சமைச்சு போட வேண்டியதுதானே”

“இன்னைக்கு நான்தான் கார்த்தால டிஃபன் பண்ணினேன் மன்னி.  மொதல்ல ஒண்ணுமே சொல்லலை.  அப்பறம் கையெல்லாம் அலம்பிண்டு வந்தப்பறம் சூப்பரா இருக்குன்னு சொன்னார்”

“நீ இழுத்து இழுத்து சொல்றதைப் பார்த்தா அவன் வெறுமன சூப்பரா இருக்குன்னு சொன்னா மாதிரித் தெரியலையே.  என்ன இழுத்து வச்சு கிஸ் எதானும் அடிச்சுட்டானா....”

“அச்சோ என்ன மன்னி இப்படி எல்லாம் பேசறேள்.  அவர் அப்படி எல்லாம் ஒண்ணும் பண்ணலை......”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்...

“என்னமோம்மா  ஒண்ணும் நடக்கலைன்னு நீயும் சொல்ற.... நானும் நம்பறேன்.  ஹே ஸ்வேதா... நீ பேசும்போதுதான் எனக்கு ஒரு ஐடியா தோணித்து.  ஹரி உன்னை அதி தீவிரமா லவ் பண்றான்னு உனக்குத் தெரியும்.  அப்படித் தெரிஞ்ச நீயே தீபாக்கூட ஹரி பேசறதைப் பார்த்து காண்டாகிட்ட.  ஹரிக்கோ நீ இன்னும் அவனைத்தான் பிராண நாதனா நினைச்சுண்டு இருக்கேன்னு தெரியாது.   பேசாம உங்க ஆபீஸ்ல இருக்கற யார் கூடயானும் க்ளோஸா மூவ் பண்ணேன்.  அவன் பொறாமைல கொஞ்சம் கடுப்பாகட்டும்”

“ச்சே ச்சே அதெல்லாம் என்னால முடியாது மன்னி.  ஹரியைத் தவிர யார் கூடவும் நான் க்ளோஸா மூவ் பண்ண மாட்டேன்.  அதுவும் தவிர இந்த ஐடியா எனக்கே ஆப்பா வர்றதுக்கும் சான்ஸ் இருக்கு.  எனக்கு நிஜமாவே அவனைப்  பிடிச்சிருக்குன்னு அந்தப் பையன் என் பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டான்னா பிரச்சனை ஆகிடும்”

“நீ சொல்றதும் சரிதான்.... உனக்கு இங்க தீபாத் தவிர வேற friends கிடையாதா?”

“ஏன் ராம், அருண் அப்பறம் காயத்ரி, ஜூலி இவாள்ளாமும் பிரிண்ட்ஸ்தான்...”

“இவா எல்லாரையுமே தீபாக்குத் தெரியுமா?”

“ராம் தவிர எல்லாரையுமேத் தெரியும் மன்னி.  அவன் இப்போத்தான் ஒரு மூணு மாசம் முன்னாடி இந்தப் ப்ராஜெக்ட்ல  சேர்ந்தான்.  தீபா வொர்க் பண்றது வேற module, அதனால அவனை மட்டும் ரொம்பத் தெரியாது.  எப்பவானும் பார்த்தா ஹாய், ஹலோ சொல்லுவா.....”

“பையன் எப்படி... சாதுவா.... இல்லை ரொம்ப மொரடா.... ஜொள்ளு பார்ட்டியா”

“எதுக்கு மன்னி இதெல்லாம் கேக்கறேள்....”

“நீ first சொல்லு......”

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நல்ல மாதிரிதான்..... ரெண்டு பேரும் ஒரே module வொர்க் பண்றதால டெய்லி கால் இருக்கும்.  என்கிட்ட  இதுவரைக்கும் அவன் தப்பா எதுவும் பேசினதில்லை”

“சூப்பர் அப்போ இவன்தான் உனக்கு சரியான ஆள்.  நீ அவன்கிட்ட உண்மைய சொல்லிட்டே ஹெல்ப் கேளு.  ஆபீஸ் போகும்போதோ இல்லை வரும்போதோ ஹரி உன்கிட்ட பேசி உன்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ண மாட்டான்.  சின்ன வயசுலேர்ந்தே அவன் அப்படித்தான், படிக்கவோ இல்லை வேலைக்கோ எதுக்கா இருந்தாலும் தெளிவான மனசோட போகணும் அதனால அப்போ எந்த விஷயமும் பேச மாட்டான்.  ஸோ வீக்டேல பேச முடியாததை பேசறதுக்காக,  இந்த வீக் எண்டு கண்டிப்பா ஹரி உன்னை வெளில கூட்டிண்டு போவான்.  உன்கிட்ட திரும்ப அவன் லவ் propose பண்ணுவான்”

“ச்சே எத்தனை நல்லவர் இல்லை ஹரி.  எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு பண்றார்.  இப்போ என்ன மன்னி பண்ண.  அவர் கேட்ட உடனே ஓகே சொல்லிடட்டா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.