(Reading time: 10 - 19 minutes)

ன் தலை.... ஏன்  ஸ்வேதா இப்படி இருக்க.  ஆனாலும் அவனுக்கு ரொம்ப லவ்வரா இருக்காதடிம்மா.  நல்லதே இல்லை.  நீ என்ன பண்ற.  வெள்ளிக்கிழமை சாயங்காலமா ஹரிக்கிட்ட ராம் உன்னை வெளில கூட்டிண்டு போறேன்னு சொன்னான்.....  அதனால நீ அவன் கூட போகப்போறதா சொல்லு”

“என்ன மன்னி இது,  அவர் பாட்டுக்கு ஓகே நீ போயிட்டு வான்னு சொன்னா நான் என்ன பண்றது”

“அதெல்லாம் அவன் அப்படி சொல்ல மாட்டான்.  புது ஊர்ல ரொம்பத் தெரியாதவாக் கூட எல்லாம் உன்னைத் தனியா அனுப்ப மாட்டன்.  கண்டிப்பா அவனும் கூட வரேன்னுதான் சொல்லுவான்.  அவன் அப்படி சொன்ன உடனே நீ ஒத்துக்காத.  கொஞ்சம் பிகு பண்ணிட்டு அப்பறம் போனாப் போட்டுமேன்னு ஒத்துக்கோ.  வெளில போனதுக்கப்பறமா முடிஞ்சவரை ஹரியை விட்டுட்டு ராம்கிட்டயே பேசு.  ஹரி காதுல நன்னா புகை வரட்டும்”

“மன்னி நீங்க சொல்றது ஓகேதான்.  ஆனா சப்போஸ் ஹரி ராமோட தனியாப் போக ஓகே சொல்லிட்டா என்ன பண்றதுன்னு சொல்லுங்கோ.  எனக்கு டக்குன்னு யோசிக்க முடியாது”

“அப்படி அவன் சொல்லிட்டா டகால்னு ட்ராக் மாறிடு.  அவனோட தனியாப் போக ஒரூ மாதிரி இருக்கு... அதனால ஹரியைக் கூட வர சொல்லு”

“ஹ்ம்ம் எல்லாம் ஓகேதான்.  இந்தப் பிளான் வொர்க்அவுட் ஆகுமா மன்னி.  பில்டிங் ஸ்டார்ங், பேஸ்மென்ட் வீக்குங்கறா மாதிரி, நம்ம பிளான் ஆரம்பிக்கும்போது நன்னாத்தான் ஆரம்பிக்கறது.  கடைசில சொதப்பிடறதே”

“ஹே ஸ்வேதா, டோன்ட் வொர்ரி.  இந்த முறை எந்த சொதப்பும் சொதப்பாது.  ஆனா நீ ராம்கிட்ட மட்டும் பிளானைத் தெளிவா சொல்லிடு.  அவன் எதுவும் டென்ஷன் ஆகி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு காட்டிக் கொடுத்துடப் போறான்”

“இல்லை மன்னி, நான் ஹரியை முதல் வாட்டி பார்த்ததுல இருந்து, இன்னைக்கு என்னை டிராப் பண்ணினது வரை சொல்லிடறேன்.  அவனும் அவரைப் பத்தி தெளிவா தெரிஞ்சுப்பான் இல்லை”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

“சூப்பர் ஸ்வேதா.  All the very best.  இந்த முறை வெற்றி உனக்கு, பல்பு ஹரிக்கு.  ஓகே.  சண்டே கௌஷிக் டென்னிஸ்  விளையாடப் போவார்.  அப்போ உனக்கு நான் ஃபோன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டுக்கறேன்.  சரியா, ஆஃபீஸ்  வந்துட்டேன்.  நாளைக்கு கார்த்தால பேசலாம்.  பாய் ஸ்வேதா”, என்றபடி கௌரி அழைப்பை துண்டிக்க இந்த முறை பிளானில் எதுவும் சொதப்பக் கூடாது என்று வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள் ஸ்வேதா.  கௌரியின் பிளான் செம்ம பிளானா இல்லை ஸோபிளானா  வெயிட் பண்ணிப் பார்க்கலாம்.    

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.