(Reading time: 10 - 20 minutes)

10. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்......

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்.........

கௌரி கொடுத்த சூப்பர் பிளானை எப்படி செயல்படுத்த என்று யோசித்தபடியே அடுத்த நாள் காலை வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் ஸ்வேதா.  இந்த முறை என்ன ஆனாலும் ஹரியிடம் பல்பு வாங்கக் கூடாது.  மன்னி சொன்ன பிளானை பக்காவாக செயல்படுத்தணும்.  அதையும் இன்றிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்ற தீர்மானத்திற்கு வந்தாள் ஸ்வேதா.  தினப்படி கடமையாக  அன்றும்  ஹரி அவளை கூட்டிச் செல்ல வர....  தீபாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.  ஹரி காரை ஓட்ட ஆரம்பிக்க தீபாவும், ஹரியும் பேச ஆரம்பித்தார்கள்.  சிறிது நேரம் பொறுத்த ஸ்வேதாவிற்கு, எப்பொழுதும் போல், இப்பொழுதும் காதிலிருந்து புகை வர ஆரம்பித்தது.  அவனால் மட்டும்தான் கடலைப் போட முடியுமா.... என்னாலும் முடியும் என்று நினைத்தபடியே ராமிற்கு அழைத்தாள் ஸ்வேதா.

“ஹலோ ராம் கிளம்பிட்டியா?”, ஸ்வேதா ராமிடம் பேச,  ஹரி தீபாவிடம் கண்களாலேயே யார் என்று கேட்டான்.  அதற்கு தீபா கொலீக் என்று வாயசைத்து சொல்ல, அதற்கு மேல் அதைப் பற்றிய கவலை இல்லாமல் தீபாவிடம் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தான்.

முதலில் அவன் கண்களால் தீபாவிடம் கேட்க ஆரம்பித்த உடன் படு குஷியானாள் ஸ்வேதா.  ஹரிக்கு பொறாமை வந்துவிட்டது.  திட்டம் வெற்றி என்று குதிக்காதது ஒன்றுதான் குறை.  ஆனால் அந்த சந்தோஷம் எல்லாம் ஒரே நிமிடம்தான்.  தான் பேசுவதை ஹரி உன்னிப்பாக கவனிப்பான் என்று ஸ்வேதா மனப்பால் குடிக்க, ஹரி ஸ்வேதா பேசுவதைப் பற்றிய கவலையே இல்லாமல் தீபாவுடன் பேசுவதைத் தொடர்ந்தான்.  இருந்தாலும் தளர்ச்சி அடையா விக்கிரமாதித்தனாக(அப்போ ஹரி வேதாளமா), தன் முயற்சியைத் தொடர்ந்தாள்.

அவளும் முடிந்தவரை ராமிடம் பேச, ஹரிதான் கண்டுகொள்ளவே இல்லை.  சிறிது நேரத்திற்குப் பிறகு ராமிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் கைப்பேசியை கட் செய்தாள்.  

“நீ ஏதானும் முக்கியமா பேசிண்டு இருந்தியா ஸ்வேதா...  நானும், தீபாவும் பேசிண்டே வந்தது தொந்தரவா இருந்ததா”, படு அக்கறையாக ஹரி கேட்க, ஸ்வேதாவால் பல்லைக் கடிக்கவே முடிந்தது. (Confirm, அமெரிக்காலேர்ந்து போகறதுக்குள்ள ஸ்வேதாக்கு பல் செட் ரெடி பண்ணிடலாம்)

“அதெல்லாம் தொந்தரவா இல்லை ஹரி.  Infact ராம்கிட்ட  முக்கியமா சில விஷயங்கள் பேசணும்.  அதை நான் லஞ்ச் ஹவர்ல பேசிக்கறேன்”,என்று அவர்களுக்குத் தெரியாமல் சில விஷயங்கள் ராமிடம் பேசவேண்டும் என்ற அர்த்தத்தில் கஷ்டப் பட்டு யோசித்து ஸ்வேதா கூற, ஹரியோ.... ‘நீ லஞ்ச்ல பேசிப்பேன்னா ஓகே’, என்று சப்பென்று முடித்துவிட்டான்.

ராமிடம் பேசி ஹரியை வெறுப்பேத்துவது என்பது முடியாதோ என்று நொந்து போனாள் ஸ்வேதா.  இல்லை.... கூடாது.... ஒரு விஷயம் நடந்ததற்கே சோர்வடையக்கூடாது.  இன்னும்  ஹரி ராமைப் பார்க்கவில்லை.  அதுவும் தவிர, நான் நிஜமாகவே அலுவலக விஷயமாகத்தான் பேசி இருப்பேன் என்று ஹரி நினைத்திருப்பான்.  வீக்எண்டிற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.  அதற்குள் கொஞ்ச கொஞ்சமாக பொறாமையைத் தூண்டி விடலாம், மனம் தளராதே ஸ்வேதா, என்று தனக்குத் தானே தட்டிக் கொடுத்தபடி காரில் அமைதியாக வந்தாள் ஸ்வேதா.  ஸ்வேதாவின் சிந்தனையுடனும், ஹரி-தீபா அரட்டையுடனும் அவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள்.  ஸ்வேதாவின் நல்ல நேரமாக, அப்பொழுதான் வந்த ராம் அவனின் காரை பார்க் செய்து விட்டு வந்தான்.

“ஹலோ ஸ்வேதா, தீபா .... குட் மோர்னிங்.... ஸ்வேத்  You are looking so cool today”  (நவம்பர் மாசக் குளிர்ல அவ கூலா இல்லாம கத்திரி வெயில் மாதிரி ஹாட்டாவா இருப்பா)

 ராம் கூற அதைக் கேட்ட பிறகாவது ஹரியின் முகத்தில் பொறாமையின் சாயல் தெரிகிறதா என்று ஸ்வேதா பார்த்தாள்.  அந்தோ பரிதாபம், ஹரியின் முகம் அன்றலர்ந்த தாமரையாக மலர்ந்து விகசித்து இருந்தது.  (நாங்கல்லாம் ஹீரோவையும் தாமரையோட வர்ணிப்போம்)

“தேங்க்ஸ் ராம்.  சீக்கிரம் வந்துட்ட போல.   சாதாரணமா பத்து மணிக்கு குறைந்து வர மாட்டியே”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜாஜனின் "உனக்காக மண்ணில் வந்தேன்" - Romantic fantasy love story

படிக்க தவறாதீர்கள்...

“ஹ்ம்ம் கரெக்ட்தான்.  இப்போ ஒரு மூணு மாசத்துக்காக ஒரு சூப்பர் ஃபிகர் வந்துருக்கே.  அவளைப் பாக்கவே ஓடி வரேன்”, என்று கூற, இப்பொழுது ஸ்வேதாவே ஜெர்க் ஆனாள்.  என்றும் இல்லாத திருநாளாக இவன் ஏன் இன்னைக்கு இத்தனை வழியறான்.  மன்னி சொன்ன திட்டத்துக்கு இவன் ஒத்து வர மாட்டானோ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.   

தீபாவிற்கு இந்த மாதிரி பேசுவது சாதாரணம் என்று தெரிந்ததால் அவனுக்கு காலை வணக்கத்துடன் ஒரு புன்னகையை மட்டும் கொடுத்து, ஹரியை அறிமுகப்படுத்தினாள்.

“ஹலோ ஹரி, Nice meeting you.  சாரி இப்போ ஒரு கால் இருக்கு.  ஓடி ஆகணும்.  இன்னொரு நாள் உங்களோட ரிலாக்ஸ்டா பேசறேன்”, என்று கூறி அவனிடம் தலை அசைத்து அலுவலகம் நோக்கி சென்றான்.

ராம் அகன்றதும் ஸ்வேதாவைப் பார்த்த ஹரி இவ ஏன் இப்படி பேஸ்த்து அடிச்சா மாதிரி நிக்கறா.  நாம ராம்கூட பேசிட்டு இருந்த ரெண்டு நிமிஷத்துல ஏதானும் நடந்துடுத்தா என்று நினைத்து, ‘ஸ்வேதா.... ஸ்வேதா......’ என்று அவளை உலுக்கி நடப்பிற்கு கொண்டு வந்தான்.  ஸ்வேதாவும் தன் யோசனையிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு வந்தாள்.  தீபாவிடமும், ஸ்வேதாவிடமும் சொல்லிக்கொண்டு ஹரி அவன் அலுவலகத்திற்கு செல்ல, ஸ்வேதா…. ராம் தொடர்ந்து வழிந்தால் தாங்காது அதைத் தடுக்கவாவது ஹரியைக் காதலிப்பதை கூற வேண்டும் என்று தீர்மானித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.