ஆனால் இந்த முறை தவறு ராம், ஸ்வேதா மேல் அல்ல. இந்த ராம் என்ன மாதிரி மேக் என்ற ஆராய்ச்சியில் வந்ததால் தீபா அவர்களுடன் பேச்சில் இணைந்து கொள்ளவில்லை.
மறுநாள் காலை ஹரி வந்து அழைக்க, தீபா தான் தன்னுடைய காரில் வந்துவிடுவதாகக் கூறினாள். ஐயோ இவ ஏன் இப்படி திடீர்ன்னு ட்ராக் மாறரா. இப்போ ஸ்வேதாவும் அவளோடயே போறேன்னு சொல்வாளே என்று ஹரிதான் தவித்துப் போனான்.
“ஏன் தீபா, ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ். அப்பறம் எதுக்கு நீ தனியா போகணும். ஸ்வேதாவை ட்ராப் பண்ணும்போது உன்னையும் விட மாட்டேனா. ஒரே இடத்துக்குப் போறதுக்கு ரெண்டு காரா. குளோபல் வார்மிங் எல்லாம் உன்னை மாதிரி ஆளுங்களாலதான் வர்றது”
“இத்தனை நாள் அப்படித்தானே போயிட்டு இருந்தேன் ஹரி. அப்போலாம் இந்த குளோபல் வார்மிங் பத்தி நீங்க பேசவே இல்லை”, தீபா உனக்கு நான் சளைத்தவள் அல்ல, என்று பாயிண்ட்டைப் பிடித்தாள்.
“அது அது அப்போ நான் வேற இடத்துல இருந்தேன் இல்லை. இப்போதானே இந்த ஏரியாக்கு வந்தேன்”, சமாளித்தான் ஹரி.
“எப்படி ஹரி….. இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு இந்த பூமியை குளோபல் வார்மிங்கிலிருந்து காப்பாத்துவீங்களா”
“ஹி ஹி கரெக்டா கண்டுபிடுச்சுட்ட. சும்மா மொக்கை போடாம ஒழுங்கா எங்களோட கிளம்பு”, அவர்கள் இருவரும் பேச ஸ்வேதா டென்னிஸ் மேட்ச் பார்ப்பது போல் மாறி மாறிப் பார்த்தாள்.
“என்ன ஸ்வேதா ஒண்ணுமே பேசாம இருக்க”
“நேத்திக்கு எல்லாரும் ஒண்ணாத்தானே போனோம். இன்னைக்கு ஏன் தீபா திடீர்ன்னு பிளான் மாத்தற”
“நான்லாம் மாத்தல. உன்னை யாரு சாயங்காலம் அந்த ராமோட வர சொன்னது. எனக்கு அவனை அவ்வளவா தெரியாதுன்னு தெரியும் இல்லை உனக்கு. எனக்கு ரொம்ப ஆக்வார்டா இருந்தது ஸ்வேதா”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
“இதுல ஆக்வார்ட் ஆகறதுக்கு என்ன இருக்கு தீபா. ஹரியும் உனக்கு இப்போ கொஞ்ச நாளாத்தானே தெரியும். அவர்கூட வர்றியே. அது மாதிரிதானே”
“ஹரியும், அவனும் ஒண்ணு கிடையாது”, ஹரி தன்னுடைய நண்பன் என்ற அர்த்தத்தில் தீபா பேச, ஸ்வேதாவிற்குதான் உள்ளுக்குள் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
“ரெண்டு பேரும் ஸ்டாப் பண்ணுங்க. தீபா, ஸ்வேதா ரெண்டு பேரும் என்னோட வர்றீங்க, அதே மாதிரி ஈவ்னிங் எத்தனை நேரம் ஆனாலும் நான்தான் கூட்டிண்டு வரப்போறேன். No arguments”,என்று கூறி பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.
பாவம் ராமிற்குதான் வடை போன கதை ஆகியது. அவனின் பலநாள் கனவு ஒரே நாளிலேயே முடிந்து விட்டது. பார்க்கலாம் அவர்களின் வீக் எண்டு பிளான் எந்த விதத்தில் முடியப் போகிறதென்று.
தொடரும்
{kunena_discuss:964}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.