(Reading time: 15 - 29 minutes)

16. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

unakkaga mannil vanthen

ன்னிடம் மன்னிப்பு கேட்கும் திவ்யா எதற்காகக் கேட்கிறாள் என்று புரியாமல் குழப்பமாய் திவ்யாவை பார்த்தான் விஷ்ணு.

அவன் குழப்பமாய் தன்னைப் பார்ப்பதை பார்த்துத் தான் மன்னிப்பு கேட்டதற்கு விளக்கம் கூறினாள் திவ்யா. “அனுவ ஈவீனிங் எப்படியும் பார்க்கத்தான் போறேன். அது என் அறிவுக்கு தெரிஞ்சாலும் மனசு ஏதுக்க மாட்டேங்குது. இனிமேல் அவளைப் பார்க்கவே போறதில்லை என்பது போல் பயமா இருக்கு. அவ கூட ஃபெரெண்டா பழகின எனக்கே அப்படி இருந்த, அவளை உயிருக்கு உயிரா லவ் பண்ணிருந்த உன்னை அவளைப் பார்க்கவே கூடாது னு சொன்ன எப்படி இருக்கும் னு இப்ப தான் எனக்கு புரியிது. அதுக்குதான் ஸாரி”.

திவ்யா கூறியதை கேட்டு விஷ்ணுவிற்கு ஆச்சரியமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருந்தது. தான் அனுவை எந்த அளவுக்குக் காதலிக்கிறோம் என்று யாரிடமும் விஷ்ணு கூறியதில்லை திவ்யா உட்பட, ஆனால் திவ்யா அதைச் சரியாக புரிந்து வைத்திருக்கிறாளே என்ற அதிர்ச்சிதான் அது.

“நான், அனு, லவ், எப்படி, உங்களுக்குத் தெரியும்” என்று தான் கூற வந்ததைச் சரியாக கூறமுடியாமல் திணறினான்.

“கமான் விஷ்ணு, நீ முதல் முறை பேச வந்தவுடனையே நீ எதுக்கு வந்த னு புரிஞ்சிக்கிட்டேன். உன் முகத்தில்தான் காதல் சொல்ல வரேனு அப்பட்டமா தெரிந்ததே” என்று விஷ்ணுவின் கேள்விக்கு பதில் அளித்தாள் திவ்யா.

“அப்போ அனுவிற்கும்த் தெரியுமா?” என்றான் அவளோடு.

“அந்த லூசுக்கு தெரிஞ்சிருந்தாதான், உன்னோட அதிர்ஷ்டம் னு விட்டிருப்பேனே” என்று அவள் கூறியதில் இருந்தே விஷ்ணுவிற்குத் தேவையான பதில் கிடைத்தது.

“நீ நல்லவன் தான் விஷ்ணு, ஆனா நீயா, இல்ல அனுவோட வாழ்க்கையா னு வரப்போ எனக்கு அனுதான் முக்கியம். உனக்கே தெரியும் அனுவிற்கு திபக் தான் கரக்ட் சாய்ஸ். ஸொ அவங்க ஒண்ணு சேரனும் என்றால் எத்தனைத் தடவை வேண்டுமானாலும் அவளைப் பார்க்காதே, பேசாதே னு உன்னிடம் சொல்லுவேன், சொல்லிவிட்டு ஆயிரம் தடவை வேண்டும் என்றாலும் ஸாரி கேட்பேன்” என்றாள் திவ்யா.

“இவ நல்லவளா இல்ல கெட்டவளா” என்று குழப்பமாய் திவ்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. அந்தச் சமயத்தில் ஆபிஸ் பஸ் வரவே அதில் ஏறினாள் திவ்யா.

கிளம்பும் முன் “நான் நல்லவளா இல்ல கெட்டவளா னு யோசிக்காத. உன்னப் பொறுத்த வரைக்கும் நான் கெட்டவதான்” என்று கூறிவிட்டு பஸ் உள்ளே சென்று அமர, பஸ் கிளம்பியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்...

“என்னட இது, நான் மைன்டுல நினைக்கிறதெல்லாம் வெளியே கேக்குதா. ஒருவேள மைன்டு வாய்ஸ் னு நினைச்சி சத்தமா பேசிடுறோமோ?” குழப்பத்தில் தலையை சொரிந்து கொண்டிருந்தான் விஷ்ணு.

அனுவிற்கோ வேளை ஏதும் இல்லாமல் அன்று நேரமே போகவில்லை. டிவி பார்த்தாள், தன் கணினியை நோண்டினாள், பார்வதியிடம் வம்பிழுத்துப் பார்த்தாள், தூங்கிப் பார்த்தாள் ஆனாலும் நேரம் போகவில்லை. கடைசியாக தன் தாய் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த வார இதழ்களைப் புரட்டினாள்.

அப்படிதான் அனுவின் கண்களில் பட்டது விஷ்ணு வேளைச் செய்யும் கதை. விஷ்ணு பல முறை அந்தக் கதையை பற்றிக் கூறி இருந்தாலும் அனுவிற்குப் படிக்க நேரம் இல்லாமல் இருந்தது. இன்று தேடி பிடித்து இதுவரை வந்த எப்பிஸோட் வரை படித்தாள். கதை, புகைப்படம் என எல்லாம் அவளுக்குப் பிடித்திருந்தது.

வேலை முடிந்ததும் மாலை கரைக்டாக விஷ்ணுவும், திவ்யாவும், அனு வீட்டில் ஆஜர் ஆனார்கள்.

இருவரையும்ப் பார்த்ததில் அனுவிற்கு மிகுந்த மகிழ்ச்சி. நாள் முழுவதும் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திக்கித் திணறியவள் இருவரிடமும் அதைப் புலம்பி தள்ளிவிட்டாள். அதோடு விஷ்ணுவிடம் தான் கதை படித்ததையும் கூறி, அதைத் தான் ரசித்த விதத்தையும் கூறினாள். விஷ்ணுவின் புகைப்படத்திற்கு சிறப்பு பாராட்டுக்கள் வேறு.

விஷ்ணு கையில் வைத்திருக்கும் கேமராவைப் பார்த்தவுடன், இத்தனை நாள் இல்லாமல் இன்று ஏனோ விஷ்ணு எடுத்திருக்கும் புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்று அனுவிற்கு ஆவல் தோன்றியது.

“விஷ்ணு, உங்க கேமிராவை குடுங்க, போடோஸ் பார்த்துட்டு தறேன்” என்றாள்அனு.

விஷ்ணுவும் இத்தனை நாள் இல்லாமல் இன்று கேட்கிறாளே என்று நினைத்துக் கொண்டு தன் கேமிராவை ஆன் செய்து அனுவிடம் கெடுத்தான். அதில் அவன் அந்த வாரக் கதைக்காக எடுத்த ஒரு சில புகைப்படங்கள் மட்டும் இருந்தது. அதை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.

“கதை ரொம்ப இன்டரெஸ்டிங்க போகுது விஷ்ணு. இப்போத்தான் எமனிடம் போரடி பூமிக்கு வந்துருக்கான் நம்ம ஹிரோ. இன்னும் 60 நாளில்(முத்து குமரனின் கதை படி) தன் காதலில் ஜெய்ச்சிடுவானா விஷ்ணு” என்று கதையின் கிளைமேக்ஸ்ஐ தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள் அனு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.