(Reading time: 33 - 65 minutes)

25. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

ன்று பிருத்வியின் பிறந்தநாளுக்கு சென்ற யுக்தாவிற்கு அவனோடு கேக் வெட்டி கொண்டாடி... சேர்ந்து சாப்பிட்டதே போதும்... அதுவே வாழ்நாளுக்கும் போதும்... அந்த நினைவோடு கடைசி வரையிலும் வாழ்ந்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தாள்.

அவனுக்கு ப்ரேஸ்லெட் பரிசளித்ததும் கிளம்பிவிடலாம் என்று அவள் நினைத்திருக்க... அவனோ அவனுக்கு வந்த பரிசுப் பொருட்களை பிரித்து பார்க்க அழைத்துப் போனான்.. அவனுடன் அவன் அறைக்கு சென்றாலும் அங்கே அவனோடு இருக்க சங்கடமாக தான் உணர்ந்தாள் யுக்தா... அவன் கட்டிலில் உட்கார்ந்து பரிசுப் பொருட்களை விரித்து வைத்து ஒவ்வொன்றாக பிரித்து காட்டிக் கொண்டிருந்தான்... இவளோ கட்டிலின் ஒரு ஓரமாக நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...

ஒவ்வொரு பரிசுப் பொருளையும் பிரித்து அவன் அது தேவையானதா... இல்லை தேவையில்லாததா என்று விமர்சனம் செய்துக் கொண்டிருக்க... இவளுக்கோ சரியாக நிற்க கூட முடியவில்லை...

தலை தனியாக சுற்றுவது போல் இருந்தது... கால்கள் பலமிழந்தது போல் இருந்தது... கை காலெல்லாம் உதறல் எடுத்தது.. அவள் பார்வைக்கு எந்தப் பொருளும் சரியாக தெரியவில்லை... சாப்பிட்டதில் இருந்தே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள்... ஆனால் இப்போதோ அது அதிகமாக தெரிந்தது...

அதற்கு மேலும் நிற்க முடியாமல் அப்படியே பிருத்வியின் பக்கத்தில் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்... அவள் திடிரென்று உட்கார்ந்ததும் பதறிய பிருத்வியோ...

"எ..என்னாச்சு யுக்தா.." என்றுக் கேட்டான்.

"ஒன்னு...ஒன்னுமில்ல பிருத்வி... ஒருமாதிரி மயக்கமா இ..இருக்கு... நிக்கக் கூட முடியல..."

"எ..என்ன யுக்தா சொல்ற... மயக்கமா இருக்கா.. என..எனக்கும் அப்படிதான் இருக்கு...  சரி இந்த கிஃப்டை உனக்கு பிரிச்சுக் காட்டாலாமேன்னு தான்... இல்ல எ..எப்படா படுப்போம்னு இருக்கு... யுக்தா ஒன்னு செய்... நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு.."

"உங்களுக்கும் அப்படி தான் இருக்கா...?? ஏன் பிருத்வி எதனால நமக்கு அ..அப்படியிருக்கு..."

"என்னன்னு தெரியலையே... எதனாலன்னு யோ..யோசிக்க கூட முடியல... இங்கப்பாரு இதையெல்லாம் காலையில யோசிச்சிக்கலாம்... இப்போ நீ படு.."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

அப்போது தான் சாவித்திரியிடம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவதாக சொன்னது யுக்தாவிற்கு ஞாபகம் வந்தது... அத்தோடு இவனுடன் இந்த நிலைமையில் இருப்பது சரியில்லை என்றும் தோன்றியது...

"நா..நான் வீட்டுக்குப் போகனும் பிருத்வி..." என்று அவசரமாக எழுந்தவள்.. அப்படியே விழப் போக.. "ஏய் பார்த்து யுக்தா.." என்று அவளை பிடித்த பிருத்வியும் தடுமாறவே... இரண்டுபேரும் கட்டிலில் வந்து விழுந்தனர்.

இவர்கள் சாப்பிட்டதில் இருந்த போதைப் பொருள் என்னவோ... எந்த அளவோ தெரியவில்லை... ஆனால் இருவருக்கும் இது புதிய அனுபவம் என்பதால் ரொம்பவே தடுமாற்றமாக இருந்தது...

தட்டு தடுமாறி இருவரும் எழுந்து உட்கார்ந்தார்கள்.

"யுக்தா பா..பாரு.. உன்னால முடியல.. நீ ரெஸ்ட் எடுக்கறது தான் சரி... நீ இந்த ரூம்ல ரெஸ்ட் எடுக்க வேண்டாம்... பிரணதி ரூம்ல ரெஸ்ட் எடு..."

"இ..இல்லை பிருத்வி நான் போகனும்... சாவிம்மா தேடுவாங்க... நான் போயே ஆகனும்.."

"இங்கப் பாரு யுக்தா... சாவிம்மாக்கு போன் பண்ணி சொல்லலாம்... அவங்க ஒன்னும் சொ...சொல்லமாட்டாங்க... நான் நல்லா இருந்தாலாவது உன்னை வீட்டுக்கு கூ..கூட்டிக்கிட்டுப் போவேன்.. ஆனா என்னாலயும் முடியல.. அதனால நான் சொல்றதை கேளு.."

"இல்லப் பிருத்வி இங்க இருக்கறது சரியா இருக்காது... நான் போகனும்.."

"போ...போகனும் போகனும்னு சொல்றியே யுக்தா.. நீ போகறதுக்கு தான் வந்தியா..?? நீ வராமலேயே இருந்திருந்தா எ..எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்திருக்கும் யுக்தா..." என்று அவன் சொன்னதும்... அவனை அவள் எதுவும் புரியாத ஒரு பார்வை பார்த்தாள்...

வெறும் போனில் மட்டும் வாழ்த்து சொல்லிவிடலாம் என்றிருந்தவளை... நீ பிறந்தநாள் விழாவிற்கு வரனும்... உன்னை எதிர்பார்ப்பேன் என்றவன்... இப்போதோ எதற்காக வந்தாய் என்றுக் கேட்கிறானே என்று புரியாமல் பார்த்தாள்...

"நீ நியூயார்க்ல இருந்து ஏன் வந்த யுக்தா... நீ இனி... இனி வரமாட்ட... என்னை மறந்திருப்ப... உன்னை இனி பார்க்கவே முடியாதுன்னு நினைச்சேனே... ஆனா நீ திரும்ப இந்தியாக்கு வந்துட்ட... ஆ...ஆனா இப்போ போகனும்னு சொல்றியே... ஏன் யுக்தா..??"

வீட்டுக்கு போவதைப் பற்றி இப்போது பேசினால் இவனோ நியூயார்க் போவதை பத்தி பேசுகிறானே என்று வியப்பாக பார்த்தாள் அவள்... அதுவும் இவளை அவன் எதிர்பார்த்தானா..?? என்று நினைக்கும் போதே சந்தோஷமாக இருந்தது அவளுக்கு.. இவளை பிருத்வி ஞாபகம் வைத்திருக்கிறான்.. இதுவே போதும் இவளுக்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.