(Reading time: 33 - 65 minutes)

 ன்று விடியற்காலை ஒரு இனிமையான கனவு பிருத்விக்கு... எப்போதும் அழுத முகத்தோடு பன்னிரண்டு வயது யுக்தா கனவில் வருவாள்... அன்றோ 24 வயதான பருவ மங்கையாக யுக்தா வந்திருந்தாள் கனவில்...

பிருத்வி நான் உங்களைப் பார்க்க இந்தியா வரப் போறேன் பிருத்வி... என்னை நீங்க எதிர்பார்ப்பீங்களா..?? இல்லை என்னை மறந்திருப்பிங்களா..?? என்று யுக்தா கனவில் கேட்க... உன்னை நான் எப்படி மறப்பேன் யுக்தா.. உன்னை பார்க்க காத்திருக்கிறேன் என்று அவன் கனவில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...

அன்று தான்... யுக்தா இந்தியா வருவதற்கு முன் பிருத்வி கொடுத்த பொம்மையோடும்... அவன் போட்டோவோடும் இரவில் தான் இந்தியா வரப்போவதை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாளே அப்போது தான் பிருத்விக்கு அந்த இனிமையான கனவு வந்தது... அந்த கனவை கலைக்க விரும்பாமல் ... விழித்துக் கொள்ள கூட தோன்றாமல் அப்படியே படுத்துக் கொண்டிருந்தான் அவன்...

பின் தாமதமாக எழுந்து வந்தவனுக்கு தன் தந்தை தாயின் மூலமாக யுக்தா வரப் போகும் செய்தி  கிடைத்தது... அவன் மனம் அந்த அளவுக்கு அதுவரையிலும் சந்தோஷப்பட்டிருக்காது... அப்படி துள்ளிக் குதித்தான்.. ஆனால் உள்ளுக்குள்ளே தான் அந்த சந்தோஷம்... வெளியில் எப்போதும் இருக்கும் பிருத்வி தான்... ஆனால் யுக்தாவின் வருகைக்காக மனம் இப்படி சந்தோஷப்பட்டதே அப்போது கூட பிருத்வி அதை காதல் என்று உணரவில்லையா..??

பின் யுக்தா வீட்டிற்கு வரும்போது பிருத்வியை மதி இருக்க சொன்னபோது அவன் மீட்டிங் இருப்பதாக சொன்னான்... அதற்கும் காரணம்... யுக்தா இவனை நேரில் பார்க்கும்போது இது யார்..?? என்று கேட்டுவிட்டாள்... இவனால் தாங்கிக் கொள்ள முடியாது... எத்தனை படத்தில் பார்த்திருக்கிறான் வெளிநாட்டில் இருந்து வரும் காதாநாயகி கதாநாயகனை ஞாபகம் இல்லை என்று சொல்வது போல... அதனாலேயே அந்த நேரத்தில் அந்த மீட்டிங்கை அவனே ஏற்பாடு செய்துவிட்டு யுக்தா வரும் நேரத்தில் இருக்க முடியாது என்று கூறிவிட்டான்.

ஆனால் அங்குப் போனபின்பும் அவனால் ஒரு நிலையாய் இருக்க முடியவில்லை... இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால்... அதன்பின் அவளை பார்க்கவே முடியாமல் போய்விட்டால்...?? அதை நினைத்துப் பார்த்த அவன் உடனே மீட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்...

ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டில் யாரும் இல்லாததை பார்த்த்தும் அவன் மனதில் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டதே அப்போது கூட பிருத்வி அதை காதல் என்று உணரவில்லையா..??

எப்போதும் வீட்டிற்குள் சென்றதும் அம்மா, அப்பாவிடம் பேசிவிட்டு அறைக்குள் செல்பவன்.. அன்று தன் அன்னையை தேடிப் போகவில்லை... அம்மாவைப் பார்த்ததும் அவர்கள்.. யுக்தாக்கு நம்மள ஞாபகமே இல்லை பிருத்வி என்று ஒருவேளை சொல்லிவிட்டால் அந்த வார்த்தையை அவனால் கேக்க முடியாது என்று தன் அறைக்குச் சென்றான்...

ஆனால் அவன் அறையில் யுக்தாவை பார்த்த அந்த நொடி அவன் என்ன உணர்வில் இருக்கிறான் என்று அப்போது அவன் சிந்தித்துப் பார்த்திருக்க முடியுமா என்ன..?? அங்கே அவன் யுக்தாவை பார்த்த போது அவள் அழகோ... அவள் வடிவமோ அவனை ஈர்க்கவில்லை... எப்போதோ தொலைத்த பொருள் தன்னிடம் சேர்ந்துவிட்ட உணர்வு தான் அவனுக்கு அப்போது.. ஆனால் யுக்தா இவனை பார்த்த பார்வையில் ஒன்றுமே விளங்கவில்லை... அதன் பின் மதி வந்து இது நம்ம யுக்தாடா என்ற போது... யுக்தாவை எனக்கா தெரியாது என்று தான் அவன் மனம் அப்போது நினைத்தது..

ஆனால் அவள் ஒன்றுமே பேசாமல் ஒரு புன்னகையோடு  வெளியில் போன போது அவளுக்கு இவனை நினைவில் இருக்கிறதா..?? இல்லையா..?? என்று தவித்தான்... பின் உடனே கீழே இறங்கி கூட போகாமல் உட்கார்ந்து விட்டான். அதன்பின் கீழே வந்த போது அவள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது என்று சொன்ன போதுதான் அவன் மனம் நிம்மதியானது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

யுக்தாவிற்கு தன்னை ஞாபகம் இருக்கிறது என்று தெரிந்தவுடனேயே பிருத்வி அவளோடு இயல்பாக பழக ஆரம்பித்துவிட்டான்... ஆனால் அவளிடம் அவளையே நினைத்திருந்ததை பற்றி சொல்லவில்லை...  அதன்பிறகு கோவில், சினிமா என்று அவளோடு இருந்த நேரங்களை அவனும் சந்தோஷமாக அனுபவித்திருக்கிறான்...

அன்று அவனை தேடி அலுவலகத்திற்கு யுக்தா வந்த போது... இங்கேயே வேலை செய்யும்படி இவன் சொன்னபோது அவள் ஒரு நிமிடம் யோசித்த போதும்... சப்னா ஒருமாதம் ஊருக்கு செல்கிறேன் என்ற போது... போய் வா என்றவன் யுக்தா ஒரு வாரம் அத்தை மகளின் திருமணத்திற்கு ஊருக்குப் போகிறேன் என்ற போதும் அவன் மனதில் ஒரு வலி ஏற்பட்டதே அப்போது கூட பிருத்வி அதை காதல் என்று உணரவில்லையா..??

ஊருக்குப் போன யுக்தா நான்கு நாட்களிலேயே திரும்பி வரப் போவதில் ஒரு பக்கம் சந்தோஷப்பட்டான்... அவளுக்கு அங்கே அவளின் அத்தை மூலமாக ஏற்பட்ட அவமானத்தை நினைத்து கோபப்பட்டான்... அவளுக்கும் அவளின் அத்தை மகனுக்கும் கல்யாணம் செய்வதாக பேசியதை கேட்டு மனதில் எங்கோ ஒரு மூலையில் வருத்தப்பட்டானே... அப்போதும் அது காதல் என்று அவன் உணரவில்லையே...

சப்னாவை யுக்தாவிற்கு அறிமுகப்படுத்தும் எண்ணமே இல்லாமல் தான் இருந்தான் அவன்... சப்னாவின் தூண்டுதல் பேரில் அவளை யுக்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்... ஆனால் அதன்பிறகு யுக்தா அவனிடம் ஒதுக்கம் காட்டியபோது ஏன் என்று தெரியாமல் வேதனைப்பட்டான்... புத்தக கண்காட்சியை சாக்காக வைத்து அவளை அழைத்துச் சென்ற போது கூட அவனிடம் இயல்பாக பேசாதவள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.