இவன் ஜூஸ் வாங்க சென்றிருந்தபோது அவளின் அத்தை மகன் தேவாவிடம் அவள் சிரித்துப் பேசியதை பார்த்து பொறாமையும்... இருவரும் ஜூஸை பகிர்ந்து குடித்த போது இவளின் அத்தை மகனாக பிறந்திருக்கக் கூடாதா...?? இவளோடு சகஜமாக பழகியிருக்கலாமே என்ற ஏக்கமும் ஏற்பட்டதே அப்போது கூட அதை காதல் என்று அவன் உணரவில்லையா..??
காக்கை குருவிக்கு கூட காதல் உணர்வு இருக்கிறது என்று சொல்லும்போது ஆறறிவு படைத்த மனிதனான பிருத்விக்கு அந்த உணர்வு காதல் என்று தெரியவில்லையா..?? பிருத்விக்கு அந்த உணர்வு காதல் என்று தெரியவில்லை என்பதை விட... அதை அவன் உணர மறுக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்...
ஒருத்தியையே காதலித்து மணந்து அவளுடனே முழுமையாய் தன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தவன்... அந்த ஒருத்தி சப்னா என்று தவறாக முடிவெடுத்து... அவளையே மணந்துக் கொள்வதாக அவன் சொல்லிவிட்டதால்.. கடிவாளமிட்ட குதிரை போல் ஒரே திசையிலேயே அவன் சென்றதால்... யுக்தாவிடம் ஏற்பட்ட அந்த இயல்பான காதலை அவன் உணர முயற்சிக்கவில்லை...
இந்த நேரத்தில் யுக்தாவும் தன் மனதில் இருப்பதை சொல்ல... அவள் தன்னை நினைவிலாவது வைத்திருப்பாளா என்று ஏங்கி கொண்டிருந்தவனுக்கு.. அவள் தன்னை நேசிக்கிறாள் என்று தெரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று தவித்தான்... இதில் அவள் திரும்பவும் நியூயார்க் செல்லும் செய்தியும் சேர்ந்து அவனை வருத்தப்பட வைக்க... அப்போது பார்த்து வந்த தன்னுடைய பிறந்தநாளுக்கு அவள் வரமாட்டாளா..?? என்று ஏக்கம் கொண்டான்... அவளை பிறந்தநாளுக்கும் அழைத்தான்...
ஆனால் பிறந்தநாள் விழாவில் எதிர்பாராத விதமாக எல்லாம் நடந்து முடிந்துவிட்டது... பிருத்விக்கும் அந்த இரவு நன்றாகவே ஞாபகம் இருந்தது... மறுநாள் எழுந்தபோது எல்லாம் மறந்திருந்தாலும்... அதன்பின் எல்லாம் யோசித்து பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டான்...
அன்று இவன் உணர்ச்சிவசப்படதால் தான் அந்த தவறு நடந்தது என்றும் இவன் அறிவான்... அன்று யுக்தா பேசிய வார்த்தைகளும் உண்மை என்று அறிவான்.. நிஜமாகவே அன்று பிருத்வியின் கோபம் யுக்தாவிடம் அப்படி நடந்துக் கொண்டதற்காக இல்லை... இத்தனை நாள் மனதில் மறைத்து வைத்திருந்த பலகீனம் வெளிப்பட்டுவிட்டதே என்று தான் அவன் கோபப்பட்டான்..
அப்போது இந்த வேலையை யார் செய்திருப்பார் என்று அவன் யோசிக்கும் போது அவனுக்கு யுக்தா தான் குற்றவாளியாக தெரிந்தாள்... ஏதோ போதை பொருளை கலந்து கொடுத்து தன்னை பலகீனமடைய செய்துவிட்டதாக நினைத்தான்... இதில் அவன் பெற்றோர் முன்னே கூனி குறுகி நின்றதும் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது... அப்போது கூட இதை யுக்தா செய்திருக்கக் கூடாது என்று தான் வேண்டினான்...
ஆனால் அத்தனை பேர் முன்னால் அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும் இல்லாமல் இவனை உதாசீனப்படுத்தி அவள் பேசியதால் கோபம் கொண்டவன் கோபத்தில் திருமணத்தை மறுத்தான்... பின் தன் அன்னைக்காக அவளை மணம் புரிந்தான்... அவள் மேல் பலமடங்கு கோபத்தோடும் இருந்தான்...
வரூன் மீது கோபப்பட்டு மூன்று வருடம் பேசாதிருந்தவனால் யுக்தாவோடு ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு அவளை பார்க்கவும் பேசவும் முடியாமல் கஷ்டப்பட்டான்... ஆனால் அவள் செய்த குற்றத்தையும் மன்னிக்க முடியவில்லை... இந்த நிலையிலும் அவளின் வருத்தமான முகத்தை பார்க்க விரும்பாதவன் தன் கோபத்தை வைத்தே வீட்டில் மற்றவர்களோடு அவளை ஒன்றிட வைத்தான்...
தன் வீட்டாரிடம் அவள் உரிமையாய் பழக ஆரம்பித்ததும்... அவள் தன்னிடம் காட்டிய ஒதுக்கம் அவனுக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியது... இதில் மணமானதும் அவளின் அழகு வேறு அவனை இம்சைப்படுத்த... அவனின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவளின் விருப்பம் இல்லாமலே அவளை நெருங்கிவிட்டான்... இதில் அப்போது தான் அறிமுகமான வரூனோடு அவள் பேசுவதையும் பழகுவதையும் பார்த்தவனுக்கு தன்னிடம் மட்டும் அவள் ஒதுக்கம் காட்டுவதை நினைத்து கோபம் தான் வந்தது...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...
படிக்க தவறாதீர்கள்...
இப்படியே அவள் இந்தியாவிற்கு வந்ததில் இருந்து மனதளவில் அவன் அவளால் பல அவஸ்தைகள் பட்டுக் கொண்டிருக்க... கோவிலுக்கு போய்விட்டு வந்த அந்நாளில் அவள் வரூனைப் பற்றி கூறாமல் அவனை உதாசீனப்படுத்தியதைப் பயன்படுத்தி தான் பட்ட அவஸ்தைகளுக்கு அவள் தான் காரணம் என்ற கோபத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டான்...
ஆனால் அப்போது அவளின் அழுகையை பார்த்த அவனுக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது.. யார் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தினம் தினம் கடவுளிடம் வேண்டினானோ... அவளை இவனே கஷ்டப்படுத்தி அழ வைத்திருக்கிறான் என்று உணர்ந்தான்... அவள் அழுதுக் கொண்டு போனபோது கூட அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தான்... ஆனால் அவள் வீட்டை விட்டு செல்வாள் என்று அவன் நினைக்கவில்லை... ஆனால் அவள் வீட்டை விட்டுச் சென்றதை அறிந்து அவன் மனம் அதிக வேதனைப்பட்டது...