(Reading time: 33 - 65 minutes)

பிருத்வியோட கொள்கையே ஒரு பொண்ணை காதலிக்கிறோம் கல்யாணம் செஞ்சுக்கிறோம்னா... அவக் கூட காலம் முழுக்க வாழனும் என்பது தான்... ஆனா அவர் சப்னாவை காதலிச்சிட்டு என்னை கல்யாணம் செஞ்சுக்க வேண்டியதா போச்சு... அதனால என்னைப் பிரிய அவர் விரும்பல... அதே சமயம் சப்னாவை ஏமாத்திட்டோமேன்னு வருத்தமும் இருக்கு...

இப்போ பிருத்வி குழப்பத்துல இருக்காரு... அதுக்காக நான் டைவர்ஸ் வரைக்கும் போகனும்னும் நினைக்கல... வரூன் சப்னா பத்தி சொன்னதுல இருந்து... எனக்கும் சப்னா மேல நல்ல அபிப்ராயம் இல்ல... ஆனா பிருத்வி அவளை முழுசா மறந்திட்டாரான்னு தெரியல... அதனால தான் நான் சப்னாக்கிட்ட பிருத்விக்கு சம்மதம்னா நான் டைவர்ஸ்க்கு ஒத்துக்கிறதா சொன்னேன்....

இப்போ அதையும் பெரியவங்க பெரிய விஷயமா பேசறாங்க... அதுல பிருத்வி இன்னும் குழம்பி கோபம் தான் அதிகமாகுது... அதான் நான் நியூயார்க் போக முடிவு செஞ்சிருக்கேன்... பெரியவங்க கிட்ட நான் கொஞ்ச நாள் அங்க இருக்கப் போறதாகவும்... அதுவரைக்கும் இதைப் பத்தி பேச வேண்டாம்னும் சொல்லப் போறேன்...

அப்போ தான் பிருத்விக்கு யோசிக்க முடியும்... ஏதாவது முடிவும் எடுக்க முடியும்... அது என்கூட வாழப்போற முடிவுன்னா சந்தோஷப்படுவேன்... சப்னாவை கல்யாணம் செஞ்சுக்கப் போற முடிவா இருந்தா அமைதியா விலகிடுவேன்...

அதனால நான் இப்போ நியூயார்க் போகறது தான் சரி கவி... நான் நியூயார்க் போய்ட்டா நாம பிரிஞ்சுடுவோமா என்ன...?? எங்க தூரமா போனாலும் நம்ம அன்பு மாறாது புரியுதா..??"

"புரியுது சம்யூ... உனக்கு இப்போ நியூயார்க் போகறது தான் சரின்னு தோனுதுன்னா... நீ போய்ட்டு வா.. நான் தடுக்கமாட்டேன்... பிருத்வியும் நல்ல முடிவா எடுப்பாருன்னு நம்பறேன்...

ஆனா என்ன சொல்றது சம்யூ... நீ பிருத்வி மேல வச்சிருக்க காதலை என்ன சொல்றது.... பிருத்வி இவ்வளவு செஞ்சும் உனக்கு அவர் மேல கோபமே வரல... அந்த அளவுக்கு பிருத்வி மேல உயிரா இருக்க.. உன்னோட காதல்ல ஒரு நேர்மை இருக்கு... உன்னோட இந்த காதலை பிருத்வி புரிஞ்சிக்கிட்டு அவரும் உன்னை நேசிக்கனும்... அதுதான் இப்போ கடவுள்கிட்ட என்னோட வேண்டுதல்..." என்று சொல்லிய கவி யுக்தாவை அணைத்துக் கொண்டாள்.

இப்ப உனக்கு சந்தோஷமா பிருத்வி... இதுக்காக தானே நீ அங்கப் போன... இந்த நாளை தானே நீ ஆவலா எதிர்பார்த்த... உன்னோட ஆசைப்படி யுக்தா நியூயார்க்கே போகப் போறா... உனக்கு இப்போ திருப்தி தானே...

இதுதான் நீ அவளை சமாதானப்படுத்துற அழகா... நீ அவக்கிட்ட சமாதானமா பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்னு பார்த்தா... திரும்பவும் கோபப்பட்டு எல்லாத்தையும் கெடுத்திட்டியேடா... இனி என்னடா பண்ணப் போற...

இவ்வளவு நாள் எப்படியோ ஆனா இப்போ நீ அவளை காதலிக்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்டப் பிறகும் எப்படிடா இப்படி உன்னால அவ மேல கோபப்பட முடியுது... ஒவ்வொரு நாளும் அவளை பார்க்க மாட்டோமான்னு அவ நியூயார்க் போனதுல இருந்து தவிச்சியே... திரும்பவும் அவளை நியூயார்க் அனுப்பத்தானா..?? இப்படியெல்லாம் அவன் மனசாட்சி கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் அறையில் அமர்ந்திருந்தான் பிருத்வி...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

பிருத்வியோட மனசாட்சியா இப்படியெல்லாம் பேசுது என்று நீங்க நினைப்பது தெரிகிறது... ஆமாம் சின்ன வயதில் இருந்து யுக்தாவை பற்றிய நினைவுகளை மனசுக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கும் போது அதைப்பற்றி அவன் மனசுக்கு மட்டும் தானே தெரியும்...

சிறு வயதில் இருந்தே யுக்தா பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் பிருத்வி அவன் மனசுக்குள்ளேயே வைத்து மருகியிருக்கிறான்... அதனால் தான் இன்னும் கூட யுக்தாவிடம் தன் மனதில் இருப்பதை சொல்லாமல் இருக்கிறானோ என்னவோ..??

அந்த பன்னிரண்டு வயதில் இவனை விட்டுப் பிரிய முடியாமல் கண்ணீரோடு அந்த ஏர்போர்ட்டில் இவனை விட்டுப் பிரிந்து சென்ற யுக்தாவை இன்று வரையிலுமே பிருத்வியால் மறக்க முடியாது...

அன்று மட்டும் அவளை தடுக்கக் கூடிய வயதிருந்தால் அவளை எங்கும் அனுப்பாமல் தன்னோடே வைத்திருந்திருப்பான்... ஆனால் அவனால் அப்போது அது முடியவில்லை... அதற்குப் பிறகும் அவளோடு அவனால் தொடர்பில் இருக்க முடியவில்லை... அவன் பத்தாம் வகுப்பில் அடி எடுத்து வைத்ததும்... மற்றும் இரு நாடுகளுக்கிடையே ஆன நேரம் மாற்றமும் அதற்கு காரணம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.