(Reading time: 33 - 65 minutes)

னாலும் அவளை அவன் மறக்கவில்லை... யுக்தா திரும்பவும் இந்தியா வரப் போகிறாள் என்ற செய்தி அவனுக்கு கிடைக்கும் நாள் வரையுமே... எத்தனையோ நாட்கள் யுக்தாவின் அழுத முகம் அவனுடைய கனவில் வந்து அவனை தொல்லை செய்திருக்கிறது... எப்போதெல்லாம் அவன் கடவுளை தொழுகிறானோ அப்போதெல்லாம் அவன் முதலில் வேண்டிக் கொள்வது யுக்தாவிற்காக தான் இருக்கும்... அவ எப்பவும் சந்தோஷமா இருக்க வேண்டும்... என்பது தான் அந்த வேண்டுதல்... அதற்கு பிறகு தான் தனக்கும் தன் குடும்பத்துக்கும் வேண்டிக் கொள்வான்...

இத்தனை வருடங்களில் பிருத்வியின் ஞாபகமாக யுக்தாவிடம் இருந்தது ஒரு போட்டோ தான்... ஆனால் பிருத்வியிடமோ அவளின் பன்னிரண்டு வயதிலிருந்து இப்போது வரையிலுமான புகைப்படங்களை வைத்திருக்கிறான்... சுஜாதா அனுப்பியதெல்லாம் பிருத்வியிடம் தான் பாதுக்காப்பாக இருந்தது...

இப்போது கூட அதை தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்... இந்த புகைப்படங்களை அவன் வைத்திருப்பதற்கான காரணம் அவள் அழகை பார்ப்பதற்காக இல்லை... அன்று கண்ணீரோடு விடைப்பெற்ற யுக்தா அதன்பிறகாவது சந்தோஷமாக இருக்கிறாளா...?? என்று பார்க்கத்தான்... அதில் அவளது சந்தோஷமான முகத்தை தான் தேடினான்... ஆனாலும் அவள் புன்னகைத்தப்படி இருந்த போட்டோவை பார்த்தால் கூட அதில் ஏதோ ஒரு சோகத்தை அவனால் உணர முடிந்தது...

ஏன் அவள் சோகமாக இருக்கிறாள்... அவளுக்கு அங்கே நண்பர்கள் கிடைத்தார்களா இல்லையா..?? என்று அவனே கேள்விக் கேட்டுக் கொள்வான்... அப்போது அவனே அப்படியெல்லாம் இருக்காது... அவளுக்கு அங்கே நண்பர்கள் எல்லாம் கிடைத்திருப்பார்கள்... அவள் சந்தோஷமாக இருப்பாள்... பிருத்வி என்ற ஒருவன் இருப்பதையே அவள் மறந்திருப்பாள் என்று தன்னை தேற்றிக் கொள்வான்... ஆனாலும் மனதின் ஓரம் அவள் தன்னை மறந்திருப்பாள் என்று நினைக்கும் போதே வலிக்கவும் செய்யும்... ஆனால் பொதுவாக சிறுவயதிலேயே வெளிநாடு சென்றவர்கள் திரும்பவும் இந்தியா வர ஆசைப்படுவார்களா..?? யுக்தா மட்டும் எப்படி வருவாள்..?? அதனால் திரும்பவும் அவளை பார்ப்பது என்பதே முடியாத ஒன்று என்று முடிவெடுத்துக் கொள்வான்.

அவனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவளின் வாழ்த்துக்களை எதிர்பார்ப்பான்... இவனே அவளிடம் பேசலாமா..?? என்று கூட நினைப்பான்... ஆனால் பிருத்வியா?? யாரது?? என்று அவள் கேட்டுவிட்டால் இவனால் தாங்கிக் கொள்ள முடியாது அதனாலேயே அவளிடம் அவன் பேச முயற்சி செய்யமாட்டான்...

இப்படியே அவள் நினைவுகளோடு... யாரிடமும் அதை பகிர்ந்துக் கொள்ளாமல் இத்தனை வருடங்களை அவன் கடந்துவிட்டான்.. ஆனால் பிருத்வி இந்த உறவுக்கு காதல் என்று பெயர் சூட்டவில்லை... தன்னுடைய நெருங்கிய தோழியை விட்டு பிரிந்த அந்த பிரிவை தான் அவன் உணர்ந்திருந்தான்... அவளை இனி பார்க்க முடியாது... அப்படியே பார்த்தாலும் இவனை அவளுக்கு நினைவிருக்குமோ என்னவோ..?? என்று தான் நினைத்திருந்தான்.... ஆனால் ஆழ்ந்து அந்த உணர்வை அவன் சிந்தித்திருந்தால் அது காதல் என்று அவனுக்கு தெரிந்திருக்குமோ..??

ஆனால் அதை அதற்கு மேலே சிந்திக்காமல் இருந்த போது தான் வரூனுடைய நட்பின் மூலம் சப்னா இவன் வாழ்க்கையில் நுழைந்தாள்... ஏதோ ஒரு கோபத்திலும் அவள் மேல் கொண்ட பரிதாபத்திலும் அவளை காதலிப்பதாகவும்... திருமணம் செய்துக் கொள்வதாகவும் சொல்லிவிட்டான்... ஆனால் அதற்குப்பிறகு எத்தனையோ முறை அதை யோசித்துப் பார்த்திருக்கிறான்... அவன் சப்னாவை உண்மையாகவே காதலிக்கிறானா..?? இல்லையா என்று... ஆனால் அந்த கேள்விக்கு அவனுக்கு விடை தெரிந்ததில்லை...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

அதனாலேயே அவளோடான உறவு தாமரை இலை, தண்ணீர் போல இருந்தது... அதனால் தான் அவளின் சுயரூபத்தை அவனால் அறிய முடியாமல் போய்விட்டது... சப்னாவிடம் காதல் இருக்கிறதா என்று யோசித்ததற்கு பதில் யுக்தாவை காதலிக்கிறோமா..?? இல்லையா..?? என்று சிந்தித்திருந்தால் அதற்கு அவனுக்கு அப்போதே விடைக் கிடைத்திருக்குமோ...?? ஆனால் அதைப் புரிந்துக் கொள்ளாமலேயே சப்னாவை காதலிப்பதாக அவனே நினைத்தும் கொண்டான்...

இப்படியே சப்னாவை திருமணம் செய்துக் கொண்டு ஏதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்தோம் என்றாவது அவன் வாழ்க்கை அமைந்திருக்கும்... எத்தனையோ பேர் யாரோ ஒருவருக்காக அப்படி சகித்துக் கொண்டு வாழவில்லையா.. குழந்தைக்களுக்காக, பெற்றவர்களுக்காக என்று சகிப்பு தன்மையோடு திருமண வாழ்க்கையை வாழும் ஆணும் பெண்ணும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்... அங்கு கணவன் மனைவிக்கான அடிப்படையான காதல் என்ற ஒன்று இல்லாமலேயே வாழவும் பழகியிருக்கிறார்கள்... பிருத்வியும் ஒருவேளை அப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்திருப்பானோ... அதையும் தடுக்க யுக்தா வந்து சேர்ந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.