(Reading time: 33 - 65 minutes)

தன்பிறகு அவள் இல்லாத நாட்களில் தான் அவளை காதலிப்பதை அவன் உணர்ந்தான்... அவன் குடும்பத்தாரிடமும் வரூனிடமும் பேசிய போது பொறாமைப்பட்டது கூட காதலால் என்று தெரிந்துக் கொண்டான்... அவள் விருப்பம் இல்லாமல் அவளை நெருங்கியது கூட அப்படியாவது அவளுடன் இணைந்து இருக்கலாமே என்று தான் என்பதை உணர்ந்திருந்தான்...

அப்போது தான் சப்னா மீது அவனுக்கு இருந்தது காதலே இல்லை... ஒரு சதவிகிதம் கூட அவள் மேல் காதல் இல்லை என்பதை உணர்ந்திருந்தான்... முழுக்க முழுக்க ஆரம்பத்திலிருந்து யுக்தாவை தான் அவன் காதலிக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டான். யுக்தாவிற்கு தன் மனதில் என்ன இடம் என்று தெரியாமல் இருந்தவனுக்கு... யுக்தா தான் தனக்கு எல்லாமே என்பதை உணர்ந்துவிட்டான்...

நீ முதலா?? முடிவா??

நெஞ்சம் தடுமாறுதே...

முடிவல்ல நிலை என்று..

உனைப் பார்க்கிறேன்...

விடைத் தெரியாமலே..

காதலில் கலந்தேனடி...

இது என்ன மாயங்கள்...

புதிரானதே..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "உயிர் ஆதாரமே" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

என் வாழ்க்கையிலே..

காதலை உணர்ந்தது உன்னிடம்தான்..

என் உணர்வுக்கு நீ...

நிழல் தந்த தாயமையும் நீயல்லவா...

தூரம் சென்றபின் இதயம் சொன்னது..

இது தான் காதலா..

சொல்லாமலே கண் முன்

தோன்றினாய்..

நீங்காமலே நெஞ்சில்

நிறைந்ததேன்...

உன்னைக் கண்டேன்..

காதல் கொண்டேன்..

தூக்கம் இழந்தேன்..

எனை மறந்தேன்..

தேடும் உயிரே..

நொடியில் கலந்தாய்..

உள்ளம் உன்னை...

மறந்திடுமா...

உன்னில் உயிரைத்

தொலைத்தேன்..

இப்போது காதல் என்ற உணர்வு யுக்தா மீது மட்டும் தான் தனக்கு வந்திருக்கிறது என்பதை பிருத்வி உணர்ந்தும் இன்னும் அவளிடம் அதை வெளிப்படுத்தாமல்... அவள் மேல் கோபப்பட்டுக் கொண்டும்.. பேசாமலும் இருக்கிறானே..?? ஏன்??

பொதுவாக எல்லோருக்கும் அவர்களின் தாய் தந்தையரை மிகவும் பிடிக்கும்... அதற்குப் பிறகு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால்... ஒவ்வொருத்தர் ஒவ்வொருவரை கூறுவர்...

யுக்தாவிடம் அந்த கேள்வியை கேட்டால் அவளின் பதில் கவி என்று தான் வருமோ என்னவோ..?? ஆனால் அதே கேள்வியை பிருத்வியிடம் கேட்டால் வாய்விட்டு சொல்லவில்லையென்றாலும்... மனதிற்குள் அவன் சொல்லும் பெயர் யுக்தா... ஆம் அவனின் தங்கை பிரணதியை விடவும் அவனுக்கு யுக்தாவை தான் பிடிக்கும்...

ஏனோ யுக்தா நியூயார்க் சென்ற பின் அவன் யாரோடும் நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டதில்லை.. அப்படிப்பட்டவன் வரூனோடு நண்பன் ஆனதும் கூட யுக்தாவால் தான்... யுக்தாவை போல் வரூனும் ஒருமுறை பிருத்வியின் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாட.. அதை பார்த்ததும் பிருத்விக்கோ யுக்தாவின் ஞாபகம் தான் வந்தது... அன்றிலிருந்து அவன் வரூனோடு நெருங்கி பழகிவிட்டான்...

பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையிருப்பர்... தனக்கு பிடித்தவர் என்ன தவறு செய்தாலும் அதை மன்னித்து அவர்களையே சுற்றி வருவது ஒரு வகை என்றால்...

தன்னிடம் என்ன குறை இருந்தாலும் தனக்கு பிடித்தமானவர்கள் தவறே செய்யாதவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இன்னொரு வகை...

இதில் பிருத்வி இரண்டாவது வகை... சப்னா விஷயத்தில் தவறு செய்துவிட்டதாக வரூன் மீதே கோபம் கொண்டவனுக்கு... அவனை விட முக்கியமான் யுக்தா தவறு செய்துவிட்டது தெரியும் போது கோபம் ஏற்பட்டது...

என்னதான் இப்போது அதை அவன் மறந்திருந்தாலும்... தவறு செய்தவள் அவள் ஆனால் தன்னிடம் ஏன் ஒதுக்கம் காட்டுகிறாள் என்று புரியாமல் குழம்பினான்...

ஆரம்பத்திலிருந்து மனதில் உள்ளதை மறைத்தவன் இவன்... ஆனால் அவளோ வெளிப்படையாக தன் காதலை சொல்லிவிட்டாள்... அப்படியிருக்க தான் தவறு செய்த பின் கூட "பிருத்வி நீங்க எனக்கு வேணும்... அதுக்கு தான் இப்படி செஞ்சுட்டேன்.. என்று கண்ணீர் விட்டிருந்தால் எப்போதோ அவள் மீது இருந்த கோபம் போய் அவளை பிருத்வி ஏற்றுக் கொண்டிருப்பான்...

ஆனால் அப்படியில்லாமல்.. ஒருநாள் உங்கக் கூட வாழ்ந்தாலே போதும் என்றவள்... இவனோடு திருமணம் ஆனபின்னும் இவனின் காதலைப் பெற முயற்சி செய்யாமல் ஒதுக்கம் காட்டுவதும்... அவளிடம் நியூயார்க் போக வேண்டாம் என்று கெஞ்சிய போதும்... அன்று வீட்டை விட்டுப் போனதும்.. இன்று இவனை விட்டுப் பிரிந்து திரும்பவும் நியூயார்க் போகப் போவதாக சொல்வதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பிருத்வி கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

அங்கு யுக்தாவோ இவனின் காதலுக்காக காத்திருக்க..  இங்குப் பிருத்வியோ அவளின் ஒதுக்கத்தை நினைத்து தவிக்க... இந்த பிரச்சனை தீர சுலபமான வழி இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்வது தான்... அதை இருவரும் செய்வார்களா..?? இல்லை யுக்தா நியூயார்க் சென்று விடுவாளா..?? ஒருவேளை யுக்தா எந்த தவறும் செய்யவில்லை என்பதை பிருத்வி அறிந்துக் கொண்டால் அப்போதாவது தன் காதலை யுக்தாவிடம் அவன் சொல்வானா..??

ப்ரண்ட்ஸ் இதுவரைக்கும் சிறு வயதிலிருந்து யுக்தாவின் பக்கம் அவளுடைய காதலை பார்த்தோம்.. இப்போது பிருத்வியின் பக்கம் அவன் காதலை எப்படி உணர்ந்தான்... ஏன் இப்படியெல்லாம் நடந்துக் கொண்டான் என்பதை பார்த்தீர்கள்... அதற்காக பிருத்வி செய்தது எல்லாம் நியாயமில்லை.. அதை பிருத்வியே அடுத்த அத்தியாயத்தில் உணருவான்.. போதை மருந்து கலந்தது யாரென்றும் அடுத்த அத்தியாயத்தில் வரும்... இந்த அத்தியாயத்தை படித்து அதில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.. நன்றி.

Episode # 24

Episode # 26

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.