(Reading time: 11 - 22 minutes)

12. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

பிரம்மரிஷி உதிர்த்துவிட்டு சென்ற வார்த்தைகளே திரும்ப திரும்ப அவன் காதுகளில் ஒலிக்க, அவனது மனமும் அமைதியின்றி தவித்தது…

மெல்ல கருவறை நோக்கி சென்றவன், அங்கிருந்த சிவலிங்கத்தை விழியகற்றாமல் பார்த்தான்…

பின், விருவிருவென்று அந்த கோவிலை விட்டு அவன் வெளியேற, கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திடமிருந்து லேசான சிரிப்பு சத்தமும் கேட்டது….

அதே நேரம், கயிலாய மலையில் ஈசனின் அருகில் இருந்த பார்வதி தேவியும் அவரை உற்று கவனிக்க, அவரது முகத்தில் இருந்த சிரிப்பு கொஞ்சமும் மறையவில்லை…

தவித்துப் போனவனாய் கோவிலை விட்டு வெளியேறிவனையே பின் தொடர்ந்தது, தேவியின் பார்வையும்…

அப்போது, “சதி… இந்த பாலை கொஞ்சம் குடிச்சிட்டு படும்மா….” என மகளை எழுப்பிக்கொண்டிருந்தார் பிரசுதி…

பிரம்மரிஷியின் அருளால் ஆழ்ந்த துயிலில் இருந்தவள், அன்னையின் குரலில் உறக்கத்தை விடுத்து எழ முயற்சித்தாள்…

“சதி… நீ படும்மா… எந்திக்க வேண்டாம்… பால் அப்புறம் குடிச்சிக்கலாம்… நீ தூங்குடா…” என்ற தட்சேஷ்வர் மகளை எழுந்திட விடாது தடுக்க,

“பாலை மட்டும் குடிச்சிட்டு படுத்துக்கம்மா… போதும்…” என பிரசுதி அவளிடத்தில் கெஞ்ச, தட்சேஷ்வர் முறைத்தார் தனது மனைவியை…

“என்ன எதுக்கு இப்போ முறைக்குறீங்க?... நான் என்ன என் உடம்பு நல்லதுக்கா பாலை குடிக்க சொல்லுறேன்?... அவ நல்லதுக்காக தான் எழுப்புறேன்…” என கணவரின் முறைப்புக்கு பதில் முறைப்பாய் பிரசுதியும் சொல்ல,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

“சதி இப்போ எப்படி இருக்குற?...” என்றபடி வந்தாள் தைஜூ காலேஜூக்கு கிளம்பியபடி…

“தைஜூ…..” என்றவள் சட்டென எழுந்து அமர, அனைவரும் விழித்தனர்…

“என்னடி…. எதுக்கு இந்த அவசரம்?...”

“இல்ல தைஜூ… நான் இன்னும் கிளம்பலையே…. பாரு நீ கிளம்பி வந்துட்ட….”

“ஹேய்… நீ எங்க வரப்போற?... காலேஜூக்கா?... ஒன்னும் தேவை இல்லை…. ஒழுங்கா ரெஸ்ட் எடு….”

“இல்ல தைஜூ… க்ளாஸ் எல்லாம் மிஸ் ஆகிடும்… நான் வரேன்… எனக்கு ஒன்னும் இல்லை…”

“ஒன்னும் மிஸ் ஆகாது… நான் நோட்ஸ் எடுத்துட்டு வந்து ஈவ்னிங்க் தரேன்… நீ அதைப் பார்த்து படி… போதும்….”

“இல்ல தைஜூ… அதெல்லாம் சரி வராது… நானும் வரேன்… ஒருநாள் பார்க்கலைன்னாலும் என்னால முடியாது…” என சொல்லிக்கொண்டே சட்டென கட்டிலை விட்டு எழுந்து கொண்டாள் சதி…

“என்னது?... ஒருநாள் பார்க்கலைன்னாலுமா?...” என்ற பிரசுதியிடம்,

“ஒருநாள் க்ளாஸ் ரூமைப் பார்க்கலைன்னாலும் அவளால தாங்கிக்க முடியாதாம் ஆன்ட்டி… அதை தான் அப்படி சொல்லிட்டுப் போறா உங்க அருமை பொண்ணு….” என சமாளித்த தைஜூவை இப்போது முறைக்க ஆரம்பித்திருந்தார் பிரசுதி…

“ஐயய்யோ… ஆன்ட்டி கண்டுபிடிச்சிட்டாங்களோ… முறைக்குறாங்களே… ஹ்ம்ம்… சமாளிப்போம்…” என மனதிற்குள் புலம்பியவள்,

வெளியே அவரிடம், “ஆ…ன்…ட்….டி…. என்னாச்சு?...” என மெல்ல கேட்டாள் அவள்…

“தைஜூ…. நான் உனக்கு இன்னும் ஆன்ட்டி தானா?...”

“ஆமா, சொன்னாலும் சொல்லலைன்னாலும் நீ ஆன்ட்டி தான?...” என தட்சேஷ்வர் முந்திக்கொண்டு பதில் சொல்ல, இப்போது முறைப்பு அவரிடத்திலும் திரும்பியது…

“பாரு தைஜூ, உண்மையை சொன்னா கூட இவ முறைக்குறா….”

“நீங்க பேசாம இருங்க… உங்ககிட்ட நான் எதுவும் பேசலை…” என கணவரின் வாயை அடைத்தவர்,

“சொல்லு தைஜூ… நான் உனக்கு இன்னும் ஆன்ட்டி தானா?...” என விடாப்பிடியாய் கேட்க,

“அது… வந்து…. அ…..த்……….தை………” என இழுத்தாள் அவள்…

“ஹ்ம்ம்…. இந்த அ…….த்……..தை சொல்ல இவ்வளவு நேரமாச்சா உனக்கு?...”

“அப்படி எல்லாம் இல்ல ஆ…ன்….. ம்ம்  அத்…..தை…. எப்பவும் கூப்பிடுற மாதிரி சட்டுன்னு வந்துட்டு… அதான்…”

“ஹ்ம்ம்… இனி அத்தை சொல்லி பழகிக்க… சரியா?... இந்த ஆன்ட்டி எல்லாம் வந்துச்சு அப்புறம் நான் பொல்லாத மாமியாரா மாறிடுவேன் சொல்லிட்டேன்…..”

“ஆமா… இதுக்கு மேல நீ பொல்லாதவளா மாறணுமாக்கும்….” என தட்சேஷ்வர் முணுமுணுத்துக்கொண்டது தைஜூவுக்கு கேட்டதோ இல்லையோ பிரசுதிக்கு தெளிவாகவே கேட்டது…

பிரசுதி அடுத்த பானிபட் போருக்கு தயாராவதற்குள்,

“தைஜூ, வா… நேரமாச்சு… சீக்கிரம் கிளம்பினா தான் சரியா இருக்கும்… வா…” என சதி, தைஜூவின் கைப்பிடித்து இழுத்தாள்…

“சதி… இன்னைக்கு ஒருநாள் லீவ் போட கூடாதாம்மா…” என தட்சேஷ்வர் கவலையோடு கேட்க,

“அதெல்லாம் வேண்டாம்ப்பா… ஐ அம் ஓகேப்பா… வரேன்ப்பா…” என்றவள் அவரின் தோள் சாய்ந்து அணைத்துவிட்டு,

பிரசுதியிடம், “வரேன்மா…” என சொல்லிவிட்டு தைஜூவை அழைத்துக்கொண்டு வேகமாக நடந்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.