(Reading time: 11 - 22 minutes)

10. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

'ம்ம்.., 'என்று எழுந்தாள் ராதை அம்மாவிடமும், அப்பாவிடமும் நாங்கள் போயிட்டு வரோம்' என்றாள் ராதா,

சரி' என்றார்கள் பெரியவர்கள். சுந்தரமோ 'எங்களுக்காக வெயிட் பண்ண வேண்டாம் நீங்க சாப்பிட்டுடுங்க' என்றார்.

சுந்தரம் ஏற்கனவே பஞ்சுவைக் கூப்பிட்டு,’ அவர் என்னுடைய நெருங்கியவர்கள் அதனால் எனக்கு எப்படி செய்வீர்களோ அந்த மரியாதையுடன் எல்லாம் செய்ய வேண்டும். நல்லா சமைத்து போடுங்கள், நாங்கள் இன்று இங்கு சாப்பிட மாட்டோம் வெளியே தான் நானும் பெண்களும் சாப்பிடுவோம்’ என்று சொல்லி கிளம்பிவிட்டார்.

எல்லோரும் கிளம்பி இருந்த பென்ஸ் காரில் ஏறினார்கள். மூன்று பெண்களும் பின்னாலும், சுந்தரம் முன்னாலும் உட்கார்ந்தார்கள், சிவா காரை டிரைவ் செய்தான்.

இவர்கள் காரில் போகும் போது சுந்தரம் நடக்க இருக்கும் கல்யாண ஏற்பாடுகளை சிவாவிடம் கேட்டார், அவனும் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சின்னவர்கள் ஏதோ குச் குச்..... என்று பேசிக் கொண்டிருந்தார்கள், அதற்க்கு ராதா 'ஸ்...ஸ்..., சும்மா இருங்க, போற இடமெல்லாம் எப்படி இருக்கனும்னு தெரியாது?' என்று கடிந்துக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டார் சுந்தரம்

'ஏன்? அவர்கள் என்ஜாய் செய்கிறார்கள் விடேன் பாவம்,' என்றார்.

அவர் காதில் விழுந்ததை நினைத்து வெட்கினாள், தங்கைகளை முறைத்தாள். அவளுக்குத் தெரியாது சுந்தரம் தன்னை கண்ணாடி வழியே பார்கிறார் என்று.

அவர் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.

சிவாவிடம் 'சிவா, நம்ம ஆனந்தனுக்கு போன் போட்டுக் கொடு பேசனும் அவனாலே கல்யாணத்துக்கு வர முடியாது ஆனால் விஷயம் சொல்லணுமில்ல' என்றார் சுந்தரம்

‘என்ன சொல்றே ராதா, அவனிடம் சொல்லனும் இல்ல?' என்று கேட்டார் ராதாவிடம்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

‘எனக்கும் அவனைப் பார்க்க வேண்டும் போலிருக்கு முடிந்தால் வரச் சொல்லுங்கள்' என்றாள் அவள்

'அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைக்கிறேன், அதனால் முழு விவரம் சொல்லாமல் கல்யாணமென்று மட்டும் சொல்றேன், என்ன சொல்ற?' என்று சொன்னார்

'அவள் சிரித்துக்கொண்டே ஏதோ அவனுக்கு கோபம் வராமல் பார்த்துக்குங்க' என்றாள் ராதா

தங்கைகளுக்கு, தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது.

அக்காவிடம் மெதுவாக 'யாருக்கக்கா கல்யாணம்? எங்களுக்கு மாப்பிள்ளையை காட்டமாட்டீங்களா?' என்று கேட்டாள் ரம்யா

அவர்கள் பேசுவது ரொம்ப மெதுவாக இருந்தாலும் சுந்தரத்திற்கு கேட்டுவிட்டது.'கல்யாணம் உன் அக்காவிற்கு, ஆனால் மாப்பிள்ளையோ, சர்ப்ரைஸ்' என்றார்

'சர்ப்ரைஸ் எங்களுக்கு மட்டுமா, இல்லை அக்காவுக்குமா?' என்றாள் சின்னவள் ரஞ்சனா

'அதை நீ உங்க அக்காவிடம்தான் கேட்கவேண்டும்' என்று கூறி அவளை கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம்

ராதாவிற்கோ முகம் சிவந்து, நாணம் கூடியது, தன் தங்கைகள் கிண்டல் பேர்வழிகள், தன்னை விடவே மாட்டார்கள் என்று முகத்தை வெளியில் பாற்பதுப் போல் திருப்பிக் கொண்டாள், சுந்தரமோ வாய்விட்டு சிரித்தார்

மனதிற்குள் அவரை திட்டிக்கொண்டிருந்தாள்

தங்கைகள் விடுவதாக இல்லை,தொந்தரவு செய்தார்கள்,

'அக்கா நீ யாரையும் லவ் செய்கிற டைப் இல்ல, அது எங்களுக்குத் தெரியும், இந்த உங்களவர் யாருக்கா ? கொஞ்சம் சஸ்பென்ஸ்ல, வைக்காம, எங்களுக்கு சொல்லிடு ,' இல்லேன்னா ரம்யாக்கு தலை வெடித்துவிடும் என்றாள் சின்னவள், '

அதற்கு ரம்யா 'ஏய்..., உனக்குத் தலை வெடித்துவிடுமென்று சொல்லு ஏன், என் பேரைச் சொல்ற’ என்று சொல்லி, ‘அக்கா உனக்கு ஒன்று தெரியுமா நம்ம ரஞ்சி என்று ஆரம்பித்தாள், உடனே ரஞ்சனா,' ரம்யா உன் கால் எங்கே காணோமே?’ என்றாள்

ரம்யாவோ 'அது எதுக்கு உனக்கு இப்போ?' என்று கேட்கவும்

ரஞ்சனா 'வேறு எதுக்கு, எல்லாம் உன் காலில்விழத்தான்,' என்று கொஞ்சம் பயந்தவள் போல் முகத்தில் பாசாங்கு காண்பித்தாள்

காரில் எல்லோரும் சிரித்துவிட்டனர், ஆனாலும் ரம்யாவுக்கும், ரஞ்சனாவுக்கும் வெட்கமாக ஆகி விட்டது, ராதாவுக்கு, இந்தப் பெண்கள் ஏன் இப்படி வாயடிக்கிறார்கள் என்றிருந்தது.

‘ராதா உன் தங்கைகளுடன் ரொம்ப பொழுது போகுமென்று நினைக்கிறேன், நீயும் இவர்களுடன் இப்படித்தான் வம்பிழுப்பாயா?’ என்றார் சுந்தரம்

அதற்கு ரஞ்சனா ' ஐயோ, அங்கிள் நீங்க யாரைப் பார்த்து கேக்கறீங்க? எங்க அக்கா எங்களுக்கு நேர் எதிர்மறை, எப்போதும் ஏதோ ஒரு கனவுலகிலேயே இருப்பாள், எப்பவும் ஏதோ யோசிப்பாள், கொஞ்ச நேரத்தில் கண்ணைத் துடைத்துக் கொண்டு வருவாள், ஏதாவது கேட்டால், கண்ணில் தூசு என்பாள்.

ஒரு தடவை நாங்க ரெண்டு பேரும் மாடிக்குப் போலாம் என்று போனோம் அங்கே அக்கா….’ என்று ஆம்பித்தவளை ரம்யா தடுத்தாள், 'சும்மா இரு ரஞ்சி, என்ன பேசறேன்னு தெரியுதா' என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.