(Reading time: 11 - 22 minutes)

ராதாவிடம் ' உனக்கும், உன் தங்கைகளுக்கும் இன்னும் ஏதாவது வேண்டுமா? என்று கேட்க, அவள் தன் தங்கைகளைப் பார்த்தாள், அவர்கள் ஒன்றும் வேண்டாமென்று தலையாட்டினர், அவளும் வேறு ஒன்றும் வேண்டாமென்று சொன்னாள்.

ஆனால் அவர் விடவில்லை, சிவா, இந்த புடவை எல்லாம் வரதுக்குள்ளே, இவங்களைக் கூட்டிப்போய் கொஞ்சம் சல்வார் இருக்குமிடம் அழைத்துக்கொண்டுப் போ, அவர்களுக்கு எது, எடு பிடிக்குதோ அதெல்லாம் எடுத்துக்கட்டும்' என்றார்

'அதெல்லாம் வேண்டாம், இருக்கிறதே போதும் ,’ அவர் அவளை ஒரு முறை முறைத்தார், பிறகு சிவாவிற்கு கண் ஜாடை செய்தார், ராதாவும் தங்கைகளுக்கு போகும்படி கண் காண்பித்தாள், அவர்கள் சென்று விட்டார்கள்.

சிறிது நேரத்தில் அவர்கள், இருவரும் வந்தார்கள், ' அக்கா, சொன்னா கேக்கவே இல்ல நிறைய எடுத்தாட்டாங்கன்னு பேசிக்கொண்டு இருக்கும்போது, சுந்தரத்திற்கு போன் வந்தது அவர் அதை எடுத்து ராதாவைப் பார்த்து ஜாடை செய்தார், அவள் முகத்தில் ஒரே சிரிப்பு, போனில் அக்காவைக் கல்யாணம் செய்துக்கொள்ளபோகிறவன் தான் என்று நினைத்தார்கள் தங்கைகள்.

‘என்னடா, எப்படி இருக்க? உன்னை உன் அம்மா பாக்கணுமாம் கிளம்பி வாடா உடனே' என்றார் சுந்தரம்

‘ஆமாம், ஆனா மனசு மாத்தின்டுட்டேன், ஆமாம் வர வெள்ளிக் கிழமைதான்.... ஆமாம் வரியா? கோபப் படாதேடா…’

‘சரி அவ உன்னைப் பார்க்கனும்னு சொல்லறா, நீ வந்தியானா பெரிய ஷாக் இருக்கு உனக்கு ...ஆமாம்...ஷாக்தான் ‘

‘சரி, நான் சொல்லிட்டேன் பிறகு உன் இஷ்டம், வருவதும், வராததும்’

‘சரி அவளோட பேசறியா? சரி வெச்சுடறேன்’

போனை வைத்து விட்டார். ராதாவிற்கு முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவளிடம் வந்து அவள் தோள் மேல் கை போட்டு, அவளிடம் மெதுவாக சொன்னார் ‘அவனுக்கு யாரென்று விஷயம் தெரியாது அதான் அப்படி பேசுகிறான், இதற்க்கு போ போய் வருத்தப்படலாமா? ‘என்று அக்கம்பக்கத்தை பற்றி கவலைப் படவில்லை

அவள் கண்ணைத் துடைத்து விட்டார்,’ கவலைப் படாதே அவன் கண்டிப்பாக வருவான், வந்தவுடன் தெரிந்துக் கொள்வான்’ என்றார்.

அவள் தங்கைகளுக்கு என்ன இவர் இப்படி அக்காவிடம் இவ்வளவு க்லோசாக இருக்கிறார், அக்காவும் அவருடன் அப்படி க்லோசாக இருக்கிறாள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

என்று இருவரும் நினைத்துக் கொண்டார்கள்.

புடவையெல்லாம் வந்து விட்டது முதலில் கல்யாணப் புடவை பட்டு என்று அவர்கள் எடுத்துப் போட்டதில், அவர்கள் இருவருக்கும் பிடித்த பர்பில் அண்ட் மரூன் கலர் புடவை ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம், அதை செலக்ட் செய்தார்கள்.

அடுத்தது, அவள் அம்மாவிற்கும், ரம்யாவையும், ரஞ்சனாவையும், அவர்களுக்கு என்ன தேவையோ வாங்கிக்கச் சொன்னார், என்ன விலையானாலும் பரவாயில்லை, தங்களுக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

அவர்களும் ரொம்ப விலை வேண்டாமென்று பத்தாயிரம் ரூபாயில் தங்களுக்கும் அவர்கள் அக்காவுக்கும் பிடித்த மாதிரி எடுத்துக் கொண்டார்கள்

அம்மாவுக்காக கொஞ்சம் சில்க் காட்டன் அண்ட் காட்டன் புடைவைகளும், சின்னவர்களுக்கு சிப்போன் புடவைகளும் எடுத்தார்.

ராதாவுக்கு வேண்டியது தானே எடுத்து அவளை, எப்படி இருக்கு என்று கேட்டார், அவளும் வெட்கப் பட்டுக்கொண்டே நல்லா இருக்கு என்றாள்

இதை தங்கைகள் பார்த்துக் குழம்பிவிட்டார்கள், என்ன இது, இவர் அக்காக்கு புடவை செலக்ட் செய்யறார்,அக்கா இவரை பார்த்து வெட்கப் படுகிறாள் என்று குழப்பத்துடனே இருந்தார்கள்

சில நகைகள் வாங்கினார், ராதாவோ பழைய நகைகள் இருக்கிறதே அதே போதுமென்றாள், ஆனால், கொஞ்சம் புதுசா வாங்கிக்கலாம், அதெல்லாம் பழைய மாடல், இப்போ புதுசா வாங்கிக்கோ, குழந்தைகளுக்கும் கொஞ்சம் வாங்கிக்கோ' என்றார் சுந்தரம்

எனக்கு அந்த பழைய மாடல் போதும், வேண்ணா, இவங்களுக்கு வாங்குங்க' என்றாள்

ஒரு முறை முறைத்தார் சுந்தரம், 'ஏன் நான் சொல்வது எதுவும் கேட்கக்கூடதென்று இருக்கியாம்மா ராதா? ‘என்று கேட்டார்

இல்லை எல்லாமே இருக்கும்போது அனாவசியமாக எதற்கு இன்னும் வாங்கறது, அதான் சொல்லறேன்' என்றாள்

ஒரு பெரு மூச்சு விட்டு 'கேள் ராதா, நமக்கு பணத்திற்கு ஒரு குறைவுமில்லை, அதுவும் உனக்கு செலவு பண்ணாம யாருக்கு பண்ணனும்' சொல்லு பார்க்கலாம்.

சரி அத்தனை நகையும் எப்போ போட்டுப்போம், எப்போ போட்டாலும் ஒரு செட்தான் போட்டுப்போம், அதனாலேதான் சொல்றேன், பிறகு உங்க இஷ்டம்' என்று சொன்னாள்

அவர் சிரித்து விட்டு அவள் தோளில் கையை போட்டு ஒரு அழுத்து, அழுத்தி இப்படி முகத்தை வைத்துக் கொண்டு சொன்னால் எப்படி? ஹ்ம், சொல், சரி இப்போ தாலி கொடி மட்டும் வாங்கிக் கொள்ளலாம், பிறகு அப்பப்போ வாங்கிக்கலாம்' என்றார் சுந்தரம்

பிறகு அவளுக்கு, அவள் அம்மா, தங்கைகளுக்கு என்று கொஞ்சம் நகை வாங்கினார்.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.