(Reading time: 11 - 22 minutes)

தற்கு சுந்தரமோ ‘அவளை தடுக்காதே, அவள் சொல்லட்டும் என்றார், ராதா கண்ணை மூடிக் கொண்டு இருந்துவிட்டாள்.

ரஞ்சனா பேச வேண்டாமென்று நிறுத்திவிட்டாள் அவர் ஊக்கினார், ஒன்றுமில்லை அங்கிள் என்று சொன்னவளை, இப்போ நீ சொல்லவில்லை என்றாள் ராதாவை விட்டு உன்னைச் சொல்லச் சொல்வேன் என்ன?' என்று கேட்டவுடன்

ராதாவே 'அதான் ஆரம்பித்து விட்டாயே, மிச்சதையும் சொல்லிவிடு, உங்களுக்கு இந்த விஷயம் எவ்வளவு தெரியும் என்று எனக்கும் தெரியவேண்டும்' என்றாள்

'சாரிக்கா,' என்றாள் தங்கை

பிறகு தொடர்ந்தாள், ' தானே பேசிக் கொண்டிருந்தாள், "நீங்கள் என்னிடம், என்னைத் தேடி வருவீர்களா?நான் இங்கு தவிப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? உங்களுக்காகத்தானே நான் இங்கு வந்திருப்பது, என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தா, எங்களுக்கு முதலில் அக்காவுக்கு காதல் என்று நினைத்துக்கொண்டிருந்தோம், ஆனால் பிறகு சின்ன வயதிலிருந்து உங்களுக்காக காத்திருக்கிறேன் என்றாள், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, பிறகு நாளடைவில் அவளுக்கு காதலர் யாருமில்லை என்று புரிந்துக் கொண்டோம், அப்புறம் கண் கானித்தோம், பிறகு ஒரு வேளை...... என்று இழுத்து விட்டு அம்மா அப்பாவிடம் சொல்லலாமென்று நினைத்தோம், அதுவும் வேண்டாமென்று விட்டுவிட்டோம். ஆனால் எங்களுக்குத் தெரியும் அவள் யாரையும் காதலிக்கவில்லை என்று ஆனால் மனதில் யாரோ இருக்கிறாரென்று.’ என்று சொல்லி முடித்தாள்.

இதைக் கேட்ட சுந்தரத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது, சிவாவின் கண்களிருந்தும் கண்ணீர்

ரம்யாவும் , ரஞ்சனாவும் பார்த்து விட்டார்கள் அவர்கள் கண்களிலிருந்து தண்ணி வருவதை ஏன் இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? என்று நினைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ராதாவை திரும்பி பார்த்தார்கள் அவளும் தலையைக் குனிந்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

ஏதோ வித்யாசமாக உணர்ந்தார்கள் ரம்யாவும், ரஞ்சனாவும். கடைப் பார்க்கிங்கில் காரை எடுத்துக் கொண்டு போனான் சிவா. எல்லோரும் இறங்கனும் ஆனால் சுந்தரம் சொன்னார், 'அவர்கள் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு கடைக்குள் போ, நான் ராதாவை கூட்டிக் கொண்டு வருகிறேன்’ என்றார் சுந்தரம்

‘சரி சார்,’ என்று அவர்களைக் கூட்டிக்கொண்டு சென்றான் சிவா.

சுந்தரம் இறங்கி பின் சீட்டிற்கு செல்வதை ரம்யாவும் , ரஞ்சனாவும் பார்த்தார்கள் , அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ரம்யா, ரஞ்சியிடம் ‘எல்லாம் உன்னால் வந்தது ரஞ்சி, நாம் இது பற்றி அக்கா எதிரில் பேசக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம் இல்லையா? எப்படி நீ அக்கா எதிரில் யாரோ ஒருவரிடம் சொன்னாய்?’

‘அக்காதானே சொல்லுன்னா'

‘அது நீ ஆரம்பித்ததனால், நீ ஏன் ஆரம்பித்தாய்?’ என்றாள் ரம்யா

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

சுந்தரம் ராதாவின் முகத்தை நிமிர்த்தி, ' இங்கே பார் என் செல்லம், இப்போதான் நான் வந்துவிட்டேன் இல்ல, அதனால் அழக்கூடாது,’ என்று அவளைத் தன்னுடன் அனைத்துச் சமாதானம் செய்தார். ‘இப்போ கடைக்குள் போலாமா? இல்லை, நாளைக்கு வரலாமா?’ என்றார்

அவள் ‘இப்பவே போகலாம்’ என்றவுடன் , பக்கத்திலிருந்த பாட்டிலை எடுத்து தன்னுடைய சின்ன டவலை நனைத்து அவளுடைய முகத்தில் தானே ஒற்றி எடுத்தார், அவள் தானே செய்துக்கொள்வதாக சொல்லியும், விடு நானே செய்கிறேன் என்று துடைத்து, அவள் தலையை சரிச் செய்து வா, உன் தங்கைகள் காத்துக் கொண்டிருப்பார்கள்' என்று இரண்டு பேரும் உள்ளே சென்றார்கள்

அங்கே அவர்கள் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள், இவரைப் பார்த்தவுடன் கடை மேனஜர் வந்துவிட்டார் 'என்ன சார் இவ்வளவு தூரம், சிவா தான் வரார்னு நினைத்தேன் நீங்கள் வருவது தெரியாதே என்றார், வாங்க முதலாளி ரூமிற்கு போகலாம்' அழைத்துச் சென்றார்.

அங்கு சுந்தரத்தை பார்த்தவுடன் முதலாளி எழுந்து வந்து ‘என்ன இது நீங்க இவ்வளவு தூரம், சொல்லி அனுப்பினால் கடையையே உங்க வீட்டிற்கு அனுப்பி இருப்பேன்' என்றார் கடை முதலாளி.

சுந்தரமோ 'அப்படி இல்லை, எங்களுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் ,இப்படி வந்து ஷாப்பிங் செய்வது பெண்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும். எங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்கிறேன், அங்கு கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருக்கிடமாக சொல்லுங்கள் நாங்கள் பார்க்கிறோம்' என்றார்

'ஐயோ, அதெல்லாம் வேண்டாம், உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லுங்கள் நான் இங்கேயே கொண்டு வரச் சொல்கிறேன்' என்றார் கடை முதலாளி

சுந்தரம் ‘எனக்கு கல்யாண புடவை ரெண்டு நல்லதாக என்ன விலை இருந்தாலும் பரவாயில்லை, அப்புறம் மற்றவர்களுக்கு வாங்கும் பட்டுபுடவை, ‘ என்றுஒரு லிஸ்ட் தயார் செய்து அவர்களிடம் கொடுத்தார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.