(Reading time: 33 - 65 minutes)

னா அம்மா அப்புறம் மதி அத்தையோட நட்பை சும்மா சொல்லக் கூடாது... நாம ரெண்டுப்பேரும் அவங்க கால் தூசிக்கு கூட வரமாட்டோம்... இன்னிக்கு வரைக்கும் எவ்வளவு பிரச்சனை நடந்தும் அவங்க ஒற்றுமையா அதை கையாளறாங்க...

அன்னைக்கும் அவங்க ரெண்டுப்பேரால எங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு... ஆனா பிருத்வி கூட என்னால இயல்பா இருக்க முடியல... சாதாரணமா பேசினாக் கூட அவரை மயக்க தான் அப்படி நடந்துக்கிறேனோன்னு சொல்லிடுவாரோன்னு பயம்...

அதுக்காக பிருத்வியை நான் குற்றமும் சொல்லல... அவரோட நிலைமை எனக்குப் புரியுது... ஒரு பக்கம் சப்னாவை ஏமாத்திட்டோம்னு குற்ற உணர்வு... ஒரு பக்கம் என்கிட்ட இப்படி நடந்துக்கிட்டதை நினைச்சு கஷ்டமா இருந்திருக்கும்... இதுல நான் இப்படி செஞ்சிட்டேனேன்னும் என்மேல கோபம்... இதெல்லாம் புரிஞ்சு தான் நான் அமைதியா இருந்தேன் கவி.."

"ஆனா சம்யூ... நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது... நீ இந்த கல்யாணம் வேண்டாம்னு இப்படி நடந்துக்கிட்ட சரி... ஆனா விதி உங்க ரெண்டுப்பேரையும் கல்யாண வாழ்க்கையில இணைச்சுடுச்சு... அதனால அதுக்கப்புறமாவது நீ உண்மையை சொல்லியிருக்கலாமே...??"

"நான் தான் முதலிலேயே சொன்னேனே... பிருத்வியை எந்த வழியிலாவது அடைஞ்சிடலாம் என்பது என்னோட எண்ணம் கிடையாது... முதல்ல கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுக்காக என் மேலேயே பழியை போட்டுக்கிட்டு... இப்போ அவர் கூட வாழ என்னை உண்மையை சொல்ல சொல்றியா..?? அப்புறம் அந்த சப்னாவுக்கு அநியாயம் செஞ்சுட்டதா எனக்கு உறுத்தலா இருந்துச்சு... அப்புறம் பிருத்விக்கிட்ட இந்த விஷயத்தை சொன்னா... அத்தனை பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்திட்டோமேன்னு இன்னும் வேதனை தான் படுவாரு...

ஏற்கனவே அவர் கஷ்டப்பட்றது போதாதா..?? அப்புறம் எல்லாம் தப்பும் அவர் செஞ்சதுன்னு குற்ற உணர்வுல தவிப்பாரு... அதனால என்மேல இரக்கம் தான் வரும்... நான் பிருத்விக்கிட்ட எதிர்பார்க்கிறது காதல் தான்... இரக்கம் இல்லை... அதனால தான் அவரை விட்டு விலகியே இருந்தேன்...

ஆனா அப்படி பிருத்வியை விட்டு விலகியிருக்கவும் முடியல... நாங்க ஏதோ ஒரு வாழ்க்கைன்னு வாழ ஆரம்பிச்சிட்டோம்... ஆனா அன்னைக்கு பிருத்வி பேசினப்போ தான்... பிருத்விக்கு என்மேல கோபமும் வெறுப்பும் அப்படியே இருக்குன்னு தெரிஞ்சுது... பிருத்வியோட காதல் எனக்கு கிடைக்கலன்னாலும் பரவாயில்ல... ஆனா அவர் என்னை வெறுத்திடக் கூடாதுன்னு தான் நான் வீட்டை விட்டுப் போனேன்...

ஆனா தேவா சொன்னதுக்கு அப்புறம் தான் அதுவும் தப்புன்னு புரிஞ்சுது... ஆனா பிருத்விக்கு இன்னமும் என்மேல இருக்க வெறுப்பு போகலை போல... அதான் அவரை விட்டு பிரியறது நல்லதோன்னு தோனுது..."

"ஆனா பிருத்விக்கு உன்னை டைவர்ஸ் பண்றதுல இஷ்டமில்லன்னு தானே சம்யூ சொன்னாரு.." என்று கவி சொன்னதும்... யுக்தா சிரித்தாள்.

"எதுக்கு சிரிக்கிற.."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"நேத்து வரைக்கும் நான் பிருத்வியை டைவர்ஸ் பண்றது சரின்னு சொல்லிக்கிட்டு இருந்த... இப்போ இப்படி பேசறீயே அதான் சிரிப்பு வந்துடுச்சு..."

"நான் பிருத்வியை கொஞ்சம் தப்பா தான் புரிஞ்சிருந்தேன் சம்யூ... இப்பவும் பிருத்வி செஞ்சது எல்லாம் சரின்னு நான் சொல்ல வரல... ஆனா அன்னைக்கு பிருத்வி போதையில பேசினதை யோசிச்சுப் பாரேன்... அவருக்கு உன்னை பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா...?? அப்புறம் பிருத்வியோட வாழறதுல என்ன சம்யூ..??"

"இப்பயாவது நீ பிருத்வியை புரிஞ்சிக்கிறதை நினைச்சு எனக்கு சந்தோஷமா இருக்கு கவி... நீ சொல்றது போல பிருத்வி என் மேல அன்பா இருக்கலாம்... ஆனா அதை காதல்ன்னு சொல்ல முடியாது... சின்ன வயசுல பழகின ஒரு ஃப்ரண்டா என்னை எதிர்பார்த்திருக்காரு... அப்புறம் நான் வரமாட்டேன்னு முடிவு பண்ணியிருக்காரு அவ்வளவுதான்... இதுல காதல் எங்க இருந்து வந்துச்சு...

அதுக்கப்புறம் சப்னாவை காதலிச்சாரு... கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்தாரு... இதுல நான் தான் குறுக்க வந்துட்டேன்... ஒருவேளை நான் என்னோட காதலை சொல்லாம இருந்திருந்தா இந்தப் பிரச்சனையே இல்ல... நான் அதை சொல்லப் போக... என்னோட மனசை கஷ்டப்படுத்திட்டோமேன்னு அவர் வருத்தப்பட்றாரு... அதுதான் அன்னைக்கு அவர் அப்படி பேச காரணம்... அந்த நேரம் அந்தப் பேச்சு எனக்கும் ஆறுதலா இருந்தது தான் தப்பாப் போச்சு...

ஆனா இப்போ எனக்கு பிருத்வியோட நிலைமை புரியுது... அதுக்கப்புறம்  பிருத்வி கோபப்படும் போது கூட நான் அழாம இருந்ததுக்கும் அதுவும் ஒரு காரணம்... இன்னும் அவரை வருத்தப்பட வைக்கக் கூடாதேன்னு தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.