(Reading time: 15 - 29 minutes)

ந்த சில நாட்களில் ஆபிஸ்ல் தனகென ஒரு நட்பு வட்டாரத்தையே உருவாக்கி வைத்திருந்தான் விஷ்ணு. அதில் வித்யாவும் அடக்கம். அவன் போனில் யாரோ ஒரு பெண்ணிடம் சீக்கிரம் வருவதாகக் கூறியது கேட்ட பின்னர்தான் அவள் இவனைக் கலாய்க்கிறாள்.

“கமான் வித்யா நீ சொன்ன தப்ப இருக்குமா. இந்த போட்டோஸ் எல்லாம் சூப்பர். நீயே நல்ல போட்டோஸ் எது னு செலக்ட் செஞ்சி அனுப்பிடு” என்று கூறிவிட்டு தன் பை எடுத்துக் கொண்டு வித்யாவிற்கு பை சொல்லிவிட்டு ஓடினான் விஷ்ணு.

“எஸ்கேப் ஆகிட்டியா. திரும்பவும் நாளைக்கு இங்கதானே வரனும். அப்போ கவனிச்சிக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு வேளையைப் பார்க்க தொடங்கினாள் வித்யா.

அங்கிருந்து கிளம்பியவன் நேராக அனு வீட்டிற்கு வந்தான். வீட்டினுள் நுழைந்தவன் அனுவைப் பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டான். அனு தன்னை சுற்றி புத்தகங்கள், போன் டைரி, ரிமோட் என எல்லாம் சிதறி கிடக்க நடுவில் மதுரையை எறித்த கண்ணகி போல் அமர்ந்திருந்தாள்.

இவன் எதற்காகச் சிரிக்கிறான் என்று அவளுக்கும் தெரியும். “என்னோட நிலமையைப் பார்த்தா சிரிப்பா இருக்கா உனக்கு” என்றாள் பொய் கோபத்தோடு.

“ச்ச ச அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனு” என்று சிரிப்பை அடக்க முயன்றான் ஆனாலும் முடியவில்லை.

“சிரி விஷ்ணு, நான் படுர அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும். பேசாம கல்யாணத்துக்கு 3 நாட்கள் முன்னாலேயே வேளையை விட்டிருக்கலாம். எல்லாம் எங்க அம்மாவ சொல்லனும்” என்று தன் நிலைமையை நெந்துக் கொண்டாள்.

அனு எப்போது எல்லாம் திருமணம் என்று கூறுகிறாளோ அப்போதெல்லாம் விஷ்ணுவின் மனதில் லேசாய் ஒரு வலி. ஆனாலும் வெளிக்காட்டிக் கொல்லாமல் நடந்து கொண்டான்.

அதன் பின்னர் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாலை அனுவின் பெற்றோர் வர, பார்வதி அன்று நடந்ததை எல்லாம் இவர்களிடம் கூறிவிட்டு சமையல் அறையில் தஞ்சம்  புகுந்தார். 7 மணி அளவில்தான் திவ்யா வேளை முடித்து ஆபிஸ்ல் இருந்து நேராக அனுவைப் பார்க்க வந்தாள். வந்தவள் வேளையைப் பற்றி புலம்பி விட்டு வீடு சென்றாள். விஷ்ணுவும் வீடு சென்றான்.

அந்த வார இறுதி வரை அவ்வாறுதான் சென்றது. அனு தன் நாளில் பாதியை விஷ்ணுவுடன் செலவழித்தாள். அவ்வப்போது திபக் அனுவிற்கு போன் செய்தாலும் சிறிது நேரத்தில் மீடிங் அல்லது வேறு கால் வருகிறது என்று போனை துண்டித்துவிடுவான். ஆதலால் விஷ்ணுதான் அனுவிற்கு ஒரே துணையாகி போனான். அது அனுவிற்கு பிடித்திருந்தது. அவள் வேறு எந்த ஆணிடமும் அவ்வளவு நேரம் செலவிட்டதில்லை, சிறிது நேரம் பேசவும் தயங்குபவள் விஷ்ணுவிடம் மட்டும் அந்தத் தயக்கத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பழகினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

சனிக் கிழமையன்று திவ்யா, விஷ்ணு இருவரும் முழு நாளும் அனுவுடன் இருந்தனர். வார நாட்களில் அனுவிற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று ஞாயிறு அனுவை வெளியே கூடிச் சொல்ல திட்டம் வைத்திருந்தான் திபக். அனு, திவ்யா மற்றும் விஷ்ணு இருவரையும் உடன் வருமாறு அழைத்தாள், ஆனால் இருவரும் நாகரிகம் கருதி வரவில்லை என்று கூறிவிட்டனர்.

ஞாயிறு மதியம் லஞ்ச், அதன் பின்னர் மூவி, மாலை கோயில் மற்றும் பீச் எனச் சரியாக பட்டியல் இட்டு அனுவுடன் நேரத்தைச் செலவிட்டான் திபக்.

இரவு வீடு திரும்பியவள் உணவு ஏதும் வேண்டாம் என்று கூறிவிட்டு படுக்கைக்குச் சென்றாள் அனு. தன் மெத்தையில் படுத்தவள் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தன் மனதில் அசை போட தொடங்கினாள். தான் திருமணம் செய்து கொள்ள போகின்றவன் இன்று தன்னை எவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டான். தனகாகப் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்திருந்தான். அவ்வளவு வேளைப் பளுவிலும் தனகாக இதைத் திட்டமிட்டு இருக்கிறான். தனிமையான சந்தர்ப்பம் நிறையக் கிடைத்தும் கண்ணியமாக நடந்து கொண்டான்.

இவ்வளவும் செய்தவனுக்கு ஒரு நன்றி கூட கூறாமல் வந்துவிட்டோமே, சரி போனில் நன்றி கூறிவிடுவோம் என்று தன் கை பேசியை எடுத்தவளை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.

அது வேறு யார் குரலும் அல்ல அனுவின் மனசாட்சிதான். “இன்று அவன் அவ்வளவும் செய்தான், நல்லவன், கண்ணியமானவன்,  அருகிலேயே இருந்த நன்றாக கவனித்துக் கொண்டான். இவ்வளவும் செய்தவனை விட்டுவிட்டு ஏன் இன்று முழு நாளும் விஷ்ணுவை நினைத்துக் கொண்டிருந்தாய்?”

தொடரும் . . .

Episode # 15

Episode # 17

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.