(Reading time: 15 - 30 minutes)

வலும் ஆசையுமாக அந்த மருத்துவமனையை அவள் பார்த்து கொண்டே வர, அவனுக்கு வியப்பு. இது வரை முகம் சுளித்தவர்களை தான் அவன் பார்த்திருக்கிறான். மருந்து வாசனையும் டெட்டால் வாசனையும் காற்றில் கலந்திருக்க அமைதியை அங்கங்கே வாடிய முகங்களுடன் இருக்கும் மருத்துவமனையை விரும்பும் பெண்கள் வெகு குறைவு.

அதிலும் ஸ்ரவந்தியை போல மென்மையான பெண்களுக்கு மிகவும் கடினம் என எண்ணினான்.

ஆனால் அவளோ நேர்மாறாக இருந்தாள். அவன் அறையில் அவனுடைய பொருட்களை வைத்த பின், அவளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு 'மார்னிங் ரௌண்ட்ஸ்'  அவன் செல்வதாக சொல்ல, அவளும் ஆடம் பிடித்து இனைந்து கொண்டாள். அதுவும் அவனுக்கு ஆச்சர்யம். அப்படியே அவளுக்கு மருத்துவமனை முழுவதும் சுற்றி காட்டி விட்டு வந்தான்.

"ரொம்ப சுத்தமா வெச்சுருக்கீங்க வெரி குட் ஒரு ஹாஸ்ப்பிட்டல்க்கு பர்ஸ்ட் முக்க்கியமான விஷயம் சுத்தம் தான்" என அவள் மலர்ந்து சொல்லவும்.

அவன் இன்னும் வியப்பை பார்த்தான். அவள் கூட்டுக்குள் இருந்து அவள் கொஞ்சம் வெளியே வந்தது போல ஒரு உணர்வு அவனுக்கு.

"என்ன டாக்டர் சார் என்ன பட்டிக்காட்டான் பீட்ஸா பர்கர் பாக்குற மாதிரி என்னை பார்க்கறீங்க?" என அவள் குரும்பை கேட்க,

"அடிப்பாவி என்னை பார்த்த பட்டிக்காட்டான் மாதிரியா இருக்கு? வீட்டுக்கு வா உன்னை வெச்சுக்கறேன்" என அவன் மிரட்டி கொண்டிருக்க,

"எக்ஸ்கியூஸ் மீ டாக்டர்" என உள்ளே வந்தாள் ஒரு நர்ஸ்.

"சொல்லுங்க ப்ரீத்தி" என அவன் அந்த ப்ரீத்தியின் புறம் திரும்ப,

ஸ்ரவந்தியும் வந்தவளை பார்த்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

ஆனால் அவளோ ஸ்ரவந்தியை கவனிக்காமல்,

"டாக்டர் என் டியூட்டி முடிஞ்சுது, நர்ஸ் சுபா வர கொஞ்சம் லேட் ஆகும்ன்னு சொன்னாங்க இன்னும் ஒரு பத்து நிமிசத்துல வந்துடுவாங்க, இப்போதைக்கு உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் எதுவும் இல்லை, ஒன்பது மணில இருந்து தான் ஸ்டார்ட் ஆகுது. அப்புறம் போன வாரம் ஆபரேஷன் முடிஞ்ச பேசண்ட் ஓட மகன் உங்களை மீட் பண்ணி நன்றி சொல்லணும்ன்னு நைட் வந்திருந்தார். நான் இன்னைக்கு நூன் வர சொல்லியிருக்கேன். அப்புறம்... நாளைக்கு என் லீவ் டாக்டர்..."

படபடவென விவரங்களை சொன்னவள் மெதுவாக இழுக்க, சிரித்து கொண்டே,

"ஒகே ப்ரீத்தி, உங்களுக்கு ஏற்கனவே லீவ் அப்ரூவ் பண்ணிட்டேன்.. நீங்க போகலாம். அவங்க மதியம் வந்த நான் பார்த்துக்கிறேன். லாஸ்ட் டைம் நீங்க சுபாக்கு பதிலா இரண்டு நாள் டியூட்டி பாத்தீங்க இல்லையா அதை காம்பென்செட் செய்துக்கலாம் ஹாப்பி தானே?"

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்"

"நோ மென்ஷன் ப்ரீத்தி நீங்க டெடிகேட்டிவ் ஆனா வொர்க்கர் சோ அப்போ அப்போ உங்களுக்கு உங்க பெர்சனல் ஸ்பேஸ் அவசியம்"

"ஹ்ம்ம். அப்போ வரேன் டாக்டர் பை" என திரும்பியவள் ஸ்ரவந்தியை பார்க்க, ஒரு தவிப்பது புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் அவள்.

"ஹே ஸ்ரவந்தி, இங்க எப்படி? என்னடி உடம்புக்கு ஏதாவது சரி இல்லையா? உங்க மாமா.."

ஆச்சர்யத்தில் துவங்கி சந்தோசமாய் பேசி அவள் உடம்புக்கு என்னவோ என பதறி நினைவு வந்தவளை அவள் ஏதோ சொல்ல வர அதற்குள் அவள் பேசுவதை தவிர்க்க எண்ணி பதிலளித்தாள் ஸ்ரவந்தி.

"ஹாய் ப்ரீத்தி, அது வந்து டாக்டர் தான் என்னோட..."

"ஓ உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் முன்னாடியே தெரியுமா? இது என்னோட வைஃப் ப்ரீத்தி"

"என்ன சொல்றிங்க டாக்டர்?! என்னால நம்பவே  முடில" என அவள் அதிர்ச்சியுடன் ஸ்ரவந்தியை பார்க்க, அவள் ஏதோ சொல்ல தவிப்பது புரிந்தது.

உடனே முகத்தை மாற்றியவள்,

"ஸ்ரவந்தி ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு சார், எனக்கு ரொம்ப சந்தோஷம்  எங்க காலேஜ்ல அவ தான் எப்பவும் பர்ஸ்ட் ஆமா நீ டிசி வாங்கிட்டு போனதுக்கு அப்புறம் மறுபடியும் படிச்சியா?" என அவள் வினவ,

இல்லை என்பதை தலையசைத்து குனிந்து கொண்டாள். ஆச்சர்யத்துடன் மிதுர்வன் ப்ரீத்தியிடம்,

"இவங்க உங்க காலேஜ்ன்னா? அப்போ நர்சிங் படிச்சாங்களா?"

"ஆமாம் டாக்டர், ஓகே ஸ்ரவந்தி நான் இன்னொரு நாள் உன்கூட பேசறேன் நிறைய பேசணும்ஆனா இப்போ டைம் இல்ல கிளம்புறேன்" என்று விடைபெற்று சென்று விட்டாள்.

அவள் ஆசையுடன் மருத்துவமனையை பார்த்தது ஏன் என ஓரளவு மிதுர்வனுக்கு புரிந்தது.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா மிதுர்வன்?!"

அவள் முதன்முறையை தன் பெயரை உச்சரிக்க, தன்னையும் மறந்து அவளை பார்த்தபடி கேட்டான்

"என்னம்மா?"

"எனக்கு டாக்டர்க்கு இல்ல நர்சிங் படிக்கணும், என்னை படிக்க வைப்பீங்களா?"

இன்னமும் வியப்பில் இருந்து மீளாமல் அவள் முகம் பார்த்தான் மிதுர்வன்!!

தொடரும்…

Episode # 04

Episode # 06

{kunena_discuss:804}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.