(Reading time: 7 - 14 minutes)

02. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ரு நிமிடம் தான் திகைத்து நின்றாள் சுபத்ரா... பிறகு அவள் குறும்பு தலை தூக்க, தலை சாய்த்து ஏற இறங்க பார்த்தாள். அப்போது அவள் மனதில் ஓடிய பாடல்

“எந்த சாலையில் போகின்ற மீசை வைத்த பையன் இவன்..

ஆறடி உயரம் அழகிய உருவம் .. ஆப்பிள் போலே இருப்பானே “

அவள் மனமோ ஆஹா.. இங்கே கூட நாம சைட் அடிக்க ஒரு ஆள் சிக்கிட்டானே .. பேர் என்னவா இருக்கும் என்று அவன் நேம் பாட்ஜை தேடினாள். ஆனால் அவள் கண்களில் படவில்லை. 

அவள் மோதியவனோ முதலில் யார் தன் மீது மோதியது என்ற கோபத்தில் பார்த்தவன், பிறகு ஆராய்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு பார்த்தான். அவளின் குறும்பு பார்வையில் தன்னை சுதாரித்தவன் ஏற இறங்க பார்த்தவாறே சென்று விட்டான்.

சுபாவின் மைன்ட் வாய்ஸ் “சுபா.. கொஞ்சம் அடக்கி வாசி... வந்தவுடனே உன் வாலை எடுத்து விட்டியானா மக்கள் உஷார் ஆகிடுவாங்க... அப்புறம் உன் வேலை எதுவும் இங்கே நடக்காது” என்று எச்சரிக்க, அதிசயமாக தன் மனசாட்சியை மதித்து தோளை குலுக்கி விட்டு சென்று விட்டாள்.

நேராக அங்கே இருந்த மற்றவரிடம் விசாரித்து ட்ரைனிங் ஆர்டர் காண்பிக்க, அவர் சொன்னபடி பிரிகேடியரை சென்று சந்தித்தாள். (இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும் ... நம்ம சுபத்ரா மேடம் மிலிடரியில் சேர போயிருக்காங்க... )

மிலிடரி ஆபீசர் ட்ரைனிங் க்கு தான் செலக்ட் ஆகியிருந்தாள்.

டேஹ்ரடூன் ஆபீசர்ஸ் ட்ரைனிங் அகாடமியில்தான் இவளுக்கு ட்ரைனிங் போடபட்டிருந்தது

.. பிரகேடியரிடம் இவள் ஆர்டர் காண்பிக்கவும், ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

“welcome மிஸ்.சுபத்ரா “      

“thank யு சார் “

“மிஸ்.சுபத்ரா.. இப்போது இந்தியன் ஆர்மி இல் women paara force தனியாக இயங்கும் அளவிற்கு நிறைய பெண்கள் சேர்கின்றீர்கள்.. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் ட்ரைனிங் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.. “ என்று வாழ்த்தினார்.

அவள் நன்றி சொல்லவும், ஒரு soldier ஐ அழைத்து, பெண்கள் ட்ரைனிங் soldier க்கு உண்டான டோர்மிடரி காண்பிக்க சொன்னார். இவள் அங்கே சென்ற போது, தான் உணர்ந்தாள் இன்னும் uniform மாற்றாதது.

அன்று அவளின் பிறந்த நாள். காலையில் அவளின் அம்மாவிற்காக புது சல்வார் அணிந்து கோவிலுக்கு சென்று விட்டு , அப்படியே நேராக கேம்ப் வந்து விட்டாள். அதனால் தான் முதலிலேயே அவளை அடுத்தநாள் சேர முடியுமா என்று அவள் அம்மா கேட்டது.

அது முடியாது என்பதால் தான் அவளோடு டேஹ்ரடூன் வரை வந்து தங்கி , காலையில் அவளை கொண்டு விட்டனர். இரவு பன்னிரண்டு மணிக்கு வாழ்த்திய அவள் நண்பர்கள், மீண்டும் காலையில் அவளின் ட்ரைனிங்க்காக விஷ் செய்தனர்.. இன்னும் ஒரு வருடத்திற்கு இவர்களை மிஸ் செய்ய போகிறோம் என்ற யோசனையோடு வந்தவள் தான் , கவனிக்காமல் அந்த அவனின் மேல் மோதியது.

அவள் சூட் கேஸ், travel பாக் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தவள், அங்கே இருந்த சக பெண்களிடம் கேட்டு, இன்னும் பத்து நிமிடத்தில் கிரௌண்ட் இல் சென்று இருக்க வேண்டும் என்று போய் உடை மாற்றி வந்தாள். சுபத்ரா இ-மெயில் மூலம் இன்று join செய்வதற்கு permission வாங்கியிருந்தாள். மற்ற பெண்கள் எல்லாம் முதல் நாளே வந்திருந்ததால், அவர்கள் ரெடி ஆக இருந்தார்கள்.

மிலிடரி பொறுத்தவரை முதலில் பின் பற்ற வேண்டியது punctualiy தான்.. அதை உணர்ந்தவர்களாக எல்லோரும் கிரௌண்ட் இல் அச்செம்ப்ள் ஆகியிருந்தனர். முதலில் பிரிகேடியர் வர, அவரோடு காலையில் அவளை சந்தித்த அந்த ஆப்பிள் பையன் வந்திருந்தான். (இன்னும் பேர் தெரியாததால் .. அவள் ஆப்பிள் பையன் என்று பிக்ஸ் செய்து விட்டாள்)

“அனைவருக்கும் வணக்கம்.. இன்று முதல் உங்கள் ட்ரைனிங் ஆரம்பமாகிறது. உங்கள் ட்ரைனிங் ஆபீசர் கேப்டன் அர்ஜுன். “ என்று அவனை அறிமுகபடுத்தியவர், “மிலிடரி பொது ரூல்ஸ் .. ஆபீசர் க்கு கீழ்படிவது. மற்ற விதிகளை எல்லாம் உங்கள் கேப்டன் மூலம் தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள். இந்த ட்ரைனிங் வெற்றிக்காகரமாக முடிக்க வாழ்த்துக்கள் .. “என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.

அடுத்து அர்ஜுன் “ஹாய் டு ஆல்... I am அர்ஜுன். “ என்றவன் தொடர்ந்து ஆங்கிலத்தில் தன்னுடைய பேச்சை தொடர்ந்தான் . “இன்றைக்கு நான் பொது ரூல்ஸ் சொல்லி விடுகிறேன்.. அதற்கு பின் உங்கள் அறிமுகம் தொடரும்” என்றவன்,

ட்ரைனிங் ஆரம்பிக்கும் நேரம், என்ன என்ன ட்ரைனிங் கொடுக்கப்படும், கான்டீன் எங்கே, நேரந்தவறாமை , பாதுகாப்பு முறை என்பவற்றை பற்றி ஒரு சின்ன அறிமுகம் மட்டும் கொடுத்து விட்டு .. அங்கிருந்த வீர்கள் பற்றிய அறிமுகம் கேட்டான்.

அவனோடு இன்னும் நான்கு கேப்டன் இருந்தார்கள். இவர்கள் ஐந்து பேரும் அந்த பிரிகேடியர் கீழே வருபவர்கள்.

அதை பற்றிய விளக்கம் கொடுத்தவன், மொத்தம் 150 பேர் கொண்ட இந்த ட்ரைனிங் காம்பில் 30  பேர் பெண்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.