(Reading time: 7 - 14 minutes)

வ்வொருவரின் கீழே 30  பேர் என பிரித்து கொடுத்தான். அதில் பெண்கள் குழுவை பத்து பத்து பேராக மூன்று குழுக்களாக பிரித்து அவன் கீழ் ஒரு குழுவும், மற்ற கேப்டன் கீழ் இரு குழுக்களும் சென்றனர்.

ஆனால் இது எல்லாம் நடக்கும் போது நம்ம சுறா மேடம்.. ஆப்சென்ட் மைன்ட்டில் இருந்தாள். பிரிகேடியர் அர்ஜுனை அறிமுகபடுத்தியவுடன் அவள் மனதில் தோன்றியது

“ஆஹா.. என்ன ஒரு பேர் பொருத்தம்.” இதுதான்.  அதோடு அவளுக்கு இந்த பேர் கேள்விப்பட்ட பெயராக தோன்றியது.

அவள் யோசனையோடு இருக்கும் போது அர்ஜுன் பேச ஆரம்பிக்கவே, அவளுக்கு அந்த குரலும் பரிச்சயமானது போல் இருந்தது. ஆனால் நினைவு வரவில்லை. அவளுக்கு அவனை பார்த்த நினைவு எல்லாம் இல்லை.

இந்த யோசனையின் போதுதான் அவன் குழு பிரிக்கும் விவரம் எல்லாம் சொன்னது. அவளின் கவனம் இங்கு இல்லை என்பதை கண்ட அவள் அருகில் இருப்பவள் லேசாக அவளை கிள்ளவே, சுதாரித்து நிமிர்ந்தாள்.

அர்ஜுன்க்கு ஏற்கனவே ட்ரைனிங் நேம் லிஸ்ட் கொடுக்கப்பட்டு இருந்ததால் முதல் நாளே மற்ற கேப்டன்களோடு பேசி கண்டிடேட்ஸ் பிரித்துக் கொண்டிருந்தனர்.

அதனால் இப்போது சுபத்ராவை அர்ஜுன் தன்னுடைய குழுவில் தான் சேர்த்துக் கொண்டிருந்தான். சுபத்ராவோ .. ஆஹா.. ஆப்பிள் பையன் எனக்கே எனக்கா .. என்று மனதில் பாடிக் கொண்டிருந்தாள்.

ஐந்து குழுக்களும் பிரிந்து தங்கள் கேப்டன் கீழ் நின்றார்கள். பிறகு ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

சுபத்ராவின் முறை வரும்போது,

“சார், என் பேர் சுபத்ரா.. நான் B.SC. விஸ்காம் முடித்து இருக்கிறேன். சென்னை என்னோட native” என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ஒஹ். நீங்கள் மிலிடரியில் சேரக் காரணம் ?”

“எனக்கு சின்ன வயதில் இருந்தே மிலிடரியில் சேரனும்..என்பது கனவு..”

“அதுதான் ஏன் என்றேன்” என்று வினவினான். இத்தனை நேரம் அவன் யாரிடமும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு இருந்தவன், சுபத்ராவிடம் மட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

சுபா அது எல்லாம் கவனிக்கவில்லை. அவள் தன் முறை வரும்போதுதான் கொஞ்சம் தெளிந்து இருந்தாள்.                                                                                          

“ஏன் என்றால்.. மற்ற துறைகளை காட்டிலும் இதில் பெண்கள் குறைவு ... மேலும் நாட்டுக்கு நம்மால் முடிந்ததை செய்யலாமே என்ற எண்ணம் தான்..”

“ஒஹ்.. நீங்கள் மிலிட்டரி வேலைக்கு எந்த முறையில் உங்களை தகுதி படுத்தி இருந்தீர்கள்.”

“சார்.. நான்.. எக்ஸாம்க்கு prepare செய்வது மட்டும் இல்லாமல், இதற்காகவே ஸ்கூல் இல் இருந்தே NCC  லீடர் ஆக இருந்து இருக்கிறேன். மேலும் NCC “C” certificate உம் வைத்து இருக்கிறேன்”

“ஓகே.. guys .. இன்னிக்கு dispose ஆவதற்கு முன்னால்.. நம்ம trainee சுப்த்ராவிற்கு இன்னிக்கு பர்த்டே .. விஷ் பண்ணிடலாமே.. “ என,

எல்லோரும்.. ஹாப்பி பர்த்டே சாங் பாடி கைதட்டினர்... அவள் ஆச்சரியத்தோடு எல்லோருக்கும் நன்றி சொல்லி விட்டு, அர்ஜுனிடம் வந்தவள்,

“thank யு சார் ..  உங்களுக்கு எப்படி தெரியும் ?”

“உங்கள் நேம் லிஸ்ட் என்னிடம் வரும்போதே.. உங்கள் profile உம வந்து விடும்.. அதனால் தான் தெரிந்தது ..” என்று சின்ன புன்னகை புரிந்தவன்,

“ஓகே.. நாளையில் இருந்து ட்ரைனிங் ஆரம்பம்.. உங்கள் அனைவரின் திறமையும் பார்க்கலாம்.. நாளைக்கு காலை ஐந்து முப்பது மணிக்கு எல்லாரும் assemble ஆகணும் “ என்று விட்டு சென்று விட்டான்.

சுபத்ரா முழித்தாள்.. என்னது ஐந்தரை மணிக்கா... ஐயோ அப்போ நான் ஐந்து மணிக்கு எழுந்திருக்கனுமே... .. என்று புலம்பியபடி தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நிஷாவிடம் கேட்க,

அவளோ “ஹே.. மிலிடரி சேர வரும்போது உனக்கு இது எல்லாம் தெரியாதா?”

நிஷா தமிழ் நாட்டில் இருந்து வந்தவள் ..  அதனால் இருவரும் தமிழில் பேசிக் கொண்டனர்.

“ஹேய்.. அப்படி எல்லாம் இல்லை.. எல்லாம் தெரியும்.. என்ன இந்த ஆறு மணிதான் கொஞ்சம் பேஜாரா இருக்கு.. அம்மா இருந்தா கையில் காபி கொடுத்து எழுப்பி விடுவாங்க.. இங்கே என்ன பண்றது ? அதுதான் மீ sad.. “

“சரி.. எப்படி சமாளிக்க போறே?”

“அதுக்கும் ஐடியா வச்சுர்க்க்கேன்.. “

“ஐடியா என்னவோ? “

“அது காலையில் பாரு..”

என்றுஅவள் சிரிக்கவும், இவர்கள் பேசிக் கொண்டதை கேட்ட அர்ஜுனும் சிரித்தவாறே சென்றான்.

மழை பொழியும்

Episode 01

Episode 03

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.