(Reading time: 10 - 19 minutes)

03. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ர்ஜுன்க்கு தெரியும் .. அவள் என்ன செய்வாள் என்று... .

அன்றும் அவளை கவனிக்க ஆரம்பித்தது இதை போன்ற வார்த்தைகள் தான் .. காரணம்.

அவனின் நினைவுகள் நான்கு வருடங்கள் முன்னாடி சென்றது.

ஒரு ஸ்டுடென்ட் .. இன்னொரு ஸ்டுடென்ட்டிடம் பேசியது காதில் விழுந்தது.

“ஹே.. கீமா .. என்னடி .. நம்ம P.T. Master காலையில் நாலு மணிக்கே எழுந்துக்க சொல்றார்.. அவர்கிட்ட போய் அது பேய் உலாவும் நடுராரத்திரி ன்னு யாரவது சொல்லுங்களேன்.. “

“ஆமாம்.. “ என்ற பல ஜால்ரா குரல்கள் கேட்டன.

“சுரா... நாலு மணி என்பது நடுராத்திரி இல்லைமா.. அதிகாலை.. அப்படின்னு கிளாஸ் எடுப்பார்.. இது தேவையா?”

“நாம ஒன்பது மணிக்கு தூங்கினா தான் அது நடுராத்திரி ... பனிரெண்டு மணிக்கு தூங்கினா .. நாலு மணி தான் நடுராத்திரி.. இப்படின்னு சொல்லிட்டு வாயேன் சோடாபுட்டி.. “

“ஹலோ. .நாம இப்போ அவருக்கு தெரியாம உலாவிகிட்டு இருக்கோம்.. நீ இப்படி சொன்னேன்னு வை.. நமக்கு நாமே ஆப்பு வைக்கும் திட்டத்தை தொடங்கிறலாம்..  எப்படி வசதி ?”

“இப்போ என்னடா செய்றது.. ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“ஒன்னும் பண்ண முடியாது .. அலாரம் வச்சுட்டு தூங்கு..”

“வேற வழியில்லையாடா?”

“ஹ்ம்ம்..”

பேசியது யார் என தெரியாவிட்டாலும், இதுக எல்லாம் இஷ்டம் இல்லாமல் இங்கே வந்துர்க்குமோ என்று என்ன வைத்தது அர்ஜுன்க்கு...

அங்கே பாய்ஸ் .. girls தனியாக இருந்தாலும்.. இரண்டு, மூன்று அறைகள் தள்ளிதான் இருந்தது.

றுநாள் காலையில் நாலு மணிக்கு தீடிர் என்று மிகபெரிய அலறல் சத்தம் கேட்டது.. என்னவோ என்று சார், பசங்க எல்லாரும் ஓடி வந்து பெண்கள் அறைக்கு வர, அங்கே ஒருத்தியை தவிர மற்ற அனைவரும் விழுந்தடித்து வெளியே வந்தனர்.

சார் அந்த பெண்களிடம் விசாரிக்க, அவர்களும் அந்த சத்தத்தில் தான் முழித்தோம் என்றனர். மீண்டும் அந்த அலறல் கேட்க, சத்தம் வந்த திசையில் சுபத்ராவின் செல் போன் அலறியது .. தொடர்ந்து யாரோ பேசும் குரலும் கேட்டது..

“ஹே.. சுபத்ரா.. .எழுந்திரிடி... இதோட நாலு தடவை தண்ணி ஊத்திட்டேன்.. வீல் நு கத்திகிட்டு இருக்கியே தவிர .. எழுந்திர்க்க மாட்டிங்கர.. இப்போ நீ எழுந்துக்கல அடுத்த தடவை சுட சுட காபி ய மூஞ்சிலே ஊதிடுவேன்..”

“என்னை பெத்த அன்னையே.. தங்களின் அருமருந்த சீமந்த புதல்வி நான்.. என் மேல் உள்ள பாசத்தில் நீங்கள் இளநீர் அபிஷேகம் செய்கிறீர்கள் என்று எண்ணியே.. யாம் அமைதியாக இருந்தோம்.. தங்களின் பக்தியை மெச்சி வேண்டும் வரம் அருள காத்து இருந்ததை இப்படி வீணடித்து விட்டீர்களே.. இதோ என் கோபம். .பிடி சாபம்.. இன்னும் நீ எத்தனை பிறவி எடுத்தாலும்.. அத்தனையிலும் நாமே உனக்கு மகளாக பிறந்து, தினமும் இதே போல் உங்களை வாருவேன் என்று சாபமிடுகிறேன்”

“அடிங்க.. ராத்திரி ரெண்டு மணி வரை உட்கார்ந்து திருவிளையாடலும், சரஸ்வதி சபதமும், பார்த்துட்டு .. சாபம் விடுறீங்களோ சாபம்.. ரிஷி கன்னிகையே.. இப்போ நீங்கள் எழுந்து படிக்கவில்லை என்றால் இந்த முறை பெயில் ஆகி .. மீண்டும் இந்த டென்த் பரிட்சையே எழுத வேண்டும் பார்த்துக் கொள்ளுங்கள் தாயே.. “

“அம்மா.. என் கண்ணம்மா. ஏதோ ஒரு ப்ளோ வில் பேசிட்டேன்.. விட்டுடு.. இதோ படிக்க உட்காரேன்.. நீங்க எனக்கு மூஞ்சிலே ஊத்துற சுடு தண்ணி மாதிரி இல்லாமல் கும்பகோணம் டிகிரி காபி போட்டு எடுத்துட்டு வாங்க.. “

என்று முடிந்தது. இந்த டயலாக் முடியற வரைக்கும் அவ எழுந்தக்கலை.. வெறுப்பான அங்கே இருந்த incharge மேடம்.. அவள் friend விட்டு அவளை அடித்து எழுப்ப சொல்ல.. அவளும் எழுப்பினாள்.

அவளை அடித்தவுடன் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள், அந்த பெண்ணை நோக்கி

“கீமா.. கொஞ்சம் தூங்க விடும்மா? “ என்று rhyming இல் பேச, கொஞ்சம் பதட்டமான அந்த பெண்,

“ஹே.. சுரா.. அங்கே பாரு.. மேடம்.. எழுந்திரு.. “ என ,

வேகமாக எழுந்தவள்,

“மேடம் .. என்னாச்சு? ஏதும் பிரச்சினையா? நம்ம girls கிட்ட யாரும் வம்பு பண்ணினாங்களா? எல்லாரும் இருக்காங்க?”

அவரோ முறைத்தவாறே “ஏன்மா.. அலாரம் உனக்கு மட்டும் வைக்க வேண்டியது தானே.. எதுக்கு ஊர் கோவிலே மைக் செட் போட்டு எல்லாரயும் எழுப்பற மாதிரி இவ்ளோ சவுண்ட்.. ? அதவும் வச்சிருக்கிற பாரு ரிங் டோன்.. இன்னிக்கு இப்படி எல்லாரையும் படுத்தின உனக்கு பனிஷ்மென்ட்  .. அங்கே இருக்கிற drum நிறைய தண்ணி பிடிச்சு ஊதுற.. யாரும் அவளுக்கு ஹெல்ப் பண்ணக் கூடாது.. “

“ஓகே மேடம்.. drum தானே பார்த்துக்கலாம் “ என,

அவர் மீண்டும் அவளை முறைத்தபடி சென்று விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.