(Reading time: 55 - 110 minutes)

27. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

ந்த சீக்ரெட் சேம்பருக்குள் நடந்த அனைத்தும் 10 நிமிடத்துக்குள் நடந்து முடிந்து விடும் வேலை இல்லை…. அந்த லக்க்ஷணா இவர்களைப் பார்க்கவும் முதலில் அதிர்ந்து போய் மிரண்டாலும் அடுத்து சுதாரித்துக் கொண்டு மிகவும் நிஜம் போல பதற்றம் சோகம் கன்சர்ன் கவலை அக்கறை என அனைத்தும் கலந்தார் போல சொல்லிய கதையில்……வர்ஷன் உணர்ச்சி வசப் படும் போது தான் இப்படி ஆகிறது என சொல்ல…..

அப்படியானால்  இங்கு அவன் இப்படி அடைந்து கொண்டு கிடக்கும் போது எத்தனை உணர்ச்சிப் போராட்டங்களை அனுபவித்திருப்பான்…ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே என மித்ரனுக்கும் மனோக்கும் சந்தேகம் வந்து, அடுத்து அவர்கள் லக்க்ஷணா விஷயத்தில்  சுதாரித்துக் கொண்டதில் தொடங்கி…..

 அடுத்து அவள் சொல்லியவை உண்மையா இல்லையா என உறுதியாகும் வரை அவள் தப்பி விடக் கூடாதென அவளை அறைக்குள் வைத்து பூட்டி….

வர்ஷனின் உடல் நிலை  பற்றி அறிய அடிப்படை டெஸ்ட்கள் மனோ செய்ய….

அடுத்தும் மருத்துவமனைக்கு வர்ஷனை கூட்டிப் போய்….

இந்த லக்க்ஷணா சொன்ன நோய் தாக்குதல் எதுவும் வர்ஷனுக்கு இல்லை என உறுதியான பின்பும்….வேறு எதுவும் ஸ்லோ பாய்சனிங் போல்…அல்லது வேறு நோய் கிருமிகளை வர்ஷனுக்கு செலுத்தி மெல்ல அவன் மரணிக்கும் வகையில் எதையும் அந்த லக்க்ஷணா செய்து வைத்திருப்பாளோ என்ற கோணத்தில் அடுத்த அப்சர்வேஷனை தொடங்கி….

இதற்கு இடையில்…இவர்களிடம் மாட்டிக் கொள்ள கூடாதென இயல்பாய் வர்ஷனுக்கு சொல்லி வரும் அந்த வைரஃஸ் பொய்யையே இவர்களுக்கும் சொல்லி நேரம் கடத்திவிட்டு…..பின் தப்ப முயன்ற லக்க்ஷணாவை கைது செய்து….

அடுத்து அவளை ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் என்கொயரி செய்து, வாக்கு மூலம் வாங்கி….

அந்த NM நிறுவனம் சார்ந்த தன் டிபார்ட்மென்ட் வேலைகளை மித்ரன் முடித்து…

இதற்கு இடையில் மனோ பயோசி லேபுக்கும், ரிசல்டுக்கும், ஹாஸ்பிட்டலுக்குமாய்  அலைந்து என….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "உயிர் ஆதாரமே" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

இதெல்லாம் முடிய மறுநாள் பொழுது புலரத் தொடங்கிவிட்டது……

இதுவரையுமே வர்ஷன் விஷயத்தை வீட்டில் விஜிலா உட்பட யாருக்கும் சொல்லி இருக்கவில்லை….. அவன் உடல் நிலை ஓரளவாவது உறுதியாக தெரிந்தபின் தான் அடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்பதால் இந்த தாமதம்….

புரிந்த வரை வர்ஷனுக்கு எந்த நோய் தாக்குதலோ…வேறு வகை மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையோ எதுவும் இல்லை……நான்கு மாதம் போதிய உணவோ….உடல் அசைவோ இன்றி சோர்ந்திருக்கிறான் என்பதை தவிர அவன் முழு ஆரோக்கியத்தில் இருக்கிறான்….. என்றாலும் இன்னுமொரு நாள் அப்சர்வேஷனுக்கு பிறகு அவன் வீட்டுக்கு செல்லலாம் என்ற நிலை இப்போது வந்திருக்க…..

வர்ஷன் விஜிலாவிடம் நாளை தானே நேரில் போய் சொல்லிக் கொள்கிறேன்…….சின்ன குழந்தையோடு அவளை ஹாஸ்பிட்டலுக்கு இத்தனை அதிர்ச்சியும் கொடுத்து இழுத்தடிக்க  வேண்டாம்…. என அழுத்தமாய் கேட்டுக் கொண்டதால்…

இன்பாவையும் அகதனையும் மட்டுமாய் அழைத்து விஷயத்தை சொன்னான் மித்ரன்…… வீட்டிலிருந்து இன்பாவோடு களஞ்சியமும் வருவார் என எதிர்பார்த்தாள் மனோ…..ஆனால் களஞ்சியம் மட்டுமல்ல அந்த பாட்டியுமே வந்திருந்தார்…

ர்ஷன் இப்போது ஆபத்தான நிலமையில் இல்லை என்பதால் ஐ சி யூ விலெல்லாம் இல்லை…தனி அறையில் இருந்தான் அவ்வளவே….. அதுவும் அவன் ஏக உணர்ச்சி கலவையில் இருந்தான்….

ஏறதாள நான்கு மாத காலம் யார் முகமும் பாராமல்….யாரோடும் பேச முடியாமல்…. பெரும்பாலும் ஒரே பொஷிஷனில் படுத்தபடி இருந்தவன்…..

சற்று முன் வரை மனம் முழுவதும் மரணத்தை சுமந்திருந்தவன்….அவனது விஜியைவிட்டு…. மனதால் மட்டுமே கண்டிருந்த அவன் குழந்தையை விட்டு…..அம்மா, தங்கை, பாட்டி, அத்தனை உறவு, நட்பு என எல்லாவற்றையும் விட்டு நிரந்தரமாய் கண்மூடும் நொடிக்காய் காத்திருந்தவன்….

இவன் போனபின் இவர்கள் நிலை என்னவாகும் என தவித்திருந்தவன்…… கிளம்பும் நேரம் சற்றும் எதிர்பாராமல் வந்த தம்பியிடம் ஒழுங்காய் மன்னிப்பு கூட கேட்காது வந்துவிட்டோமோ என உறுத்தலில் உழன்று கொண்டிருந்தவன்…..

சில வருடங்கள் முன்பே மித்ரன் விஷயத்தில் தான் இன்னும் நன்றாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என எண்ண தொடங்கி இருந்த அவன்…..விஜிலா கருவுற்ற காலத்திலிருந்து  அதை உறுத்தலாய் உணர தொடங்கி இருந்தான் ….

இவன் தன் குழந்தைக்காய் பார்த்து பார்த்து செய்வது போலதான இவனது அப்பா மித்ரனுக்காகவும் பார்த்திருப்பார்…?

அதோடு பிறந்து கையில் வரும் முன்னமே ஒரு குழந்தைக்கு தாய் தகப்பனின் அக்கறையும் கவனிப்பும் என்னமாய் தேவைப் படுகிறது….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.