(Reading time: 55 - 110 minutes)

தையும் விட நாளைக்கு எனக்கும் இன்பாவுக்கும் குழந்தைனு வந்த பிறகு…..இந்த பாட்டி எங்க வீட்லயே வந்து உட்காந்து எதோ இன்பாவுக்கும் அவ குழந்தைக்கும் நல்லது செய்றதா நினச்சுகிட்டு…..  மித்ரனை படுத்தின மாதிரி என் மூத்த மகளை படுத்த மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?

வயதான காலத்தில் பேரண்ட்ஸ், மகன் வீட்ல தான் இருக்கனும்னு நான் சொல்ல மாட்டேன்….மகன் மகள் ரெண்டு பேரையும்தான் பேரண்ட்ஸ் வளத்து ஆளாக்கி இருக்காங்க….ரெண்டு பெருக்கும் அவங்களை வயசான காலத்துல பார்த்துகிற கடமை இருக்குது…..

அதனால் அந்த பாட்டி தன் மகள் வீட்ல வந்து இருக்றது தப்பு இல்லை தான்….. ஆனா தனக்கு மகன் முழு குடும்பமா நல்ல நிலையில இருக்றப்ப….இறந்து போன மகள் வீட்ல…..அதுவும் மருமகன் கூட இல்லாத வீட்ல… சரியா சொன்னா மருமகனோட ரெண்டாவது வைஃப் வீட்ல போய் எந்த முறையில அந்த பாட்டி உட்காந்துட்டு இருக்குது…..? என்ன உரிமைல ஆட்டி வைக்குது எல்லோரையும்…?

அப்டி முறை உரிமைன்னு எதுவும் இல்லாம நாளைக்கு என் வீட்ல வந்து இருப்பேன்னு சொல்லாதுன்னு  என்ன நிச்சயம்…?

வெரி சாரி டூ சே…..என்னால அந்த பாட்டிய என் வீட்டுக்குள்ள சேர்த்துக்க முடியாது..…அது என்  குழந்தைக்கு  ஒரு தகப்பனா நான் செய்ற துரோகம்…. அப்டி நான் இன்பாட்ட சொன்னா அவ அதை ஏத்துப்பாளா?

அதோட நான் என் அம்மாவ என் வீட்டோடயே  வச்சுகிட்டு…..என் குழந்தையோட நல்லதுக்காக நீ உன் பாட்டி இருக்றதால உன் பிறந்த வீட்டுக்கு போக கூடாது …உன் பாட்டி கூட உள்ள உறவ வெட்டிகிடனும்னு நான் இன்பாவ கேட்கலாமா? அப்டி கேட்கிறது நியாயமா? மேரேஜுக்கு முன்னமே இப்டியா டேர்ம்ஸ் போட்டு நான் மேரேஜ் செய்ய முடியும்? ன்னு கேட்கிறார் ஜோவன்” என ஜோவன் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தாள் மனோ…..

 பின் “இந்த ஜோவன என்னனு எடுக்றது  அகி?....” என்றாள் அண்ணனைப் பார்த்து.

அடுத்து சிந்தித்தவளாக “ஜோவன் அண்ணிய நம்பலைனு நினைக்கனுமோ இதுல….?” என்று அடுத்த கேள்வியையும் கேட்டாள்.

 “அப்டிலாம் இல்லை” என மறுப்பாக தலை அசைத்த அகதனோ…. ஒரு முறை மித்ரனைப் பார்த்தவன்….

 “ஜோவன் வெளிய இருந்துதான விஷயத்தை பார்க்கிறார்…..இன்பா வர்ஷன் இவங்கல்லாம் இப்ப குழந்தைங்க இல்ல…..இருந்தும் வீட்ல பாட்டி வச்சதுதான் வரிசைன்றப்ப….இவங்க பாட்டி சொல்றத மீறி எதுவும் செய்துக்க மாட்டாங்கன்னு அவருக்கு தோணுமில்லையா….அதனால வர்ற இன்செக்யூரிடி இது…..பாட்டி இங்க இருக்றது களஞ்சியம் அத்தையோட முடிவுன்னு ஜோவன்க்கு தெரிஞ்சா எனக்கு புரிஞ்ச வரை எல்லாம் சால்வ் ஆகிடும்…… மத்தபடி…அவர் ரொம்ப ரெஸ்பான்ஸிபளான பெர்சனா கேரிங்க் நேச்சர்டாதான் தெரியுது… மத்தபடி செகண்ட் மேரேஜ்ன்றதுதான் நம்ம சொசைட்டில கொஞ்சம் சென்சிடிவான விஷயம்….ரொம்ப பாசிடிவா யாரும் ஃபீல் பண்ண மாட்டாங்க….பட் உங்க சிஃஸ்டருக்கு அவர் மேல விருப்பம் இருக்குன்ற பட்சத்தில் அதை கண்டுகனும்னு இல்லைனுதான் நான் சொல்லுவேன்.” என முடித்துக் கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

டுத்தும் இவர்கள் பேச்சு எங்கு எங்கெங்கோ சுத்த….பார்த்துக் கொண்டிருந்த பாட்டி மனதில் ஆயிரம் எண்ணங்கள்…. ஒரு புறம் கோபத்திலும் மகா கோபம் கொத்தித்துக் கொண்டிருந்தாலும்….பின்ன இந்த பாட்டி இருக்றதால  ஒருத்தன் இன்பவா கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லனும்னா எவ்ளவு திமிர் இருக்கனும்?

இன்னொரு புறமொரு உறுத்தலான புரிதல்….. யாருமே காசேதான் கடவுளடான்னு பேசலையே…. பயோசி சி இ ஓ போஃஸ்ட்ட வேண்டாம்னு சொல்லிகிட்டு இருக்கா இந்த மனோ….அதை நல்ல விஷயம்னு சொல்லிட்டு இருக்கான் அவ அண்ணன்…… இதுல அவ்ளவு பெரிய வீட விட்டுட்டு அப்பார்ட்மென்ட் போறதுதான் அந்த மித்ரனுக்கும் பிடிக்குமாம்…..

அடுத்ததாய் அவரை ஆட்டி வைக்கும் ஒரு கேள்வி……வர்ஷனுக்கு மித்ரன் தேவைப் படுகிறான்…..மித்ரனுக்கு அகதன் தேவைப் படுகிறான்…..இன்பாவும் விஜிலாவும் மனோவும் ஒவ்வொருவரும் ஒரு வகையில் உதவிக் கொள்கின்றனர்……தேவைப் படுகின்றனர்…. இப்படி நம்பிக்கையான உறவுகளும் ஒவ்வொருவருக்கும் அடிப்படை தேவையோ…? தன் பேரப் பிள்ளைகளுக்கு அதை கிடைக்கவிடாமல் தடுப்பது தான் மட்டும்தானோ…? 

அதற்கு மேல் சிந்திக்க அவருக்கு பிடிக்கவில்லை…. அங்கு இருக்கவும் பிடிக்கவில்லை…..வீட்டுக்கு கிளம்பலாம் என விடு விடுவென வாசல் நோக்கி கிளம்பியவரின் பார்வையில் படுகிறாள்….அந்த பெரிய வளாகத்தில் லிஃப்டுக்கு இடப்புறமாய் ஓரமாய் ஒரு அலங்கார தொட்டி செடிக்கு பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கும் இன்பா…..

ஜோவனுடன் தான் பேசிக் கொண்டிருந்தாள்….. என்ன பேசுகிறார்கள் என இங்கிருந்து பார்க்க தெரியவில்லை அவருக்கு…..ஆனால் இன்பாவின் முகமெங்கும் அப்பிக் கிடக்கிறது சோகம்…..அழுகையை அடக்கிக் கொண்டு அவள் பேசுவதை பார்க்க பார்க்க……இவருக்கு அவள் ஜோவனிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறாள் என புரிகிறது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.