(Reading time: 55 - 110 minutes)

வங்களை தப்பா சொல்றேன்னு இல்ல…..அவங்க நாலு பேருமே இந்த விஷயத்தை இமோஷனலாதான் ஹேண்டில் செய்வாங்க…..கண்டிப்பா என்னை நேர்ல பார்க்கனும்னுதான் சொல்லுவாங்க… பாசுரன் டெட்பாடிய  பார்த்த பிறகு அப்டி அவங்களை மீட் பண்றத என்னால யோசிக்க கூட முடியலை…. அவங்களையே நான் எதுவும் செய்துடுவனோன்றது தான் என் மேஜர் ஃபியர்…….

அப்டி நேர்ல பார்க்கனும்னு இல்லைனா கூட, இன்ஃபாக்ட் அவங்க வகையில் நானே இமோஷனாவேன்….. எனக்கு எதாவதுன்னா அவங்களை யார் பார்த்துப்பான்ற ஒரு ஸ்ட்ரெஸ் எனக்கு எப்பவும் உண்டு….… அப்பா இறந்தப்ப வீடு எப்டி இருந்துச்சுன்னு பார்த்திறுக்கனே……அடுத்தும் இன்எக்‌ஸ்பீரியன்ஸ்டா நான் கம்பெனிய கைல எடுத்தப்ப என்ன மாதிரிலாம் ப்ரச்சனை ஃபேஸ் செய்தேன்…. எத்தனை பேர் எப்டிலாம் ஏமாத்த பார்த்தாங்க…..….எல்லாம் அனுபவிச்சுறுக்கேன்….

.கம்பெனி விஷயத்தில் இன்னுமே கூட எனக்கு சில விஷயம் முழுசா என் கன்ட் ரோல்ல இருக்குன்னு  ஃபீல் ஆகாது….இத்தனைக்கும் இந்த கம்பெனி மனேஜ்மென்ட்தான் என் ஃப்யூச்சர்னு அதை நினைச்சே வளந்தவன் நான்….. எனக்கே அவ்ளவு பாடுன்னா.... விஜியோ இன்பாவோ என்ன செய்துப்பாங்கன்னு ஒரு ஸ்ட்ரெஸ் எப்பவும் இருக்கும்….. அதனாலதான் விஜியையும் இன்பாவையும் முடிஞ்ச வரை கம்பெனியோட எல்லாத்துக்குள்ளயும் நான் இன்வால்வ் செய்துட்டு இருந்தேன்….ஸ்டில் அவங்க இன்னுமே நேஷன் க்ரூப்ஸ ஹேண்டில் செய்ற அளவுலாம் கத்துகலை…இன்னும் டைம் வேணும் அவங்களுக்கு..….

 அம்மா ஆஃபீஸ் வகையில் ட்ரெய்ன்ட் தான்…..ஆனா நான் தனியா கம்பெனிய கைல எடுத்து கஷ்டபட்ட காலத்திலயே கூட அவங்க ஹெல்ப்க்கு வர மாட்டேன்னுடாங்க….. பாட்டியால இதெல்லாம் புரிஞ்சுக்க தெரியாது…… அம்மாவை குத்தி குதறி அவங்க எதுக்குள்ளும் வராம அடச்சு நிறுத்த பாட்டி போதும்…….

ஆக விஜியும் இன்பாவுமா நான் இல்லாம எப்டி சமாளிக்க போறங்கன்னு…..” இதில் சற்று இடைவெளி கொடுத்தவன்

“அவங்க வாய்ஸை கேட்க கூட எனக்கு தெம்பு இல்லைனு வச்சுகோயேன்……” என்று நிறுத்தினான். அவன் அப்போது கண்ணை மூடி திறந்த விதமே அவன் எத்தனை அழுத்தத்தை அனுபவித்திறுக்கிறான் என காட்டியது.

“அவங்க போன்ல அழுதாலே….. இமோஷனாகி  நான் பக்கத்துல இருக்கவங்களை என்ன செய்வேன்னு எனக்கு டென்ஷன்….கண் முன்ன டெட் பாடி இருக்றப்ப நான் எப்டி ரிஸ்க் எடுக்க…..? ஆக அந்த ஆங்கிள்ளயே மூவ் ஆகிட்டேன்…. ப்ச்….”  ஒரு கணம் கசப்பும் ஆதங்கமுமாய் நிறுத்தியவன்……குரலை இப்போது சற்று இலகுவாக்கி

“நான் அன்னைக்கு அண்டர்க்ரவ்ண்ட் லேபுக்கு கிளம்பின நேரம், நீ வந்து நிக்கவும் மனசுல ஒரு பலம்………அவ்ளவு நாள் கான்டாக்ட்ல இல்லைனாலும் இப்ப நீயா தேடி வந்துட்டியேன்னு ஒரு தெம்பு…..அதுவும் நீ நடந்துகிட்ட விதம்….பிஹேவியர் எல்லாம் பார்க்க ரொம்பவே ரெஸ்பான்ஸிபிள் பெர்சனா தெரிஞ்ச…. உனக்கு தெரியுதான்னு தெரியலை…நீ நிறைய நம்ம அப்பா சாயல்ல இருக்க….அதுவும் பாடி லாங்குவேஜ்…..மேனரிசம்னு….

அதுவும் நான் அப்ப இருந்த நிலையில் அப்பா என்னைப் பார்க்க வந்துட்ட மாதிரி ஒரு ஃபீல்….. அப்பா இருந்திருந்தா இந்நேரம் தைரியமா அப்பாட்ட சொல்லிறுப்பேனே…..அப்பாவால என்ன காப்பாத்த முடியுமோ இல்லையோ வீட்ட பார்த்துப்பாங்களேன்னு  அவ்ளவு ஃபீல் செய்துட்டு இருந்த நேரம்ன்றதால உன்னைப் பார்க்கவுமே உன்ட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டா என்னனு கூட தோணிச்சு….. “ இப்போது ஒரு பெருமூச்சுவிட்டவன்…..

“அவ்ளவு நாளும் உன்னை விலக்கி நிறுத்திட்டு இப்ப ப்ராப்ளம்னதும் உன் தலையில தூக்கி போடவான்னு…..” என்று நிறுத்தினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

அதுவரை வர்ஷன் பேசிக் கொண்டிருந்ததை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த மித்ரன் இப்போது மறுக்கும் விதமாக சிறிதாய் தலை அசைக்க….

இந்த நேரம்தான் சின்ன இடுக்கோடு திறந்திருந்த அறை கதவின் வழியாய், மனோவின் கண்ணில் வாசலில் நின்றிருந்த பெண்கள் படுகின்றனர்…… இவள் முகபாவத்தில் மாற்றம்…..ஆக இவள் பார்வையை தொடர்ந்து இவள் பார்த்த திசையை பார்த்தான் மித்ரன் இப்போது…. வர்ஷனும்தான்…..

பேச்சு அதோடு நின்று அனைவர் கவனமும் வந்திருக்கிறவர்கள் மேல் திரும்பியது….

இவர்கள் பார்ப்பது தெரியவும்……மூன்று பேருமே உள்ளே வர தொடங்கினர்….

ஏறத்தாழ 24 மணி நேரமாக நேற்றிலிருந்து அலைந்து கொண்டிருக்கின்றனர் மனோவும் மித்ரனும்……நிச்சயமாய் இருவருக்கும் ஓய்வு தேவை….அதுவும் மித்ரன் உடல் நலம் ஒன்றும் அவன் சொல்லிக் கொள்வது போல்  முற்றிலும் பெர்ஃபெக்ட் என்றெல்லாம் இல்லை தானே….இன்னும் கை காயம் முழுதாய் ஆறவில்லையே….

இதில் அந்த பாட்டியிடம் நின்று இவன் திட்டு வாங்க வேற வேண்டுமாமா? இவர்களைப் பார்க்கவும் அது வேறென்ன செய்யப் போகிறதாம்…? ஆக அவர்கள் உள்ளே வருவதைப் பார்க்கவும் மனோ வரவேற்கும் முகமாய் எழுந்து நின்றவள்…அருகிலிருந்த மித்ரனை திரும்பிப் பார்த்தாள்.

அவனும் இவளைப் பார்த்தவன்…. “எதுனாலும் பக்கத்துல வெயிட்டிங் ரூம்லதான் இருப்போம்……கூப்டு இன்பா….” என சொல்லியபடி இவளோடு இணைந்து நடக்க தொடங்கிவிட்டான்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.