(Reading time: 55 - 110 minutes)

 

டந்தது இதுதான்…. ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த இன்பாவுக்கு அதீத தலைவலி….காய்ச்சல் வருவது போலவும் ஒரு உணர்வு…… மருத்துவமனையில் எதிர்பாராமல் சந்தித்த ஜோவன் பற்றிய நினைவு வேறு அவளை குடைந்து கொண்டிருந்தது…… அவனிடம் பாட்டி நினைத்தது போல் இவள் தன் காதலுக்காகவெல்லாம் கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை…. உண்மையில் வர்ஷன் நிலை பற்றி அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் அவ்வளவே…..ஆனாலும் இன்றைய மன நிலையில் ஜோவனை சந்தித்தது கூட ஒரு ஏமாற்ற உணர்வை தர……தலைவலியும் அதோடு சேர….ஒரு தலைவலி மாத்திரை போட்டுக் கொண்டு தூங்க எண்ணினாள் அவள்….ஆனால் வீட்டில் தேடிய போது அது எதுவும் கிடைக்கவில்லை…..ஆனால் கிடைத்தது களஞ்சியத்தின் தூக்க மாத்திரை ஒன்று…. அதுதான் அந்த டப்பாவின் கடைசி மாத்திரை….

இதுவரை அவள் தூக்க மாத்திரை எல்லாம் சாப்பிட்டது இல்லை…..ஆனால் இன்றைய மூடுக்கு…சரி ஒன்னை போட்டு நல்லா தூங்கி எழுந்தா பெட்டரா இருக்கும் என தோன்ற போட்டுக் கொண்டு படுத்துவிட்டாள்….

இந்த மாத்திரை எடுத்து பழக்கமில்லாத உடம்பா…அதீத உறக்கம்……அதில் தான் பாட்டி இந்த களேபரம் செய்து வைத்து…….கீழே விழுந்து கண்ணை வேறு காயம் செய்து வைத்திருக்கிறார்…..

பாட்டிக்கு முழு விஷயத்தையும் விளக்கினாலும் அவரால் மனதில் அனுபவித்த அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியில் வர முடியவில்லை……ஏற்கனவே வர்ஷனுக்கும் இன்பாவுக்கும் நல்ல உறவுகள் அமைவதை தானே தடுக்கிறேனோ என்ற ஒரு நினைவில் இருந்தார் அல்லவா…அதில் இந்த அதிர்ச்சி ஆழமாய் அதன் கை வரிசையை காட்ட…. பிள்ளைகளுக்கு எதாவது ஆன பிறகு நான் அப்டி செய்துறுக்கலாமோ இல்லை இப்படி நடந்திறுக்கலாமோன்னு நினைச்சு அழுது என்ன செய்ய…என அவருக்கு தோன்றிவிட்டது…

 அவர்தான் பிடிவாதகாரர் ஆகிட்டே….மொட்டை பிடிவாதமாய் பிடித்து அப்பவே கிளம்பி ஜோவன் வீட்டுக்கு போய்….. “நான் என் மகன் வீட்டோட போய்டுறேன்…..என் பிள்ளய நீங்க என் கண்ணுல கூட காமிக்க வேண்டாம்….. அவள நல்லா வச்சுறுங்க போதும் என்ற ரீதியில் இன்பா திருமணத்தை பேசி முடித்துவிட்டார்….

நேராக வந்து அவரே அப்படி சொல்லும் போது ஜோவனுக்கே ஒரு மாதிரியாய் போய்விட்டது… “.நீங்க அவள பார்க்கவே வேண்டாம்னுலாம் இல்லை பாட்டி….” என அவன் ஆரம்பிக்க…

“என் சுபாவமே மாறிட்டுன்னு சொல்ல வரலை நான்…..இன்னும் எனக்கு முன்ன இருந்த அதே குணம்  அப்டியேதான் இருக்கு….யார் மேல முன்ன மரியாதை இல்லையோ அவங்க மேல இப்பயும் மரியாத இல்ல…..யார் மேல குரோதம் இருக்கோ அவங்க மேல குரோதம் தான் இருக்கு….நான் இப்படித்தான்…… ஆனா இந்த என் குணத்தால என் வருவோ….இன்பாவோ கஷ்ட படுற நிலை வரும்னு எனக்கு இப்ப புரியுது….அதை தாங்க எனக்கு தெம்பு இல்லனு மட்டும்தான் சொல்றேன்….அதனால இனி என் மகன் கூடவே நான் இருக்கேன்……அந்த வீட்ல என்னால மதிக்க முடியாதவங்கன்னு யாரும் இல்ல…..அதனால அவங்களும் நிம்மதியா இருப்பாங்க……நானும்….” என்றபடி கிளம்பியவர் நேராக சென்று இறங்கியது தன் மகன் வீட்டில் தான்….

பாட்டியின் இந்த முடிவு யாருக்கு சந்தோஷமாயிருந்ததோ இல்லையோ….நிச்சயமாய் களஞ்சியத்திற்கு நிம்மதியாய் இருந்திருக்க வேண்டும்…..

 “என் மக வீட்ல என்னை இருக்க விடாம துரத்திட்ட” என அவர் குதித்த காரணத்துக்காக….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "என் காதல் பொன்னூஞ்சல் நீ" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“மகளும் மருமகனும் இல்லாதப்ப என்னையும் துரத்திவிட்டு, மொத்த சொத்தயும் உன் பிள்ளைக்காக சுருட்டப் பார்க்கிற” என அவர் அலறிய காரணத்திற்காக இவர் கணவர் இறந்த நாளிலிருந்து இந்த அம்மி கல்லை கழுத்தில் கட்டி இத்தனை காலம் சுமந்தவர் அல்லவா…..ஆனால் அவரை பாட்டியின் முடிவு  சிந்திக்க தான் வைத்தது……

பாட்டியின் ஆணவத்தின் அசைக்க முடியாத பிடிவாதத்தின் அளவறிந்தவர் களஞ்சியம்….. அந்த பாட்டியே இத்தனையாய் மாற வேண்டும் என்றால்…????

உயிரோட இருக்கப்ப காமிக்காத அன்ப…செத்த பிறகு சொல்லி அழுறதுல என்ன ப்ரயோஜன்றதுதானே….பாட்டியோட இந்த முடிவுக்கு காரணம்…..அது இவருக்கும் கூட பொருந்தும் தானே……

மித்ரன் விஷயத்தில் அவன் பிறந்த போது அவன் இவருக்கு உயிராய் தான் இருந்தான்…..அடுத்தவர் பிள்ளையையே அத்தனையாய் நேசித்தவருக்கு சொந்தமாய் சுமந்து பெற்ற பிள்ளை மீது பாசம் வராமலா போகும்….. ? ஆனால் இவரது சுயகௌரவம் பாட்டியின் குத்தல் பேச்சு,  அம்மா அப்பா இல்லாத காலத்தில் கூட இவரிடம் அன்பு பாராட்டிய அக்கா மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை  என அனைத்தும் அவனை அவரது இதயத்திலிருந்து இடம் பெயர்த்து போட்டது….

கணவன் இறந்த செயல் இவரைப் பொறுத்தவரை பெரிய அதிர்ச்சி…..அந்த நிலையில் மகனை நினைக்க கூட தெரியவில்லை தான்…..அப்போது அவனிடம் தகவல் சொல்லியாகிவிட்டதென சொன்ன அக்காவை சந்தேகிக்க தெரியவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.