(Reading time: 55 - 110 minutes)

னால் உள்ளே நுழையும் களஞ்சியத்தைப் பார்க்கவும் சட்டென முழு வானமும் இடிந்து விழுந்தது போல் இருக்கிறது இவளுக்கு……மனோவின் மாமியார் வருகிற படியால் கூட வீட்டை அக்கறையாய் அழகு படுத்தியிருக்கலாமே….

அப்படியானால் வர்ஷனப் பத்தி இப்ப இவ நினச்சது எல்லாமே வெறும் கற்பனைதானா?

வந்த அழுகையை அடக்கியபடி மெல்ல படியேறி வந்து இவள் குழந்தையை கையில் எடுக்க குனிந்த நேரம்… பின்னிருந்து இவளை இழுத்து அணைத்த கையை இவளுக்கு நன்றாகவே தெரியும்…. இவளுடையவன்.

தவிப்பாய் திரும்பி தன்னவன் முகம் பார்த்தவள்…..அடுத்து அவனிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை…. அவனுக்குள் அழுதபடி புதைந்திருந்தாள்….

கனுடன் இன்று எப்படியும் பேசிவிட வேண்டும் என முடிவு செய்திருந்த களஞ்சியம்….இந்த பாட்டி களேபரம் முடிந்து……மீண்டுமாய் இரண்டு மகன்களும் இருந்த மருத்துவமனை வரும் போது…. வர்ஷன் டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பிக் கொண்டிருந்தான்…. அவன் மனோ வீட்டிலிருக்கும் விஜிலாவைத்தான் பார்க்க போவான் என தெரியுமாதலால்….

அவனது காரில் சென்று ஏறிக் கொண்டார் களஞ்சியம்…..மனோ வீடு எனும் போது எப்படியும் மனோவும் மித்திரனும் அங்குதானே வருவர் என நினைப்பு அவருக்கு…

ஆனால் அங்கு வீடை அடைந்த பின் தான் தெரிகிறது மித்ரன் அங்கு வரவில்லை என….

ஏனோ எல்லா காலத்தையும் விட அவர் இன்று மிகவும் தனியாக உணர்ந்தார்.

வர்ஷன் இரவோடு இரவாக விஜிலாவை கூட்டிச் செல்வதை விட இன்று இங்கு தங்கி நாளை கிளம்பட்டும் என்கின்றனர் மனோவின் பெற்றோர். அது இவருக்குமே சரியாய் படுகிறது…. வர்ஷனுக்கும் விஜிலாவுக்குமே அது முறையாக படுகிறது….

ஆக இப்போது அவர் தனியாக கிளம்பி வீடு செல்ல வேண்டும்….இன்பா மட்டும் இல்லையென்றால் இவருக்கு வீட்டுக்கு கிளம்பிச் செல்ல கூட தோன்றாதாயிருக்கும்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

ருத்துவமனையிலிருந்து கிளம்பிய மித்ரன் காரை செலுத்த அவன் அருகில் இருந்த மனோவோ….

“எங்க நம்ம அபார்ட்மென்ட் தான போறீங்க…?”

“தெரியலையே….”

“என்னது…தெரியலையா?”

“எஸ் எஸ்…….தெரியலை….”

இப்போது இவளைப் பார்த்தவன்….

“நான் ரொம்பவும் ஹேப்பியா ஜாலியா….எக்‌ஸைட்டாட இருக்கேன்…… எல்லா ப்ராப்ளமும் சால்வ்ட்… வழக்கமா இப்டி இருந்தா எந்த ப்ளானும் இல்லாம காரை எடுத்துட்டு தோணுன திசையிலெல்லாம் ட்ரைவ் பண்ணுவேன்…”

அவன் முகம் உண்மையில் ஒளிர்வதைப் போல்தான் இருந்தது…..

பார்க்க மனோவுக்குமே சந்தோஶமாக இருக்கிறதுதான். இந்நேரம் மித்ரனின் மொபைல் சிணுங்க….அழைப்பை ஏற்றவன் ஸ்பீக்கரை ஆன் செய்து மொபைலை டேஷ் போர்டில் வைத்தான்….

“இப்ப மணி 5.55…..சரியா 6.22 க்கு உங்க அம்மாவ நான் கிட்நாப் செய்யப் போறேன்….” என்று சொல்லி அழைப்பை துண்டித்தது ஒரு குரல். தார்கிகா…..இப்போது சட்டென அவனுக்கு அம்மாவின் நியாபகம்…

அவசரமாக மனோவிடம் திரும்பி…. “அம்மா எங்க இருக்காங்கன்னு தெரியுமா மனு?”

ஒரு கணம் ஸ்தம்பித்த மனோவுக்கு இப்போது களஞ்சியம் வர்ஷனுடன் காரில் போனது ஞாபகம் வருகிறது….

அதற்குள் தன் காரை யூ டர்ன் எடுத்து திருப்பி இருந்தான் இவன்…

“இன்பா மட்டுமா வீட்ல இருப்பா….. அம்மா எப்டியும் நைட் வீட்டுக்கு வரனும்னு தான் நினைப்பாங்க…..” சொல்லியபடி காரை மனோவின் வீட்டைப் பார்த்து விரட்டினான் மித்ரன்…

அடுத்து இவர்கள் மனோ வீட்டை அடையும் வரையுமே மௌனம் நிலவியது.

மனோ வீட்டின் முன் வர்ஷனின் கார் நின்றதால்…சற்று தள்ளி இவர்கள் காரை நிறுத்திவிட்டு இவர்கள் வீட்டில் இவளுக்கு முன்பாக படியேறும் போது மித்ரனின் நடையில் சற்று துள்ளல் இருந்தது…..

காரின் கீயை வேறு தூக்கி போட்டு பிடித்தபடி அவன் கவனத்தை அதில் வைத்து அவன் ஏற….

அவனை அவன் செயல்களை பார்த்து ரசித்தபடி அவன் பின்னால் இவள் ஏற….

ஸ்ஸ்ஸ்ஸ்…. என்று நேற்றியைப் பிடித்தான் அவன்… இவன் வருவதை கவனிக்காமல் மேல் படியிலிருந்து இறங்க தொடங்கி களஞ்சியம் அவனை நேருக்கு நேராக மோதி இருந்தார். அவர் கையிலிருந்த ஹேண்ட் பேக்கில் அலங்காரத்திற்காய் இருந்த ஒன்று அவன் நெற்றியை பதம் பார்த்திருந்தது….

தன் நெற்றியை பிடித்தபடி எதிரில் இருப்பவரை நிமிர்ந்து பார்த்த மித்ரன் அது அவனிடம் எதற்காகவும் பேசாத அவனது அம்மா என தெரியவும், என்ன சொல்லவென தெரியாமல் விழிக்க…..

 தான் மோதி இருப்பது மித்ரன் மேல் என புரிந்து களஞ்சியமும் என்ன செய்யவென தெரியாமல் முழிக்க….

ஒரு கணம் இருவரையும் பார்த்த மனோ…மெல்ல களஞ்சியத்தின் கையைப் பற்றி எடுத்து….மித்ரன் கை வைத்திருந்த அவன் நெற்றிப் பகுதியில் வைத்தாள். “அவங்களுக்கு வலிக்குதாம் அத்த…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.