(Reading time: 55 - 110 minutes)

ரண்டு வாரம் கடந்திருந்தது…..அன்று சனிக் கிழமை….. மனோ மித்ரனின் வீட்டிற்கு அதாவது அவர்களது அபார்ட்மென்ட்டிற்கு  மனோ வீட்டிலிருந்து வருகின்றனர்….

முதலில் வீட்டு வாசலை அடைந்தது அகதன் தான்…..

“இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது…. சொல்றேன்ல…..” மனோவின் குரல் தூக்கலாய் கேட்கிறது…. அடுத்து ஏதோ போய் படீர் என கீழே விழும் சத்தம்….

‘ஐயோ இவ என்ன இப்டி சண்ட போட்டுட்டு இருக்கா…..இன்னும் இவ கோபம் சால்வ் ஆகலையா…..அப்ப ஆக்சிடெண்ட் ஆகிட்டேன்னு அது அந்த நேரத்து இரக்கம் தானா….? பாவம் மாப்ள…..இதுல இது அம்மா அப்பா காதுல வேற விழுந்துதோ’ என்ற நினைவில் பார்த்தவன் பார்வையில் படுகிறது முன்னிருந்த ஜன்னல்…அதன் வழியாய் உள்ளே வரவேற்பறையிலிருக்கும் ஷோ கேஸின் கண்ணாடி தெரிகிறது இவன் கண்களுக்கு..

அந்த கண்ணாடியில் இவன் புரிந்து கொள்ளும் அளவு தெளிந்த பிம்பம்…

உள்ளே சின்னதாய் அசைந்து கொண்டிருக்கும் ஊஞ்சலில் மித்திரன் படுத்திருக்க…..அவன் மீது அவன் மார்பில் மடித்திருந்த தன் கைகளை ஊன்றி  படுத்தபடி இவள்….. இதில் அவன் stress buster cube ஐ கையில் வைத்து குடைய….அது தான் இப்போது தரைக்கு படீர் என்ற சத்தமுடன் பாசமாய் அனுப்ப பட்டிருந்தது…..உபயம் பரியாள் தான்….

ஒரு வித குறும்புடன் இப்போது இவளைப் பார்த்த இவள் கணவன்……இவள் முகத்தை தன் வசமாய் இழுத்து எதையோ சின்ன குரலில் சொல்ல…..வேகமாய் சென்று அந்த ஜன்னலின் கர்டனை முழுவதுமாய் இழுத்து விட்டான் அகதன்….

அவன் முகத்தில் நிறைவின் அடையாளம்….

டுத்த சில நாளில் அகதனின் திருமணமும்…. இரு மாதங்களில் இன்பாவின் திருமணமும் இனிதே நிறைவேற….. இரு வருடம் கடந்திருக்க….

“ஹேய் மனுப்பொண்னு ஆர் யூ ஷ்யூர்…..இது ஒன்னும் இஷ்யூ ஆகதே….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“இல்லன்னு  எத்தனை டைம் சொல்றேன் மனு…ஒன்னு பண்ணுங்க நீங்க முதல்ல அத்தைய கூப்டு பேசுங்க….?”

“யாரு உன் அத்தையவா….? என்னதுன்னு முழுசா கேட்டு முடிக்றதுக்கு முன்னாலயே….மனோ சொல்லிட்டால்ல அப்ப சரிதான்னு  ஒரு ஜால்ரா வரும் அங்க இருந்து…..இதுக்கெல்லாம் என் அத்தை தான் சரி…”

“யாரு உங்க அத்தையா….? அதான் மாப்ள இவ்ளவு யோசிக்கிறார்ல இப்ப இது அவசியமா உனக்குன்னு கேள்வி வரும்….அதெல்லாம் எனக்கு தெரியாது…..வேணும்னா வேணும்…”  கடும் முயற்சியுடன் அவள் மருதாணியை தன் கால்களுக்கு வைக்க முயன்றுகொண்டிருக்க…..அதற்கு தடையாக அவளது மேடிட்ட வயிறு எதிர்த்து நிற்க…

இப்பொழுது அவள் கையிலிருந்த கிண்ணத்தை பிடிங்கியவன்……தானே வைத்து விட தொடங்கினான்….

“ஐயோ விடுங்க…..இப்ப நிஜமாவே என் அம்மாட்ட இருந்து இதுக்கு அடி விழும்….”

று நாள் க்ரீம் நிறத்திற்கு இலை பச்சை பார்டர் வைத்த பட்டு புடவையில், கன்னங்களில் சந்தனம் மின்ன மொத்த உடலிலும் தாய்மை பூத்திருக்க…..அவர்களது வாரிசை ஆறேழு மாதமாய் சுமப்பதின் அத்தனை அடையாளத்தோடு அவள் அமர்ந்திருக்க…..

இவனது அம்மா களஞ்சியம்….இன்பா…திரவியா…..அவளது அம்மா அப்பா அகதன்  என ஒவ்வொருவராய் அவளுக்காய் ஜெபித்து  செல்ல…….பாட்டி கூட விரும்பி வந்து வாழ்த்திச் செல்ல….சற்று விலகி நின்று  அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் மித்ரன்.

இப்பொழுது இவனை சின்னதாய் தலை அசைத்து அழைத்தாள்….. அவள் அருகில் சென்று நின்றவனை அவன் கை பற்றி சற்றாய் இழுத்து குனியச் செய்து….”தனியா நின்னு அப்டி என்ன பார்த்துட்டு இருக்கீங்க…?”

“இல்ல இத்தனை பேரும் உன்ட்ட கவுர இவ்ளவு நாள் எடுத்துறுக்காங்க….ஆனா நான் மட்டும் ஏன் ஃபர்ஸ்ட் ஷாட்லயே டோட்டல் சரண்டர்னு யோசிச்சுட்டு இருக்கேன்….”

இப்பொழுது  சின்னதாய் சிரித்தவள் “ நல்லவங்களுக்கெல்லாம் நல்லது உடனே நடக்குமாம்னு நினச்சு மனச தேத்திகோங்க…” அவள் கிண்டலாய்த்தான் சொன்னான்….

அவனது வாயோ உணர்ந்து முனு முனுத்தது…..”The best thing that ever happened to me is you”

அவன் மனம் கொய்திருந்திருந்தவள் மனம் நிறைந்து போனாள்.

முற்றும்

கதையை முதலில் இருந்து வாசித்து முழு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும்…..கருத்து தெரிவித்து என்னை தொடர்ந்து எழுத தூண்டிய ஒவ்வொருவருக்கும்….. வாய்ப்பு தந்த சில்சீக்கும்……தூணாய் துணையாய் உடன் நின்ற நட்புகளுக்கும் இவை அனைத்தும் அள்ளித் தந்த ஆண்டவனுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் நவில்கிறேன்

Episode # 26

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.