(Reading time: 55 - 110 minutes)

பின்னும் மித்ரன் மீது உயிரை வைத்திருந்தவர் அவனது அப்பா…..அவர் அவனுக்கு சொத்தில் பாகம் தராமல் போயிருப்பார் என இவரால் எண்ண முடியவில்லை…..ஆக அந்த பங்கை அவன் கையில் கொடுத்திறுப்பார்…..அவருக்கு தான் மகன் மீது நம்பிக்கை அதிகமே……ஆக கொடுத்திறுப்பார்…..அவன் அதை களியாட்டத்தில் கரைத்து போட்டிறுப்பான் என்ற அடுத்த புரிதல் அவனை கம்பெனிக்கு அருகில் வர அனுமதிப்பது கூட ஆபத்து என இவரை நம்ப வைத்தது….அதை அவனது அப்பா வர்ஷனுக்கும் இன்பாவுக்குமாக அல்லவா கொடுத்து சென்றிருக்கிறார் என இவர் நினைத்தார்.

இப்படியாக அவனைவிட்டு மனதளவில் எங்கோ தூரமாய் போய் இருந்தார்…… ஆனாலும் தாயல்லவா….அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியாத நிலை வந்த போது அவரை உள்ளே அது குடைய தொடங்கியது….. அப்போதுதான் மாசிரன் அவன் இந்தியாவில் இருப்பதாக சொன்னார். முன்பு போல் இல்லை கொஞ்சம் பொறுப்பாயும் இருக்கிறான் என்றார். மறைமுகமாக தன் மகள் தார்கிகாவிற்கு மித்ரனை செய்ய தனக்கு விருப்பம் என தூபம் போட்டார்….. களஞ்சியம் சறுக்கியது அங்கேதான்….

மாசிரனின் ஒரே மகள் தார்கிகா…..சின்னவர் இப்ப பொறுப்பா இருக்கார்…என் சொத்தெல்லாம் என் மகளுக்குதானே…இத வச்சு அவர் எதாவது பிசினஸ் செய்தா….உங்க மத்த ரெண்டு பிள்ளைங்க அளவுக்கு கூட வளர முடியும் என அவர் ஆசை காட்டினார்…

வர்ஷன் மற்றும் இன்பாவின் பாகத்திலிருந்து மித்ரனுக்கு கொடுப்பது இவருக்கு ஏதோ ஏமாற்று வேலை போல் பட்டது…..இது மனைவியே அவனுடையவள் எனும் போது கணவன் அவளது சொத்தை முதலீடாக பயன்படுத்துவது தவறாக படவில்லை…. ஆக தார்கிகா மித்ரன் திருமணத்தை களஞ்சியம் விரும்ப இரண்டாம் காரணம் இது….

ஆம் இரண்டாம் காரணம் தான்….. முதல் காரணம் தார்கிகாதான்…. ஒரு வகையில் கள்ளம் கபடம் இல்லாத பெண் அவள்…..பாசக்காரி…..இது இப்டிதான்மா என பெரியவர்கள் எதையாவது நியாயம் என சொல்லிக் கொடுத்தால் அதை எளிதாய் ஏற்றுக் கொள்பவள்….சட்டென எந்த உறவையும் முறிக்காதவள்….

மாசிரனுக்கு தன் அண்ணன் மகன் விக்கியை சுத்தமாக பிடிக்காது…அவன் கூட சேராத என தார்க்கியை அடிக்கடி திட்டிக் கொண்டு இருப்பார் அவர். ஆனால் தார்க்கி எப்போதும் அண்ணனிடம் நன்றாக நடந்து கொள்வாள்…

“ஏன்பா என்ன இருந்தாலும் அவன் உங்க அண்ணா பையன்பா…என அப்பாவுக்கே அட்வைஃஸ் கிடைக்கும் அவளிடமிருந்து….

 மாசிரன் விக்கியை பற்றி சொல்வது, களஞ்சியத்தின் அக்கா மித்ரனைப் பற்றி சொல்வதை விட நான்கு மடங்கு மோசமாக இருக்கும்…. மாசிரன் இப்போது மித்ரன் பொறுப்பாக இருப்பதாக சொன்னாலும்….மித்ரனின் கடந்த காலத்தை பற்றி கேள்விப் படும்போதோ…அல்லது பழக்க தோஷத்தில் மீண்டும் மித்ரன் தவறான எதையோ செய்து தடுமாறினாலோ கூட தார்கி அவனை விட்டுவிட்டு செல்ல மாட்டாள் என்பது களஞ்சியத்தின் எண்ணம்.

களஞ்சியத்தைப் பொறுத்தவரை…. அவரால் ஜெயிக்க முடியாத விஷயம் அவரது சுயகௌரவம்…ஈகோ….அது மிடில் க்ளாஃஸிலிருந்து இப்படி பணக்கார வீட்டிற்குள் வரும் போது அதிகமாக குத்து வாங்கும்….அதை கையாள தெரியாமல் எந்த சுயகௌரவமுள்ள பெண்ணும் ஏதோ ஒரு வகையில் தன் வாழ்க்கையை அழித்துக் கொள்வாள் என்பது இவரது எண்ணம். சுய அனுபவம் காரணம்.  திருமணத்திற்கு பின் அவர் என்று நிம்மதியாய் இருந்திருக்கிறார்….? இவர் நிமித்தம் இவர் கணவரும்தான் என்று சந்தோஶமாக இருக்க முடிந்ததாம்?

ஆக தன் பிள்ளைகளுக்கு மிடில் க்ளாஸில் இருந்து வாழ்க்கை துணை வர கூடாது என உறுதியாய் இருந்தார்…. அதில் வர்ஷன் விஜிலாவை விரும்பி மணமுடிக்க…..அவனது விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமல் அட்வைஃஸ் செய்துவிட்டு அந்த திருமணத்தை இவர் செய்து வைக்க……..அது விஜிலா சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு சென்றதில் போய் முடிந்தது…… அதற்காக கூட மகன் தன் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வரவில்லை என்பது வேறு விஷயம்… அப்போது வர்ஷன் இப்படி அடை பட்டு கிடைக்கிறான் என இவருக்கு தெரியாதே….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

இந்த நிலையில் மித்ரனும் மனோவை விரும்புவதாக இவருக்கு தெரிய வர “இதை என்னவாது செய்து ஆரம்பத்துலயே நிறுத்துங்க” என மாசிரனிடம் சொல்ல வைத்தது உள்ளுக்குள் இவருக்கு மகன் மீது இருந்த பாசம்மும் சூழலும். ஆனால் அந்த என்னவாது நிச்சயமாய் மர்டர் அட்டெம்டெல்லாம் கிடையாது இவரைப் பொறுத்தவரை….

அடுத்துமே மனோ மித்ரனின் கடந்த காலத்தை பற்றி தெரிந்தும் அவனை திருமணம் செய்ய முன் வருகிறாள் என இவர் நினைத்த போது…..அந்த திருமணத்தை இவர் முழு மனதாக ஆதரித்தார்….. அந்த திருமணம் நிலைக்கும் என்பது இவரது நம்பிக்கை….. மித்ரனுக்கு வளரும் காலத்தில் குடும்பம் என்று எதுவுமில்லை… எதிர் காலத்திலும் அவன் அனாதையாகமல் இருக்க திருமண வாழ்க்கை அவனுக்கு நிலையாக இருக்க வேண்டும் என இவர் எதிர்பார்த்தார்.

ஆனால்  அங்கும் ஒரு தவறு செய்தார் களஞ்சியம்….. மகன் கையில் பைசா இல்லாமல் நிற்கிறானே…..  இன்பாவின் கணவனே மித்ரன் குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவனாய் இருந்தால்….இன்பாவின் சொத்தை எடுத்து மித்ரனுக்கு கொடுப்பது இவருக்கு மனதிற்கு ஒத்துப் போகவில்லை….ஆனால் இன்பாவின் கணவன் அகதன் என்றால் பொருளாதார ரீதியாக மித்ரனும் மனோவும் வருந்தும்படி அவன் விட்டுவிட மாட்டான் என்பது அவரது எண்ணம்…..அதோடு அது மனோவுக்கு மித்ரனை தன் கட்டுக்குள்  வைக்கவும் உதவும் என்ற ஒரு நம்பிக்கை இவருக்கு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.