(Reading time: 55 - 110 minutes)

த்தனையோ காலத்திற்குப் பின் கிடைக்கும் மகனின் ஸ்பரிசமல்லவா…..இரு நொடிகள் தேவைப் பட்டது களஞ்சியத்திற்கு நடப்பது புரிய…

 இதற்குள் அவர் கண்ணில் நீர் கட்ட….. எந்த மறுப்பும் விலக்கமும் காண்பிக்காது நின்ற மகனின் நெற்றியை மெல்ல அவர் தடவிவிட்ட போது…. அவர் கண்ணில் நீர் வழிதல் ஆரம்பம்…..

“அம்மா தப்பு பண்ணிட்டேன்டா மித்….” அவர் வெடிக்க…..அதற்கு மேல் அவர் என்ன சொன்னாரோ யாருக்கும் கேட்கவில்லை….தன் தாயை அணைத்திருந்தான் மித்ரன்….

இந்த காட்சியை நின்று பார்த்திருந்த மனோ…. தன் வீட்டிற்குள் செல்லவென அவர்களை கடக்க…. இப்போது ஒற்றைக் கையை மட்டும் நீட்டி இவளது கயைப் பற்றி நிறுத்தினான் மித்ரன்….

இதற்குள் மெல்ல தன்னை  சமனப் படுத்திக் கொண்ட களஞ்சியம் ….கண்ணீரும் களிப்புமாய் மனோவின் இரு கன்னங்களையும் தன் கைகளால் ஏந்தியவர்….”.நீ செய்த நிறைய விஷயம் எனக்கு பிடிக்கும்…. ஆனா இது எல்லாத்துக்கும் மேல….” என்றபடி அவள் நெற்றியில் முத்தமிட்டவர்… பின் அருகில் நின்ற தன் மகனுக்கும் அதை செய்தார்….

“இப்ப மாதிரி எப்பவும் ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா.இருக்கனும்….” சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குள் மீண்டுமாக நுழைந்தார்….

அன்று டின்னர் மனோ வீட்டில் தான்....இன்பாவையும் இங்கு கிளம்பி வர சொல்லிவிட்டனர்….

மூன்று பிள்ளைகளையும் வைத்து முதல்முறையாக உணவு பரிமாறினார் களஞ்சியம்…..

சற்று முன் தோன்றிய மொத்த தனிமையும் காணாமல் போயிருந்தது அவருக்கு….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

ன்று இரவு களஞ்சியத்தையும் இன்பாவையும் கொண்டு வீட்டில் விட்டுவிட்டு மித்ரனும் மனோவும் அவர்களது அபார்ட்மென்ட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

 “தார்க்கி எங்க மனுப்பா இருக்கா…?”

“அவ வீட்லதான்…ஆனா இன்பாக்கு கால் செய்து பேசி இருக்கா……இவ அம்மா எங்கன்னு தெரியலைனு சொல்லி இருப்பா போல….அதான் நமக்கு அப்டி ஒரு கால்…… இன்னும் கூட விளையாட்டுதான் போல…..”

“சே இல்ல மனுப்பா….அவ ரொம்ப பயந்து போய்தான் இருக்கா…..அவள ஏமாத்துனது அவ அண்ணா வேறயா….ரொம்பவும் ஆடிப் போய்தான் இருக்கா….என்ன எதையும் வெளிய காமிச்சுகாம நார்மலா இருக்ற மாதிரி ப்ரொஜக்ட் செய்துட்டு இருக்கா…”

தார்கிகாவின் அப்பா மாசிரன் தனது அண்ணன் நாதன் இறக்கவும் அவரது ஆடிட்டிங் பெர்மை முழுவதுமாய் தன் பொறுப்பில் எடுத்திருந்தவர்…..நாதனின் மகன் விக்கிகு எதுவும் கொடுக்காமல் தன் வீட்டோடு வைத்திருந்தார்….. முதலில் அவன் டீனேஜர் அப்போது ஏதும் அவனுக்கு புரியவில்லை…..வளர வளர தான் ஏமாத்தப் படுகிறோம் என்ற புரிதல்…..அதில் மாசிரன் இப்போது கைது செய்யப்பட…..எல்லாமே விக்கிகு வந்திருந்தது……அவனுக்கு மாசிரன்  விடுதலை ஆகி வெளியே வந்துவிட்டால் எங்கே மீண்டும் தான் எல்லாவற்றையும் இழக்க வேண்டி இருக்குமோ என பயம்….

அதில் தன் அப்பா  இப்படி ஏமாற்றி இருக்கிறார் என தெரிந்த தார்கிகா….அவள் இயல்பின் படி ரொம்பவும் எமோஷனலாய்  தன் அண்ணன் விக்கியிடம்  புலம்ப….

அவன் அதை இன்னுமாய் தூபம் போட்டு ஏற்றிவிட்டான்….. உன் அப்பா செய்த வேலையால பாவம் அவங்க எவ்ளவு கஷ்ட பட்டுடாங்க….அதோட இவ்ளவு ப்ரச்சனைக்கு மத்தியில வர்ற மருமகள யாரு ஏத்துப்பா….அதுவும் நீதான் மருமகன்னு நினச்சுட்டு இருந்தவங்க உன் ஆன்டி….இப்ப உன் ஆன்டி…அந்த புது மருமக….இன்பானு எல்லோருக்கும் சண்டைதான் நடக்கும்….. என்ற ரீதியில் பேசியவன்..….

நீ நினச்சா இதெல்லாம் சரி செய்ய முடியும்…..உன் அப்பா தப்புக்கு ப்ராயசித்தம் செய்த மாதிரி இருக்கும்….என முடிக்கிவிட்டு….

நீ போய் கொஞ்சம் சண்டை போட்டுடு வா…. நல்ல வேளை இவ நம்ம வீட்டுக்கு மருமகளா வரலைனு நினச்சுப்பாங்க….நீ போய் அந்த இன்பாவ கிட்நாப் செய்ற மாதிரி சொல்லி……அந்த மருமகள வந்து மீட்டு கொண்டு போக சொல்லு…. அப்ப அந்த இன்பா லவ் விஷயம் வீட்டுக்கு போய்டும்…..அவங்க பார்த்து எதாவது முடிவு எடுத்துப்பாங்க…. அது இன்பாவுக்கு நல்லது….அதோட அந்த புது மருமகள வீட்ல எல்லோருக்கும் பிடிச்சுடும்…..

இப்படி ஐடியா கொடுத்து அவளை களத்தில் இறங்கி கிரிமினல் வேலை செய்ய வைத்தான் விக்கி…. அப்படியானால் மாசிரன் இன்னும் தன் மகள் மூலம் தங்களுக்கு ப்ரச்சனை தருகிறார் என புரிந்து கொண்டு  இந்த நேஷன் க்ரூப்ஸ் மாசிரன விடுதலை ஆகாம தடுக்க எல்லா ஏற்பாடும் செய்யுமில்லையா என்பது அவன் திட்டம்… மீறி மாட்டினாலும் தார்கிகாதானே மாட்டுவாள் அதுவும் நல்லதுக்குதானே…..மொத்த ஃபெர்மும் இவன் கையில் இருக்குமே என்ற நினைப்பு அவனுக்கு…..

அதை நம்பி இந்த விபராம் பத்தாத தார்கிகாவும் ஆடி இருக்கிறது……விசாரணையில் எல்லாம் புரிய தார்கிகாவிற்கு ஜாமீன் எடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பது மித்ரனின் ஏற்பாடுதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.