(Reading time: 55 - 110 minutes)

ன்னை என்ன பார்க்க….எனக்கும்  ஒரு முடிவுக்கும் வர முடியலை….” என்றவள்……

சின்னதாய் ஜோவன் இன்பா விஷயத்தை சொன்னாள்.

கேட்டிருந்த பாட்டிக்கு இதுவும் முற்றிலும் புதிய தகவல்…..ஒரு பக்கம் கோபம் கொந்தளித்துக்கொண்டு வந்தாலும் இன்னொரு பக்கம் மீதி விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல்…பல்லைகடித்துக் கொண்டு பொறுமையாய் அவர்……

“இப்ப இங்க ஜோவன் வந்தார்….” மனோ மீண்டுமாய் தொடந்தாள்…..

“ அவர் குழந்தைக்கு இங்க தான் ட்ரீட்மென்ட்டாம்…வந்த இடத்துல வர்ஷன் இங்க அட்மிட் ஆகி இருக்கார்னு தெரிஞ்சுது….அதான் விசாரிக்கலாம்னு வந்தேன்னு சொல்லிட்டு இருந்தார். அப்டியே இன்பா விஷயத்த பத்தி போச்சுது பேச்சு…..ஓபனா பேசிகிட்டோம்….

அவர் நான் முதல்ல இன்பாவ விரும்புனது நிஜம்….ஆனா அவளுக்கு விருப்பம் இல்லைனு தெரிஞ்ச பிறகு அவளையே நினச்சுட்டு வாழ்ற டைப் நான் கிடையாது…..அதுவே இன்பாவ ஒரு வகையில இமோஷனல் ப்ளாக்மெய்ல் செய்ற மாதிரி தானே….

அதோட என் அம்மாவுக்கு நான் ஒரே பையன்…..அப்பாவும் சின்ன வயதில் இறந்துட்டாங்க… தனியாளா என் அம்மா என்னை வளக்க என்னவெல்லாம் கஷ்டபட்றுபாங்கன்னு எனக்கு தெரியும்….அவங்க நான் மேரேஜாகி செட்லாகனும்னு ஆசைப்படுறப்ப….

அம்மாவும் நானுமா தனியாவே வளந்த எனக்குமே முழுதா குடும்பம்னு ஒன்னு வேணும்னு ஆசை இருக்றப்ப….என்னை விரும்பாத ஒரு பொண்ணை நான் விரும்பிட்டேன்ற ஒரு காரணத்துக்காக எதுக்காக வேற மேரேஜ் செய்துகாம இருக்கனும்…. ? அதனால என் அம்மா ஏற்பாடு செய்த மேரேஜை சந்தோஷமாதான் ஏத்துக்கிட்டேன்….

அடுத்தும் கல்யாணத்துக்கு பிறகும் இன்னொரு பொண்ணை நினச்சு….அதுக்காக பழி வாங்க அலையிற சின்னதனமெல்லாம் எனக்கு வராது….என்னை நம்பி மேரேஜ் செய்த என் வைஃப்தான் என் உலகம் அப்ப….

இங்க இன்பா வீட்ல நினைக்கிற மாதிரி நான் ரிவெஞ்ச்னுலாம் அலஞ்சது இல்ல…. முதல்ல அந்த பாட்டி பேசுனது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…..ப்ரொவோக் ஆனேன் அதெல்லாம் உண்மைதான்……

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ஆனா அதுக்கும் இவங்க  கம்பெனி கூட நடக்ற பிஸினஸ் க்ளாஷ்கும் சம்பந்தம் கிடையாது  இது ரெண்டு பேரும் ஒரே பிசினஸ் செய்றதால வந்த க்ளாஷ்….நேஷன் க்ரூபஸோட எல்லா பிஸினஸ் கூடயுமா மோதிகிட்டு இருக்கேன்…? என் பராடக்டும் உங்க ப்ராடக்ட்டும் ஒன்னா இருக்கிற விஷயத்துல க்ளாஷ் வர தானே செய்யும்….

உண்மையில் ரைவல்ரி பிஸினஸ்லதான்….மனசுல கிடையாது…..ஆனா இன்பா விஷயத்தை வச்சு அவங்க வீட்ல என்னை இப்டி புரிஞ்சுகிட்டாங்க…. இதுக்கிடையில் இப்ப என் வைஃப் டெத்க்கு பிறகு  ரீசண்டா திரும்ப அடிக்கடி இன்பாவ பார்க்ற சூழ்நிலை அமஞ்சுது…..

அவ பழசை மனசில் வச்சுகிட்டு முகத்தை தூக்கிட்டு அலையாம ஃப்ரெண்ட்லியா பேசினா…. எங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயதில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் தெரியும்…அப்ப நான் எதுக்காக அவட்ட பேசாமா போகனும்…? அதனால இடையில நடந்த எல்லாத்தையும் தவிர்த்துட்டு சதாரணமா பேசிக்கிட்டோம்….

இதில் என் வகையில் எந்த தப்பான நோக்கமும் கிடையாது….அன்னைக்கு கூட மால்ல நீங்க இருக்றப்ப உங்க முன்னாலதான் நான் இன்பாட்ட பேசிட்டு போனேன்…எதையுமே  இன்பா வீட்டுக்கு தெரியாம மறச்சு செய்யனும்னு நான் நினைக்கவே இல்ல…

ஆனா அடுத்து என் குழந்தைக்கும் அம்மாவுக்கும் உடம்பு முடியலைனு தெரியவும்… அவ வீட்டுக்கு தெரியாம ஹாஸ்பிட்டல் வந்தப்பதான் என்னால அவ மனசுல என்ன இருக்குதுன்னு பார்க்க முடிஞ்சுது….. நான் இப்டி நீ தனியா நைட் வெளிய ஸ்டே பண்ண கூடாதுன்னு அவ்ளவு அழுத்தி சொல்லியும் அவ கிளம்ப தயாராவே இல்ல…அதனால வேற வழி இல்லாம செக்யூரிட்டி அரேஞ்ச் செய்தேன்…. அதுல நான் வேற என்ன செய்ய முடியும்?

எனக்கு இன்னொரு மேரஜ்னு ஒன்னு வரும்னு நான் இதுவரைக்கும் கற்பனையில கூட நினச்சது இல்ல…. ஆனா இன்பாக்கு விருப்பம் இருக்குன்னு தெரியுறப்ப…அதோட அவ என் குழந்தைட்ட நடந்துக்கிற விதத்துல….அம்மா இல்லாத பொண்ணா வளர்ந்த அவளோட இன்செக்யூரிட்டி என்னனு புரியுறப்ப…..நான் அவள வெறுத்து வளந்தவன் இல்லையே…அவள பத்ரமா என் கண்ணுகுள்ள வச்சு பார்த்துகனும்னு தோணுதுதான்….

ஆனா இதுல வேற ப்ரச்சனை இருக்குது…... எனக்கு ஃபர்ஸ்ட் ஸ்பவ்ஸ் இறந்த பின் செகண்ட் மேரேஜ்  செய்றது குற்றமா தெரியலை….. சேம் டைம் நான் ஃபர்ஸ்ட் மேரேஜ் மாதிரி என்னை மட்டுமா நினச்சு இதுல முடிவுக்கு வர முடியாது….. என் குழந்தைய பத்தியும் நினச்சு பார்த்தாகனும்….

இன்பாவவிட பெட்டரா என் பொண்ணை யாரும் பார்த்துக்க முடியும்னு எனக்கு தோணலை…… ஆனா மேரேஜ்ன்றது பொண்னும் பையனும் கல்யாணம் செய்துட்டு ஆளில்லா ப்ளானட்க்கு தனியா போய்றது இல்ல….

நம்ம ஃபேமிலீஸ் பக்கத்துல இருப்பாங்க ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் போய் வந்து இருப்போம்…. என் விஷயத்துல என் அம்மாவுக்கு என்ன தவிர யாரும் கிடையாது….அதனால கண்டிப்பா அவங்க எங்க கூட தான் இருப்பாங்க…

அந்த வகையில இன்பா வீட்ல இருந்தும் ஆள் வந்து போய் இருப்பாங்க….நாங்களும் அங்க வந்து போக வேண்டி இருக்கும்…. அந்த சூழல்ல அந்த பாட்டி என்னோட இந்த குழந்தைய எப்டி ட்ரீட் செய்வாங்க…?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.