(Reading time: 55 - 110 minutes)

னோவும் இன்பாவைக் கடக்கும் போது அவள் கண்களை சந்தித்து ஒரு இலகுவான பார்வை பார்த்தவள்…அடுத்து யாரையும் பார்வையால் கூட தொடாமல் மித்ரனுடன் வெளியே வந்துவிட்டாள்.

ஆனால் மனதுக்குள் அவளை மீறி வந்து மண்டுகிறது ஒரு அழுத்தம்…. வர்ஷனுக்காக களஞ்சியம் வந்ததில் இவளுக்கு வருத்தம் இல்லை….ஆனால் இவ்ளவு தூரம் ஓடி வர முடிகிறவருக்கு…..

 காயம் பட்டு வீட்டுக்கு வந்திருந்த மித்ரனிடம் ஒரு வார்த்தை நேரடியாக கேட்டு விசாரிக்க முடியவில்லை…ஏன் முதல் நாள் தவிர அவனை அவர் பார்க்க கூட வரவில்லை….முன்பானால்  மித்ரன் இந்த நாட்டிலேயோ அவரது பார்வைக்குள்ளோ இல்லை…..ஆனால் இப்போதும் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறதாம்….? இது இவளவனுக்கு எப்படி இருக்குமாம்?

தன் கையை பற்றி நடத்துபவனை மெல்ல திரும்பிப் பார்த்தாள்….. அவனும் வழக்கம் போல் இவள் பார்வை உணர்ந்து திரும்பினான்.

அடுத்த அறைதான் வெயிட்டிங் அறையாய் இவர்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தது…..இதற்குள் அறைக்குள் இவர்கள் நுழைய…

அவன் கைக்குள் இருந்த தன் கையை உருவாமல்..அடுத்த கையால் கதவை சாத்தியவள்…..அத்தனை மணி நேர போராட்டம் பின் இருவருக்குமாய் வாய்க்கும் இந்த தனிமையில் மெல்லமாய் அவன் தோளில் முகம் புதைத்தாள்….சாய்ந்தும் கொண்டாள்.

இப்பொழுது அவனுமே அவளை பற்றி இருந்த கையை விடாமல் மறு கையால் அவளை ஆறுதலாய் வளைத்தான்….

“என்னாச்சு மனு…? அம்மாவ நினச்சா இவ்ளவு ஃபீல் பண்ற…?” அவன் இவள் மனம் உணர்ந்து கேட்க…

அதற்கு வார்த்தையால் பதில் ஏதும் சொல்லாமல்… அவன் கையிலிருந்த தன் கையை உருவிக் கொண்டு…. தன் இரு கைகளாலும் அவனை இறுக்கமாய் அணைத்தாள் அவள்……அதில் அத்தனை உரிமை அழுத்தமாய் தெரிந்தது….

“வாவ்….இப்டிலாம் கிடைக்கும்னா  இதுக்காகவே அம்மாவுக்கு பிடிக்காத பையனா இருக்கலாம் போலயே….” கேலி மூலம் அவள் மன ஓட்டத்தை திசை திருப்ப முயன்றபடி அவள் அணைப்புக்கு அவன் பதில் செயல் செய்ய….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

அவன் எதிர்பார்த்தது போலவே மனோ இப்போது நிமிர்ந்து பார்த்து அவளது ட்ரேட் மார்க் முறைப்பை கொடுத்தாள்.….அவள் சற்று இயல்புக்கு வந்துவிட்டாள் என தெரியவும்…

“மனு இப்டி அவங்க பக்கதுல இருந்துட்டு…அவங்களோட ஒவ்வொரு மூவ்க்கும் மூட் அவ்ட் ஆகுவன்னா….. நாம அங்க இருக்றதே சரியா வராது மனு….” அவன் ஏதோ விளக்கத் தொடங்க இவளுக்கும் அது சரி என்றுதான் தோன்றுகிறது….ஆனால் இதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் யாரோ கதவை தட்டும் சத்தம்…

கதவை திறந்தால் அங்கே கையில் குழந்தையுடன் நின்றிருந்தது ஜோவன்.

பாட்டிக்கு எது எப்படியோ தன் பேரப் பிள்ளைகள் என்றால் பாசம்தான்…..அதிலும் தாயில்லாத இந்த மகள் வழிப் பிள்ளைகளான  வர்ஷன் இன்பா என்றால் உயிர்தான்….. அதுவும் இன்பாவிடம் கூட சில நேரங்களில் கோப பட்டு கத்த வரும் அவருக்கு ……ஆனால் வர்ஷனிடம் எப்போதும் கண்ணே ராஜாதான்….. என்ன அவரைப் பொறுத்தவரை நன்றாக வாழ்வது என்பதற்கு ஒரே அர்த்தம் அதிக பணத்தோடும் அந்தஸ்தோடும் வாழ்வது என்பதுதான்….. பணம் இல்லாதவர்கள் அவரைப் பொறுத்தவரை அற்ப புழுக்கள்…..

அவர் தன் மொத்த வாழ்க்கையில், பொருளாதார ரீதியில் அவர் மதிக்கும் அளவு அந்தஸ்து இல்லாத ஒரு நபரை அங்கீரத்து இருக்கிறார் என்றால் அது விஜிலாவை மட்டும் தான்…அதற்கு காரணம் வர்ஷன் அவளை உயிராய் விரும்புகிறான்….அவன் சந்தோஷம் அதில் இருக்கிறது…..அதோடு அவள்தான் வர்ஷன் வீட்டில் வந்து வாழப் போகிறாள்….வர்ஷன் அவளது வீட்டு பொருளாதாரத்தை சார வேண்டும் என்ற அவசியம் இல்லை….அதோடு விஜிலாவின் புழுக்கூட்ட சொந்தங்களும் உறவை வெட்டிவிட்டதால் இவர்கள் பார்வையில் கூட படப்போவதில்லை….வர்ஷனின் பிள்ளைகள் கூட விஜிலாவின் பிறந்த வீட்டு படியை மிதிக்கப் போவதில்லை…. இப்படியெல்லாம் யோசித்து கூடவே களஞ்சியத்திற்கு இந்த திருமணத்தில் சற்று உடன்பாடு இல்லை என்பதால் விருப்பமாகவே விஜிலாவை வர்ஷன் மணப்பதை அங்கீகரித்தவர்….

ஆக இப்படி பல காரணங்களால் என்றாலும் தன்  கொள்கை கோட்பாடை அவர் விட்டுக் கொடுத்த ஒரே இடம் வர்ஷன் வாழ்வில் மட்டும் தான்….வர்ஷன் அவருக்கு அவ்வளவு முக்கியம்…..அதில் வர்ஷனுக்கு இப்படியாம் விஷயம் என கேட்கவும் அழுதடித்துக் கொண்டு வந்திருந்தார் அவர்….

வரும் போதே வர்ஷனை காப்பாற்றியது மித்ரனும் மனோவும்தான்  என அவருக்கு தெரியும்தான்….அதுவரை அவர் அதை கண்டு கொள்ள கூட இல்லைதான்….. ஏனெனில் இதுவும் அவரது சுபாவம்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.